எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பூர், மார்ச் 22 -சமூகநீதி- மகளிர் உரிமை விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது.

தந்தை பெரியார் அவர்களின் இணையரும்,தன் உடல்நலத்தைப் பெரிதென எண்ணாமல் தந்தை பெரி யாரின் உடல்நலத்தைப் பேணிக் காத்த தியாகத் தலை வியுமான அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவுநாள் (மார்ச்-16) பொதுக்கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலை, டாக்டர்.அம்பேத்கர் நகரில் (உழவர் சந்தை பின்புறம்) திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 17.3.2018 அன்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர திராவிடர் கழகச் செயலாளர் பா.மா.கருணாகரன் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் இல.பாலகிருட்டிணன் அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் 50ஆவது வட்ட திமுக செயலாளர் மு.நந்தகோபால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இளைஞரணி மாநில துணைச் செயலாளர் துரைவளவன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட துணைத் தலைவர் நளினம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்கள் குறிப்பிட்டதாவது; சமூகநீதிக்கும், பெண் உரிமைக்கும், நம்மொழிக்கும், மீனவர்கள், உழவர்கள் ஆகியோருக்கு எதிராகவும், நம்முடைய விளைநிலங்களை எல்லாம் பாழாக்கி பாலைவனம் ஆக்கக்கூடிய வகையிலும் பல வகை போர்கள் பிஜேபி அரசால்  நம்மீது தொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை ஆளுகின்ற அரசு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிஜேபின் அடிமை யாக இருந்து வருகிறது. இதை தமிழ் மக்கள் அனை வரும் ஒன்றுபட்டு முறியடித்தாக வேண்டும். தந்தை பெரியார் வருணாசிரமத்தை ஒழிக்க பாடுபட்டவர் என்பது சிறு பிள்ளைக்குக் கூடத்தெரியும் ஆனால் அவரை சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி என்று எச்.ராஜா சொல்லுகிறார் என்றால் அவரை தமிழ்நாட்டிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும்! "நீட்" தேர்விலிருந்து தமி ழகத்திற்கு விலக்கு வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி டில்லியில் வருகின்ற ஏப்ரல் 3ஆம் தேதி யன்று  "சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவை" சார்பில் தமிழகத்திலுள்ள அனைத்துகட்சிகள், சமூக அமைப்பு களின் மாணவரணியினர் பங்கேற்கும் "நீட்" எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட் டத்தில் தமிழகத்திலுள்ள இளைஞர்கள்,மாணவர்கள் திரளாகக் கைகோக்க வேண்டும். என்று  உரையாற்றினார்.

திருப்பூர் மாநகர திமுக மகளிரணி துணை அமைப் பாளர் ஆர்.விஜயலட்சுமி, திருப்பூர் மாவட்ட மதிமுக துணை செயலாளர் வழக்குரைஞர் ச.தமயந்தி, திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், மாவட்ட அமைப் பாளர் வீ.சிவசாமி கோவை மண்டல இளைஞரணி செயலாளர் ச.மணிகண்டன் ஆகியோர் உரை நிகழ்த்தி னார்கள்.

நிகழ்வில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய"பெண் ஏன் அடிமையானாள்" என்ற புத்தகம் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டன. திருப்பூர் மாநகர திமுக மகளிரணி துணை அமைப்பாளர் மல்லிகா, திருப்பூர் மாவட்ட மதிமுக மாணவரணி அமைப்பாளர் சு.தாமோ தரன், நீலமலை மாவட்ட திராவிடர் கழக தலைவர் நாகேந்திரன், செயலாளர் வேணுகோபால், திருப்பூர் மாநகர திராவிடர் கழக துணை தலைவர் ஆட்டோ தங்கவேல், திராவிடர் கழக இளைஞரணியைச் சார்ந்த லெனின்குமார், தங்கமணி, மது, பகுத்தறிவாளர் கழகத் தைச் சார்ந்த சதாசிவம், திருப்பூர் பெரியார் புத்தக நிலை யப் பொறுப்பாளர் கரு.மைனர் மற்றும் அனைத்து கட்சி, இயக்கங்களைச் சார்ந்தோர், கரைத்தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த பெண்கள், இருபால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் கூட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவாக திருப்பூர் மாவட்ட திக மாணவரணி பொறுப்பாளர் பா.தமிழ்மணி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner