எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருஷ்ணகிரி: அன்னை மணியம்மையார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

கிருஷ்ணகிரி,மார்ச்26கிருஷ் ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் பேருந்து நிலையத் தில் திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைப் பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி தலைமை தாங்கினார். ஒன்றி யத் தலைவர் சீனிவாசன் வர வேற்றுப் பேசினார். மாவட்ட தலைவர் மு. துக்காராம், மாவட்ட இணைச் செயலாளர் வனவேந்தன், மாவட்ட மக ளிரணி தலைவர் செல்வி, ஒன்றிய அமைப்பாளர் செல் வம், மாவட்ட இளைஞரணித் தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி செய லாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்திராவிடர் கழ கப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தலைமை கழகச்சொற்பொழிவாளர்பழ. வெங்கடாசலம், மாநில பகுத் தறிவு கழக துணை தலைவர் அண்ணாசரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சமூக நீதி மகளிர் உரிமை மாநில உரிமை குறித்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, விடு தலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட துணைச் செயலாளர் செல்வம் ,பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் லூயிசுராசு, மண்டல இளைஞரணி செய லாளர் ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் இராசா, நகரத் தலைவர் மாரப்பன், நகரச் செயலாளர் மாணிக்கம், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சதிஷ் குமார் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் திராவிடர் கழக  ஒன்றிய செய லாளர் சிவ.மனோகர் நன்றி கூறி னார். 

கேதாரிமங்கலம்: அன்னை மணியம்மையார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

நாகை, மார்ச் 26 நாகை மாவட்டம் கேதாரிமங்கலத்தில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் பொதுக்கூட்டம் 17.3.2018 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது கூட்டத்திற்கு நாகை பொதுக் குழு உறுப்பினர் ந.கமலம் தலைமை ஏற்றார். மாவட்ட மகளிரணி தலைவர் இரா.பேபி முன்னிலையேற்றார். முன்னதாக அனைவரையும் வரவேற்று மாவட்டஇளைஞரணிதலை வர் சு.இராஜ்மோகன் உரையாற் றினார்.  கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் முத்து.கதிர வன் பல்வேறு செய்திகளை ஆதாரமாகக் கொண்டு நீண்ட தொரு உரை நிகழ்த்தினார். முன்னதாகமண்டலமாண வரணிசெயலாளர் நா.பொன் முடி, திருமருகல் ஒன்றிய தலைவர் பொன்.செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர் ந.கம லம், மாவட்ட அமைப்பாளர் இரச.முருகையன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக இளைஞரணி பொறுப்பாளர் செ.சண்முகம் நன்றி கூறினார். அனைத்துக் கட்சித் தோழர்களும் இயக்கப் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner