எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோடியக்கரை, மார்ச் 31-1938 ஆண்டு முதல் மொழிப்போர் வீரர் பெரியார் பெருந்தொண்டர் கோடியக்கரை வீர.சுப்பிரமணி யம் முதலாமாண்டு நினைவேந் தல் விழா, புதிய கல்வெட்டு திறப்பு விழா 24.3.2018 அன்று மாலையில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மா.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் கி.முருகையன் அனைவரையும் வரவேற்றார். திருத்துறைப் பூண்டி நகரத் தலைவர் தி. குணசேகரன், ஒன்றியத் தலை வர் சு.சித்தார்த்தன், பொதுக் குழு உறுப்பினர்கள் கோ.சு. மணி, சி.இராமசாமி, ந.இரா மையன், திமுக மாவட்ட மீன வரணி செயலாளர் கோடியக் கரை அஞ்சப்பன், கோடியக் காடு சதக்கத்துல்லா, பெரியார் களஞ்சியம் த.தமிழரசன் நினை வேந்தல் உரை நிகழ்த்தினர்.

இறுதியாக கழகத்தின் தலைமை நிலையப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல் வம், மா.மீனாட்சிசுந்தரம் ஆகி யோர் நிறைவுரையாற்றினர். திரளாக பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக வீர.சுப்பிரமணியம் மகன் ஜவ கர் நன்றியுரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner