எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12.4.2018 அன்று குவைத்தில் இயங்கி வரும் தந்தை பெரியார் நூலகம் ஒருங்கிணைத்த "கருப்பும் -சிவப்பும்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் வெகு சிறப் பாக நடைபெற்றது. தந்தை பெரியார் நூலக காப் பாளர் செல்லப் பெருமாள் தலை மையிலும் திராவிடர் கழக தோழர் சித்தார்த் வரவேற்புரை நிகழ்த்த விழுப்புரம் மாவட்ட சிறுபான்மை பிரிவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை செயலாளர் மதீனுல் லாஹ், விடுதலை சிறுத்தைகள் கட்சி குவைத் மண்டலம் முதன் மைச் செயலாளர் அன்பரசன் ஆகி யோர் முன்னிலையேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா சிறப் புரையாற்றினார்.

திமிஞிகி தலைவர் வல்லம் அப்பாஸ், தமி ழோசை கவிஞர் மன்றம் கவுரவ தலைவர் அல் அவ்தா சாதிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி குவைத் மண்டலச் செயலாளர் மகிழன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். திருச்சி அமா னுல்லா நன்றி கூறினார். நெறியாளன் ஜிமிஷிகி ரஹ்மத்துல்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

பெரியாரின் சிந்தனைகளும் தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகளும் ஆளும் மத்திய அரசின் பாசிச பயங்கரவாதங்கள் குறித்தும் வீரியமிக்க உரைகளோடு நிறைவு பெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner