எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தையில் திராவிட மாணவர் கழகப் பவள விழா - மாநில மாநாடு

பெரியாரை சுவாசிப்போம்! பெருவாழ்வு பெறுவோம் - முழக்கத்தோடு!

மாவட்டம் தோறும் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடலில் தீர்மானம்

திருப்பூர்

குடந்தை மாணவர் மாநாட்டிற்கு திரளான மாணவர்களை திரட்டுவதென முடிவு செய்து மாணவர் கலந்துரையா டலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திராவிட மாணவர் கழக கூட்டம் வருகின்ற சூலை 8ஆம் தேதியன்று கும்பகோணத்தில் கழகத் தலைவர் அவர்களால் பெரியாரை சுவாசிப்போம்! பெருவாழ்வு  பெறுவோம்! என்ற முழக் கத்தோடு அறிவிக்கப்பட்டுள்ள திரா விடர் மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு பெருந்திரளான மாணவர்களை அணி திரட்டும் நோக் கோடு கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் கழக மாவட்ட வாரியாக கலந்துரையாடல் கூட்டங்கள் அறிவிக் கப்பட்டு நடைபெற்று வருவதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட் டம் 8.4.2018 அன்று காலை 11 மணிய ளவில் திருப்பூர் வெள்ளியங்காடு யாழ் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தின் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ஆ.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் கழக தலைவர் கு.திலீபன் அனைவரையும் வரவேற்றார். மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் யாழ்.திலீபன் முன் னிலை வகித்தார்.

கழக அமைப்பாளர் உரை

நிகழ்வில் எழுச்சியோடு பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த் திய கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தெரிவித்ததாவது; தந்தை பெரியாரின் சிலை அகற்றப்படும் என்று  சொன்ன எச்.ராஜாவுக்கு எவ்வளவு எதிர்ப்பு ஏற் பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்! தமிழகம் முழுவதும் கண்டனப் போராட் டங்கள் வலுத்ததோடு, நாடாளுமன்றத் தில் தந்தை பெரியார் வாழ்க! என்று முழக்கம், தமிழ்நாட்டில் பெண்கள் கல்வியுரிமை பெற தந்தை பெரியார் தான் காரணம் என்ற சிபிஅய்(எம்) மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்களின் பதிவு போன்ற எழுச்சியான நிகழ்வுகள் ஏற்பட்டது. அனைத்து ஊடகங்களும் பெரியாரை பெருமைப்படுத்தியது. இந்த எழுச்சி யின் விளைவு பிரதமரையே பேசவைத் தது. நம்முடைய இயக்கத்தில் கண் ணுக்கு தெரிந்த பெரியார் தொண்டர்கள், கண்ணுக்குத் தெரியாத பெரியார் தொண் டர்கள் என்று கழக உறுப்பினர்கள் இரு வகையானோர் உண்டு! என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கூற்றை இந்த பேரெழுச்சி நிரூபித்திருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 45 ஆண்டுகளாகியும் பேசப்படுகிறார் என் றால் ஏன்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்தலைவர் அவர்கள் தந்தை பெரியாரை உலகமயப்படுத்தி யுள்ளதன் பிரதிபலிப்பு தான் இது! ஆகவே நாம் ஒவ்வொருவரும் தமிழர் தலைவருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளோம்! தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ் வொரு பிரச்சினைக்கும் நம்முடைய தலைவர் அவர்கள் தீர்வாக விளங்கு கிறார்.

தமிழர் தலைவர் அவர்கள் பல மாநாடுகளை அறிவித்துள்ளார்கள், ஒவ்வொரு மாநாட்டிற்கும் தனித்தனி முழக்கங்களை வழங்கியுள்ளார்கள், அம்மாநாடுகளில் மிகச் சிறப்பான ஏற் பாடுகளோடு தயாராகி வருகின்ற மாநாடு தான் சூலை 8 அன்று குடந்தையில் மாணவர் பட்டாளங்கள் அணிவகுக்க விருக்கின்ற "திராவிட மாணவர் கழகப் பவள விழா-மாநில மாநாடு". இம்மா நாடு எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஓவி யம், கவிதை போன்ற தனித்தன்மைகளை உடைய மாணவர்களை ஒருங்கிணைத்து, மாணவர்கள் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தும் ஒப்பற்ற களமாக அமையவிருக்கிறது. எனவே மாநாட்டுப் பணிகளை மாவட்டந்தோறும் கழக மாணவரணியினர் சிறப்பாக முன்னெடுத்துச் சென்று, பெருந் திரளான மாணவர்களை மாநாட்டிற்கு அழைத்து வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பயனாடை

கழக அமைப்பாளர் அவர்களுக்கு திருப்பூர் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி பயனாடை அளித்து சிறப்பு செய்தார். மாநாட்டு நிதி

திருப்பூர் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி ரூ. 2,500, திருப்பூர் மாநகரத் தலைவர் இல.பாலகிருஷ்ணன் ரூ. 2,000, திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் நளினம்.நாகராசு ரூ. 1,000 ஆக திருப்பூர் மாவட்டம் சார்பில் குடந்தை மாநாட்டு முதற்கட்ட நிதியாக ரூ. 5,500 கழக அமைப்பாளரிடம் வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

கழக அமைப்புச் செயலாளர் த.சண் முகம், கோவை மண்டல மாணவர் கழக செயலாளர் ரா.சி.பிரபாகரன், கோவை மண்டல இளைஞரணிச் செய லாளர் ச.மணிகண்டன், திருப்பூர் மாந கர கழகச் செயலாளர் பா.மா.கருணா கரன், கழக தோழர் வி.வேலுச்சாமி, திருப்பூர் மாவட்ட மாணவர் கழகத் தோழர்கள் வே.வீரக்குமார், கு.கபிலன், மாணவர் கழகத் தோழர் பொறியாளர் உரத்தநாடு.இரா.அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்:

குடந்தை மாநாட்டிற்கு திருப்பூர் மாவட்டம் சார்பில் 300 மாணவர்களுக்கு மேல் தனி வாகனங்களில் சென்று பங் கேற்பது, மாநாட்டை விளக்கி மாவட் டப் பகுதிகளில் விளம்பரப்பணிகளை மேற்கொள்வது, தமிழக மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறிக்கும் மத்திய,மாநில அரசுகளின் தமிழின விரோதப் போக்கை எதிர்த்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் போராட்டங்களில் மாணவர்கள் திரளா கப் பங்கேற்பது, டாக்டர்.அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மத்திய பிஜேபி அரசின் பார்ப்பனத் தன்மையை வெளிக்காட்டும் விதமாக ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனரை துணைவேந்தராகவும், சென்னை கவின் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்ட ஒருவரை பேராசிரியராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கருநாடக மாநிலத் தைச் சார்ந்தவரை துணைவேந்தராகவும் நியமித்து தொடர்ந்து தமிழர் விரோதப் போக்கை வெளிப்படுத்தி வரும் மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும், மாநில உரிமை நசுக்கப்படும்  எந்தப் பிரச்சினையிலும் மாநில உரிமையை வலியுறுத்தாமல் தொடர்ந்து மத்திய அரசுக்கு சாதகமாகவே செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும் வன்மையான கண்டனங்களை தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது.

திருப்பூர் மாவட்ட கழக மாணவர ணித் தலைவர் வே.தமிழ்ச்செல்வம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

விழுப்புரம்

15.4.2018 அன்று மாலை 6 மணிக்கு விழுப்புரம், திண்டிவனம், கல்லக் குறிச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் விழுப் புரத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.

மணடல திராவிட மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் த.யாழ்திலீபன் தலைமையேற்று கருத் துரை வழங்கினார்.

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள வரவேற்பையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய் வறியா உழைப்பையும் அதனால் ஏற் பட்டுள்ள சாதனைகளையும் எடுத்துக் காட்டி, திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார்.

மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல திராவிடர் கழகத் தலைவர் க.மு.தாஸ், மண்டல செயலாளர் குழ.செல்வராசு, திண்டிவனம் மாவட்ட தலைவர் மு.கந்தசாமி, மாவட்ட செயலாளர் நவா.ஏழுமலை, விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோபன்னா, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், பெரியார் பெருந்தொண்டர்கள், சென்னகுனம் வி.சுந்தரமூர்த்தி, விழுப்புரம் கொ.பூங்கன், திருக்கோவிலூர் மு.சேகர், சே.சரவணன், திண்டிவனம் செ.பரந் தாமன், ஏ.எழிலரசு, அனந்தமங்கலம் பச்சையப்பன், கோலியனூர் இராம லிங்கம், மணம்பூண்டி நா.ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் பழனிவேல், திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர் தா. இளம்பரிதி, செயலாளர் மு.இரமேசு, விழுப்புரம் மாவட்ட மாணவர் கழக தலைவர் ச.எடிசன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் கோ.இலக்கியா, பாரதி, திண்டிவனம் மாவட்ட மாணவர் கழக தலைவர் மாரிமுத்து, செயலாளர் விசயன், கள்ளக்குறிச்சி மாவட்ட மாண வர் கழக அமைப்பாளர் எம்.முனியன், சிறுவல் மாணவர் கழக தலைவர் அ.விக்னேசுவரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்.

பெரியார் பெருந்தொண்டர் கண் ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக் கப்பட்டது. மூன்று மாவட்டங்களின் சார்பில் 500 மாணவர்களை குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில பவள விழா மாநாட்டில் பங் கேற்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு நடைகொடை வழங்கியோர்

குழ.செல்வராசு (மண்டல செயலா ளர்) ரூ. 1,000, ம.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்) ரூ. 1,000, நவா.ஏழுமலை (திண்டிவனம் மாவட்ட செயலாளர்) ரூ. 1,000, விழுப்புரம் பழனிவேல் (மாவட்ட இளைஞரணி தலைவர்) ரூ. 1,000, ச.எடிசன் (விழுப்புரம் மாவட்ட மாணவர் கழக தலைவர்) ரூ. 500, கோ.இலக்கியா (விழுப்புரம் மாவட்ட மாணவர் கழக செயலாளர்) ரூ. 200, சே.சரவணன் ரூ. 100.

நெமிலி, வேலூர்

வேலூர் அரக்கோணம் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 21.4.2018 அன்று காலை 11 மணிக்கு நெமிலி இராசேசுவரி திரு மண மண்டபத்தில் எழுச்சியோடு நடை பெற்றது. காஞ்சி மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் அ.அர்சுனன் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.

மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப் பாண்டி யன், மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் த.யாழ்திலிபன், வேலூர் மண்டல திராவிடர் கழக தலை வர் வி.சடகோபன், காஞ்சி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பு.எல்லப் பன், வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் இளங்கோவன், அரக்கோ ணம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.லோகநாதன், மாவட்ட செயலாளர் செ.கோபி, மாவட்ட அமைப்பாளர் செ.சீவன்தாசு, பொதுக்குழு உறுப் பினர்கள் சூரியக்குமார், நாகம்மாள், பெரியார் பெருந்தொண்டர்கள் செல்வ நாயகம் தாண்டவமூர்த்தி, ஆற்காடு கழக தலைவர் விநாயகம், மகேந்திர வாடி தீனதயாளன் (மாவட்ட துணைச் செயலாளர்), அரக்கோணம் மாவட்ட ப.க. தலைவர் ஆசிரியர் சிவஜோதி, ஆசிரியர் இராவணன், வேலூர் மாவட்ட ப.க. தலைவர் அன்பரசன், மகளிர் பாசறை தலைவர் தேன்மொழி, லதா, குடியாத்தம் இராமன், சின்ன துரை, பெரம்பேரி சங்கர், அரக்கோணம் மாவட்ட மாணவர் கழக செயலாளர் லோ.மணியம்மை, லோ.அறிவரசி, மண்டல இளைஞரணி செயலாளர் தி.இளந்திரையன், மாணவர் கழக தலைவர் சந்தோசு, வேலூர் மாவட்ட மாணவர் கழக செயலாளர் ச.செந்தமிழ் இன்மொழி, ஆவடி நகர இளைஞரணி அமைப்பாளர் கலைமணி, வேலூர் மண்டல மாணவர் கழக செயலாளர் தே.அ.ஓவியா ஆகியோர் கருத்துரையாற் றினர்.

மணநாள் கண்ட வேலூர் மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் - லதா வாழ் வினையினருக்கு வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.

திராவிடர் கழக மாநில அமைப்பா ளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். நிறைவாக கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்கொடை வழங்கியோர்

கழகப் பேச்சாளர் பேரப்பேரி சங்கர் ரூ. 1000, நெமிலி ஒன்றிய தலைவர் சங்கர் ரூ. 1000, மாவட்ட மாணவர் கழக தலைவர் லோ.மணியம்மை ரூ. 500, லோ.அறிவரசி ரூ. 500/

அரக்கோணம் மாவட்ட திராவிடர் மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர்: சூ.வீரமணி, மாவட்ட துணைத் தலைவர்: பி.யோக் கேசு, மாவட்ட செயலாளர்: லோ.மணி யம்மை, மாவட்ட துணைச் செயலா ளர்: நடராசன், மாவட்ட அமைப்பாளர்: எஸ்.சரத்குமார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner