எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அறந்தாங்கி, ஏப். 19- அறந்தாங்கி கழக மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 8.4.2018 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

மண்டலத் தலைவர் பெ. இராவணன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து முன் னிலை ஏற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் அ.தங்கராசு, மண்டல இளை ஞரணி செயலாளர் க.வீரையா, மாவட்ட இளைஞரணி செய லாளர் இரா.யோகராசு, ஒன்றிய செயலாளர் குழ.சந்திரகுமார், மாநில மாணவரணி துணைச் செயலாளர் இரா.குமார், அறந்தை நகரச் செயலாளர் சுப்பிரமணி யன், பெரியார் பெருந்தொண்டர் மு.இரணியன், மகளிரணி வீ.மாலதி, பெரியார் பிஞ்சுகள் பா.தமிழ்மொழி, பா.தமிழ் மணி, மா.வீ.செம்மொழி, மா. வீ.செம்மகிழ்நன் மற்றும் பலர் வருகை தந்திருந்தனர். தீர்மானங்கள்

தீர்மானம் 1: ஆயக்குடிக்கு பக்கம் புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் ஏழரை அடி உயரம் கம்பீரமாக அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை 19.3.2018 அன்று இரவு உடைத்த சமூகவிரோதியை கண்டித்து ஊர் பொதுமக்கள் அரசியல், சமுதாய இயக்கங்கள் அதன் தலைவர் அவர்களுக்கும், தொண் டர்களுக்கும் தாய்மார்களுக்கும் ஆங்காங்கு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்த மாணவச் செல்வங்களுக்கும் கண்டனக் குரல் ஒலித்த பெரும் மதிப்பு வாய்ந்த தலைவர்களுக்கும் துரித நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த தமிழர் தலைவர் அவர்களுக்கும் நன்றி யையும் சிரம்தாழ்ந்த வணக்கத் தையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலா ளர் க.வீரையா, மண்டல மாணவரணி செயலாளர் ப.சதிஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.யோகராசு இவர்களுக்கு பொறுப்புகளை அறிவிப்பு செய்த தமிழர் தலை வர் கழகத் தலைவர் அவர்க ளுக்கு பாராட்டும் மிகுந்த நன்றியினையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. இத னைத் தொடர்ந்து நகரச் செய லாளராக செ.சுப்பிரமணியன் நியமிக்கப்படுகிறார். மேற்கண்ட பொறுப்பாளர் கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும் அவர்களுக்கு பாராட்டும் தெரி விக்கப்பட்டது.

தீர்மானம் 3: தந்தை பெரி யார், தமிழர் தலைவர், அன்னை மணியம்மையார் ஆகியோர் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்துதல். நீட் தேர்வு வேண் டாம் என்றும், காவேரி மேலாண்மை குழு அமைத்தல் வேண்டும், ஆளுநர் பன்வாரி லார் செயல்பாடுகள் தமிழரின் விரோதப்போக்கு இவைகளை விளக்கப் பொதுக்கூட்டங்கள் மாவட்ட அளவில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக மாவட்ட இளை ஞரணித் தலைவர் ப.மகாராசா வரவேற்புரையும், கருத்துரை யும் ஆற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner