எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மார்ச் 22 புதுச்சேரி திராவிடர் கழக மகளிரணி சார்பில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின்  நினைவு நாள் பொதுக்கூட்டம் 17.3.2018 அன்று மாலை 5 மணி அளவில் வில்லியனூர் தேரடி திடலில் நடைபெற்றது.

சமூகநீதி, மகளிர் உரிமை, மாநில உரிமை குறித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநில மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன் தலைமை தாங்கினார். தோழர் தமிழரசி சுந்தர் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். முன்னதாக மாலை 5 மணியளவில் கழக அமைப்பாளர் கே.குமார், பெரியார் பெருந்தொண்டர் காரை பெரியார் முரசு ஆகி யோர் கலை நிகழ்ச்சியுடன் கூடிய மந்திரமா? தந்திரமா? எனும் நிகழ்வை சிறப்பாக நடத்தி கூட்டத்தினரை ஈர்த்தனர். பொதுக்கூட்ட நிகழ்வுக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டல செயலாளர் கி.அறிவழகன் உள்ளிட்ட தமிழக பகுத் தறிவாளர் கழக தலைவர் மு.ந.நடராசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் இரஞ்சித்குமார், செயலாளர் நெ.நடராசன், ஆசிரியர் அணி அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன், பொதுக்குழு உறுப்பினர் டிஜிட்டல் லோ.பழனி, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி கழக தலைவர் சு.துளசிராமன், மகளிரணி துணைச் செயலாளர் விஜயா திராவிடச் செல்வன், மகளிரணி துணை அமைப்பாளர் வரலட்சுமி பழனி, மகளிர் பாசறை தலைவர் விமலா சிவராசன், மகளிர் பாசறை அமைப்பாளர் கல்பனா துளசிராமன், துணை அமைப்பாளர் சுமதிகுமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

ம.வீ.அருள்மொழி

அன்னை மணியமையாரின் படத்தை திறந்து வைத்து சமூகநீதி, மகளிர் உரிமை, மாநில உரிமை குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், தலைமைக் கழக சொற்பொழிவாளருமான ம.வீ.அருள் மொழி அவர்கள் பா.ஜ.க. அரசின் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள், மகளிர் உரிமை வேண்டி தலைவர் தந்தை பெரியாரின் போராட்டங்கள், அதனால் விளைந்த பலன்கள், பேச்சுரிமை, எழுத்துரிமை, சொத்துரிமை மற்றும் மாநில உரிமைகள் குறித்து பல்வேறு தகவல் களை அற்புதமாக எடுத்துக்கூறி உரையாற்றினார். இறுதியாக மகளிரணி செயலாளர் சரஸ்வதி தீனதயாளன் நன்றி நவின்றார்.

மூக்கை நீட்டிய காவிக் கூட்டம், நொறுக்கித் தள்ளிய தோழர்கள்

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு பேசிய போது 15 பேர் கொண்ட பா.ஜ.க. காவிக் கூட்டத்தினர் பாரத் மாதாகி ஜே என முழக்கமிட்டனர். உடன் தந்தை பெரியார் வாழ்க, புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க, புரட்சியாளர் லெனின் வாழ்க என விண்ணதிர ஒலி முழக்கங்களாக மகளிரணியினர் முழங்கினர். உடன் காவல்துறையினர் ஒழுங்குப்படுத்தினர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் மேனாள் அமைச்சர் இரா.விசுவநான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் சு.பாவாணன், திமுக இளைஞரணி பொறுப்பாளர் முகமது யூனூஸ், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு பொறுப் பாளர் வில்லியனூர் நகர திமுக தலைவர் சண்முகவேல், பெரியார் சிந்தனையாளர் கழக பொறுப்பாளர்கள், மே 17 இயக்க பொறுப்பாளர்கள் பெருந்திரளாக தோழர் களுடன் திரண்டு வந்து பாஜக எடுபிடிகளை எச்சரித்து விரட்டி அடித்தனர். பாஜகவினரின் செயலை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பொறுப் பாளர் வில்லியனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்து விடைபெற்றனர். இறுதி வரை மக்கள் திரள் கலையாமல் கூட்டம் நிறைவுபெற்றது. அனைத்து கட்சியினரையும் ஒன்று சேர்த்த காவி காலிகளுக்கு இது ஒரு பேரிடியாகவே இருக்கும் என் பது அய்யம் இல்லை. கழக கொடிகள் பிரதான சாலை கள் முழுதும் கட்டப்பட்டு மாநாடு போல் நடைபெற்றது.

கூட்டத்தில் வில்லியனூர் கொம்யூன் கழக தலைவர் கரு. சி.திராவிடச்செல்வன், புதுச்சேரி நகராட்சி கழகச் செயலாளர் த.கண்ணன், புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்புசாமி, அரியாங்குப்பம் கொம் யூன் கழக தலைவர் இரா.ஆதிநாராயணன், பெரியார் பெருந்தொண்டர் இருசாம்பாளையம் செ.இளங் கோவன், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், ஏம்பலம் கிளை தலைவர் ஏம்பலம் தெ.தமிழ்நிலவன், ஏம்பலம் தெ.குமார், வாணரப் பேட்டை பெ.ஆதிநாராயணன், வில்லியனூர் நகர கழகத் தலைவர் கு.உலகநாதன், பொறியாளர் சக்திவேல், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் கோ.மு.தமிழ்செல்வன், மூலைக்குளம் இரா.சாம்ப சிவம், த.க.செல்லமணி, சேதராப்பட்டு ஏ.சிவக்குமார், கலைமாமணி வி.பி.மாணிக்கம், வெங்கடேசன், ப.க. துணை செயலாளர் செ.கா.பாஷா, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டிணராசு, இளைஞரணி துணைத் தலைவர் இரா.சுந்தர், மகளிரணி தோழர்கள் கிருபாசினி இராசா, லலிதா இராசன், ஜெயந்தி. மாணவரணி தலைவர் சு.மணிபாரதி, செயலாளர் கோ.சூரியநாராயணன், வில்லியனூர் தமிழ்மணி, பெரியார் பிஞ்சுகள் ப.தமிழ்பிரியன், ப.இராகப்பிரியா, தி.இரா.பிரபாகரன், தி.இரா.அன்புச்செல்வன் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner