எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஏப். 20- திருச்சி பெரி யார் ஆசிரியர் பயிற்சி நிறுவ னத்தில் 2002-2004 ஆம் ஆண்டு பயின்ற  முன்னாள் மாணவ ஆசிரியர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்.15 அன்று நடை பெற்றது. இதில் 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கலந் துரையாடல் கூட்டத்திற்கு வீ.இளங்குமரன், அரியலூர் அன்பரசன், கடலூர் கிள்ளி வளவன், செந்துறை வெங்க டேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் (ஆசிரியர் பயிற்சி கல்லூரி கள்) இரா.கலைச்செல்வன் பேசும் போது, கடந்த மார்ச் 25 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியரணி, பகுத்த றிவு எழுத்தாளர் மன்ற பொறுப் பாளர்களின் மாநில கலந்து ரையாடல கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் தலைமை யில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் தமிழர் தலைவர் அறிவுரையு டனும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்  வழிகாட்டுத லின் படியும், அனைத்து மாவட்டங்களிலும் பகுத்த றிவு ஆசிரியரணி அமைப்பது குறித்தும், இன்றைய கால கட்டத்தில் கல்வி, காவிமய மாதல், நீட் தேர்வு, பல் கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவர்களை துணை வேந்தர்களாக தமிழக ஆளுந ரால் நியமிக்கப்படுதல் போன் றவைகளை தடுக்க முடியும். இதைப்பற்றி மக்களிடையே யும், மாணவர்களிடையேயும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த பகுத்தறிவு ஆசிரி யரணியால் மட்டும்தான் முடி யும் என்று கூறினார். நிறைவாக ஆசிரியர் வீ. இளங்குமரன் நன்றி கூறிட கூட்டம் இனிதே முடிந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner