எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டை

மிகுந்த எழுச்சியோடு நடத்துவோம்

கழகப் பொருளாளர் தலைமையில் கோவை கலந்துரையாடலில் தீர்மானம்

கணியூர், ஏப். 11 மே 6 ஆம் தேதி கணியூரில் நடைபெறும் மகளிர் மாநாடு தொடர்பாக நடைபெற்ற கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொரு ளாளர், பொதுச்செயலாளர், மகளிரணிப் பொறுப்பா ளர்கள் பங்கேற்றனர்.

மகளிர் மாநாடும்,

மண்டல கலந்தாய்வும்

காலத்தின் தேவை கருதி திராவிடர் கழகத் தலை வர்,தமிழர் தலைவர்,ஆசிரியர் அவர்கள் கழகத்தின் சார்பில் தொடர் மாநாடுகளை அறிவித்துள்ளார்.இதன் ஒரு பகுதியாக வருகின்ற மே 6 ஆம் தேதியன்று திருப்பூர் வருவாய் மாவட்டம்,தாராபுரம் கழக மாவட் டம் கணியூரில் "திராவிட மகளிர் எழுச்சி மாநாடு" நடை பெறவுள்ளது.இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டமாக கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டம் 07.04.2018,சனிக்கிழமை காலை 11 மணியளவில் கணியூர் ஓம் முருகன் திருமண மண்டபத்தில் துவங்கி நடைபெற்றது.

கழகப் பொருளாளர் உரை

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து சிறப்புரையாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் சு.பிறைநுதல் செல்வி குறிப்பிட்டதாவது:

வருகின்ற மே 6 அன்று கணியூரில் ஆசிரியர் அவர் களால் அறிவிக்கப்பட்டுள்ள "திராவிட மகளிர் எழுச்சி மாநாடு" சனாதனத்தை சாடு, சமதர்மத்தை நாடு என் னும் முழக்கத்தை பறைசாற்றுகிறது. பெண்களை இழிவு படுத்தக்கூடிய, அடிமைப்படுத்தக்கூடிய வருணாசிரமத் தையும், அதன் ஒரு பகுதியான மூடநம்பிக்கையையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதும், எல்லார்க்கும் எல்லாம், யாவருக்கும் யாதும் என்ற சமதர்மக் கொள் கையை ஒவ்வொருவரும் உருவாக்கவேண்டும் என்பதும் தான் இம்மாநாட்டு முழக்கத்தின் விளக்கமாகும். தமிழ் நாட்டிலுள்ளபல்கலைக் கழகங்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் போக்கினையும், வெளி மாநிலத்தவரை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கும் நியாயமற்ற செயலையும் மத்திய பிஜேபி அரசு செய்து வருகிறது.தமிழ்நாட்டிலுள்ள அரசு வெறும் பொம்மலாட்ட அரசாகவும், பிஜேபி அரசின் அடிமை யாகவும் இருக்கிறது.இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்திவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி நினைக்கிறது, ஆனால் தமிழ்நாடு தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண், தந்தை பெரியாரின் கொள்கைகள் உயிரோட்டமாக நடமாடுகின்ற மண், ஆதலால் இங்கு ஒருபோதும் மதவாதிகளின் எண் ணம் ஈடேறாது.

கணியூர் மாநாட்டின் மூலம் திராவிட நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை நாம் முறியடித்தாக வேண்டும். மாநாட்டு திட்டங்களை நாம் வீடு,வீடாகக் கொண்டு சேர்க்கவேண்டும். நம்மீது கட்டாயமாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் ஏன் புகுத்துகிறார்கள்? என்பதையும் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி வருகின்ற சூழ்நிலை பற்றியும் எடுத்துக்கூறி இம்மாநாட் டிற்கு வெகுமக்களை திரட்டவேண்டும்.கழகத்தோழர்கள் அணி,அணியாகச் சென்று மாநாட்டு பிரச்சாரத்தையும், நன்கொடை திரட்டும் பணியினையும் மேற்கொண்டு திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டை மாபெரும் வெற்றி யடையச் செய்யவேண்டும் என்று உரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர்

உரை

கூட்டத்தின் நோக்கத்தை எடுத்தியம்பிய கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் கூறியதாவது:

மத்தியில் பிஜேபி ஆட்சி வந்த பிறகு நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக பிரச்சினைகள் முளைத்து வருகிறது. மத்திய அரசின் தாக்குதலிலிருந்து தமிழகத்தை காக்கும் கவசமாகத் திகழ்வது தந்தைபெரியார் தத்துவம் ஒன்றே! தந்தை பெரியார் தத்துவத்தின் அடிப் படையில் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தமிழகத்தை ஒன்றிணைத்து அநீதிக்கு எதிரான போரை நடத்தி வருகிறார். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை களுக்காக தமிழர்கள் அனைவரும் ஒருமித்த குரலாய், ஒற்றுமையுடன் செயலாற்றி வருகிறார்கள் ! மக்களைப் பிரித்தாலும் சங்- பரிவார் கும்பல் தமிழர்களின் ஒற்றுமை காரணமாக தனிமைப்பட்டுள்ளது.சென்னை பொன்னேரி யில் இளைஞர் அணி மாநாடு,கும்பகோணத்தில் மாண வரணி மாநாடு,கணியூரில் மகளிர் அணி மாநாடு என்று தமிழர்தலைவர் அவர்கள் எழுச்சியோடு மாநாடுகளை அறிவித்து அறிவாயுதத்தை சுழற்றி வருகிறார்! நம்மு டைய அமைப்பின் கொள்கைகளை இந்த மாநாடுகளின் மூலமாக நாம் ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்! கணியூரில் மே 6 அன்று நடைபெறவுள்ள திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டை மிகப் பெரிய அளவில் நடத்தவேண்டும்! உள்ளூர் தொலைக்காட்சிகள், விளம்பரப் பலகைகள், சுவரெழுத்துக்கள் போன்ற பல முனைகளில் மாநாட்டை விளம்பரப்படுத்தியும், அனைத்து தரப்பு மக்களையும் கனிவுடன் அணுகி நன் கொடைகள் மிகப் பெற்று பேரெழுச்சியுடனும் கணியூர் மாநாட்டை நடத்த தோழர்கள் அனைவரும் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

உரையாற்றியோர்

திராவிடர் கழக மகளிரணிச் செயலாளர் அ.கலைச் செல்வி, மாநில அமைப்பாளர் தகடூர் ஜெ.தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறைச் செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் த.வீரமணி ஆகியோர் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து கழகத் தோழர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். தாராபுரம் கழக மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கோவை மண்டல தலைவர் ஆ.கருணாகரன், செயலாளர் ம.சந்திரசேகர், மண்டல மகளிரணிச் செயலாளர் ப.கலைச்செல்வி, தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் நா.சக்திவேல், நீலமலை மாவட்ட தலைவர் மு.நாகேந்திரன், செயலாளர் மு.வேணுகோபால், கோவை மாவட்ட தலைவர் சிற்றரசு,பொதுக்குழு உறுப் பினர் தி.பரமசிவம், மாரிமுத்து, திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கு.காமராஜ், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆ.பிரபாகரன், கோவை மண்டல இளை ஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், மாணவரணிச் செய லாளர் ரா.சி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூத்த தோழர்களுக்குசிறப்பு

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொள்  ளாச்சி தி.பரமசிவம், உடுமலை நகரத் தலைவர் போடி பட்டி க.காஞ்சிமலையன், செயலாளர் அ.ப.நடராசன், தாராபுரம் கழக மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன், காங்கயம் நகர பொறுப்பாளர் பெ.மணி வேல், நீலமலை மாவட்டச் செயலாளர் மு.வேணு கோபால், மாநில பக அமைப்பாளர் தகடூர் ஜெ  தமிழ்ச் செல்வி, மாநில பக துணைத் தலைவர் த.வீரமணி ஆகி யோருக்கு தாராபுரம் கழக மாவட்டம் சார்பாக கழகப் பொருளாளர் அவர்கள் பயனாடை அளித்து சிறப்பு செய்தார்.

பங்கேற்றோர்

தாராபுரம் கழக மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் சரசுவதி கிருஷ்ணன், தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் கவிஞர்.ச. ஆறுமுகம்,  கணியூர் தங்கவேல் (பக), பொதுக்குழு உறுப்பினர் நா.சாமிநாதன், தாராபுரம் கழக மாவட்ட அமைப்பாளர் கி.மயில்சாமி, துணைச் செயலாளர் க.சண்முகம், உடுமலை நகரத் தலைவர் போடிபட்டி க.காஞ்சிமலையன், செயலாளர் அ.ப.நடராசன், தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.மாயவன், செயலாளர் ம. இராமசாமி, மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் பழ.நாகராஜ், பொன்குமார் (பக), மடத்துக்குளம் ஒன்றிய இளை ஞரணித் தலைவர் க.அர்ச்சுனன், செயலாளர் முருகானந் தம், காரத்தொழுவு நாகராஜ், துங்காவி வெங்கிடு,பழனி மாவட்ட தலைவர் பெ.இரணியன், கோரிக்கடவு திரா விடச்செல்வன் (பக), கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, செயலாளர் வெற்றிச்செல்வன், கோவை மாநகர இளைஞரணிச் செயலாளர் வெ.பிரபாகரன், குறிச்சி தமிழ்முரசு, கோவை மாவட்ட மாணவரணியைச் சார்ந்த மதியரசு, சக்தி பழனியப்பன், கவுதமன், தமிழ்ச்செல்வன், தி.ச.யாழினி, புனிதா, த.க.யாழினி, கோவை மாவட்ட மகளிரணியைச் சார்ந்த  ஆலந்துறை செ.முத்துமணி, சுந்தராபுரம் கு.தேவிகா, திருப்பூர் மாநகர தலைவர் இல.பாலகிருஷ்ணன், செய லாளர் பா.மா.கருணாகரன், வெள்ளகோவில் பகுத்தறி வாளர் கழகத்தைச் சார்ந்த சு.ஜெகநாதன், கோமதி, புனிதா, பெரியார் பிஞ்சுகள்: செந்தமிழரசி, வெற்றிவேந் தன், தாராபுரம் கழக மாவட்ட துணைத் தலைவர் காங் கயம் முத்து.முருகேசன், காங்கயம் நகர பொறுப்பாளர் பெ.மணிவேலு, பொள்ளாச்சி செழியன், உடுமலை முருகேஸ் (பக), மடத்துக்குளம் சிவக்குமார் (தி.தொ.ச) உள்ளிட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

1) தாராபுரம் கழக மாவட்டம் கணியூரில் மே 6 ஆம் தேதி காலை முதல் இரவு வரை பெண்ணே! பெண்ணே! சனாதனத்தை சாடு...  சமதர்மத்தை நாடு... என்னும் முழக்கத்துடன் நடைபெறவுள்ள திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டை கழக மகளிரணி,திராவிட மகளிர் பாசறை சார்பாக மிக எழுச்சியோடு நடத்துவது, மாநாட் டினை விளக்கி சுவரெழுத்து, ப்ளக்ஸ், உள்ளூர் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் கோவை மண்டலம் முழுவதும் விளம்பரப் பணிகளை மேற்கொள் வது,கோவை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் மாநாடு தொடர்பான நிதி வசூல் உள்ளிட்ட அனைத்துப் பணி களுக்கும் நல்ல வண்ணம் ஒத்துழைப்பு வழங்குவது, திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டை கணியூரில் நடத்த அனுமதியளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றியினை தெரிவிப்பது, மாநாட்டில் பங்கேற்க மே 6 அன்று கணியூருக்கு வருகை தரும் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கோவை மண்டலம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப் பட்டது.

2) பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கும் முயற்சி யாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கருநாடகத்துக் காரரை துணைவேந்தராக நியமித்தும், சென்னை அம் பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனரை துணை வேந்தராக நியமனம் செய்தும் பச்சையான ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனப் போக்கை கடைப்பிடிக்கும் தமிழக ஆளுநருக்கு கூட்டத்தில் வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

3) காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைத்திடவேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்தாத மத்திய அரசிற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, மேலும் காலம் தாழ்த்தாமல் தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரின் கோரிக்கைக்கு மதிப்பளித்து காவிரி டெல்டா விவசாயிகளின் நீராதார உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி மேலாண்மை வாரி யத்தை உடனடியாக அமைத்திட வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கடலூர் பொதுக்குழுவில் அறிவித்தபடி கழக மகளிரணி,மகளிர் பாசறை சார்பில் மாவட்டத்திற்கு 100 பெரியார்பிஞ்சு சந்தாக்களை திரட்டி ஆசிரியர் அவர்களிடம் வழங்கு வதென முடிவு செய்யப்பட்டது.

5) கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கும் கணியூர் திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில் தோழர்கள் குடும்பம்,குடும்பமாக பங்கேற்பதெனவும், இயக்கம் சாராத பெண்களை பெருவாரியாக மாநாட்டில் பங் கேற்கச் செய்வதெனவும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தாராபுரம் கழக மாவட்ட மாணவரணி பொறுப்

பாளர் கி.இளந்தென்றல் நன்றி கூற கூட்டம் நிறை வடைந்தது.

 நன்கொடை அறிவித்தோர்

மே 6 கணியூர் "திராவிட மகளிர் எழுச்சி மாநாடு" தொடர்பாக கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தோழர்கள் அறிவித்த நன்கொடை விவரம்:

கோவை ப.கலைச்செல்வி ரூ. -10000, கணியூர் க.கிருஷ்ணன் ரூ. 10000, திருப்பூர் இரா.ஆறுமுகம் ரூ. 5000, கணியூர் கி.மயில்சாமி ரூ. 5000, கணியூர் பொன்குமார் ரூ. 5000, கோவை ம.சந்திரசேகர் ரூ. 5000, வெள்ளகோயில் ஜெகனாதன்- ரூ. 5000, திருப்பூர் இல.பாலகிருஷ்ணன்- ரூ. 3000, தகடூர் தமிழ்ச்செல்வி ரூ. 2000, கோவை திராவிடமணி ரூ. 2000, பொள்ளாச்சி தி. பரமசிவம் ரூ. 1000, காங்கேயம் முத்து.முருகேசன்- ரூ. 1000, பொள்ளாச்சி மாரிமுத்து ரூ.  1000, தாராபுரம் க.சண்முகம் ரூ. -1000, பழனி தனசேகர் ரூ. -1000, உடுமலை அ.ப நடராசன் ரூ. 1000, மடத்துக்குளம் ராமசாமி ரூ. -1000, ஈரோடு கு.காமராஜ் ரூ. -1000, ஆலந்துறை செ.முத்துமணி ரூ. -1000, நீலமலை ஆ.கருணாகரன் ரூ. -1000, காரத்தொழுவு நாகராஜன் ரூ. -1000, போடிபட்டி க.காஞ்சிமலையன்- ரூ. 5000, காங்கேயம் பெ.மணிவேல்  ரூ.  500.

 தமிழர் தலைவரிடம் வழங்கும் பொருள்கள்

மே 6இல் கணியூரில் நடைபெறும் திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்களால் எடைக்கு எடை வழங்கப்படவுள்ள பொருட்களின் பட்டியல் :

1) தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக- எடைக்கு எடை நாணயம்

2) தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் சோழமாதேவி நா.மாயவன் சார்பாக- எடைக்கு எடை அரிசி

3) தாராபுரம் கழக மாவட்ட துணைத் தலைவர் ஆசிரியர் முத்து.முருகேசன் சார்பாக -எடைக்கு எடை தேங்காய்

4) கணியூர் ஜோத்தம்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் சார்பாக- எடைக்கு எடை தேங்காய்

5) கழக பொதுக்குழு உறுப்பினர் பொள்ளாச்சி மாரிமுத்து சார்பாக- எடைக்கு எடை சூரியகாந்தி எண்ணெய்

6)தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் வழக் குரைஞர் நா.சக்திவேல் சார்பாக- எடைக்கு எடை வெல்லம்

7) நீலமலை மாவட்டம் சார்பாக- எடைக்கு எடை தேயிலை தூள்

8) மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் பழ.நாகராஜ் சார்பாக- எடைக்கு எடை பால்

9) கழக ஆதரவாளர் கணியூர் ஆபிரகாம் ராஜா சார்பாக- எடைக்கு எடை வாழைப்பழம்

10) பழனி மாவட்ட கழக மகளிரணி சார்பாக- எடைக்கு எடை வெள்ளரிக்காய்

11) பழனி மாவட்ட கழக தலைவர் பெ.இரணியன் சார்பாக- எடைக்கு எடை மாங்காய்

12) தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் கணியூர் ம. இராமசாமி சார்பாக- எடைக்கு எடை கொய்யாப்பழம்

மேற்கண்ட அறிவிப்புகள் கழகத் தோழர்களால் கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner