எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரியலூர், ஏப். 10- -காவிரி மேலாண் மைவாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து ஆக் கப்பூர்வமாக தொடர் போராட்டங்கள் மூலமாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாநில அரசைக் கண்டித்தும், திருச்சியிலிருந்து கடலூர் வரை காவேரி உரிமை மீட்பு பயணம், 6 நாட்கள் நடைபயணம் செய்து விவசாயிகளையும், பொது மக் களையும் சந்தித்து வருகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அதன் மற்றொரு குழுவாக அரிய லூரில் இருந்து நேற்று மாலை தோழ மைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டமாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காவிரி உரிமை மீட்பு இரண்டாவது குழுவின் நடைப் பயணத்தை கண்டன பேருரையாற்றி நடைப்பயணத்தை துவக்கி வைத்தார்.

திமுக கழக துணைப்பொதுச் செயலாளர் கள் அய்.பெரியசாமி, வி.பி.துரைசாமி, திமுக கழக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி எம்.பி, கொள்கைபரப்பு செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தேசியகுழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வே. துரைமாணிக்கம், மனித நேயமக்கள் கட்சி மாநிலபொதுச் செயலாளர் ப. அப்துல்சமது,  ம.தி.மு.க. உயர் மட் டக் குழு உறுப்பினர்  கு.சின்னப்பா, காங்கிரஸ் கட்சி மாவட்டதலைவர் ஜி.ராஜேந்திரன், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஏ.எம்.ஷாஜஹான், சட்ட மன்ற உறுப்பினர்கள் அர.சக்கரபாணி, வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், குன்னம் சி.இராஜேந்திரன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுபா. சந்திரசேகர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.இராஜ்குமார், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அவைத் தலைவர் தங்க.துரைராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் நா.தனபால், திராவிடர் கழக பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக் குமார் மற்றும் கழகப் பொறுப்பா ளர்கள் திருச்சி ஆரோக்கியராஜ், லால்குடி ஆல்பர்ட், ஜெயங்கொண்டம் காமராஜ், சிந்தனைச் செல்வன், விடு தலை நீலமேகம் மற்றும் ஏராளமான கழகப் பொறுப்பாளர்களும் தோழர் களும் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner