எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத்தூர் கழக மாவட்டங்கள் சார்பில் 1000 உண்மை" இதழ் சந்தாக்கள் வழங்க முடிவு

காவேரிபட்டணம், ஏப். 28 கிருட்டினகிரி மாவட் டம் காவேரிபட்டணத்தில் தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 15.4.2018 அன்று மாலை 5 மணி யளவில் காந்தி நூற்றாண்டு நினைவு மண் டபத்தில் கூட்டம் நடை பெற்றது. திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  செ.சிவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந் திரையன் தலைமை விதித்துப் பேசினார். கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி செய லாளர் வே.புகழேந்தி   அனைவரையும் வர வேற்றுப் பேசினார். கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் கோ திராவிடமணி, தருமபுரி மாவட்டத் தலைவர் இ. மாதன், மண்டலத் தலைவர் பெ.மதிமணியன், தருமபுரி மண்டல செயலாளர் கரு.பாலன,  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் அ.சுரேஷ், கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.கதிரவன், காவேரிப்பட்டனம் ஒன்றிய தலைவர் சி.சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் சிவ. மனோகர் ஆகியோர் முன் னிலை வகித்துப் பேசினர்.   திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை. இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பு செயலாளர் தருமபுரி ஊம.ஜெயராமன், திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் தகடூர். தமிழச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தருமபுரிமண்டல இளைஞரணி செய லாளர் வ.ஆறுமுகம் கூட்டத்தை ஒருங்கி ணைத்து தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு.

தீர்மானம் 1: இரங்கல்: தருமபுரி மேனாள் மாவட்ட  தலைவர் மனோகரன் அவர்களின் வாழ்விணையர் பத்மாவதி, இராமியாம்பட்டி பெரியார் பெருந்தொண்டர் ஆர்.வி.சாமிக் கண்ணு, காவேரிப்பட்டணம் ஒன்றிய துணைச் செயலாளர் புலியாண்டூர் சி.இராசா அவர்களின் வாழ்விணையர் இரா.காளி யம்மாள், கிருட்டினகிரி ஒன்றிய கழக அமைப்பாளர்  செ.பத்மநாபன், காவேரிப் பட்டணம் பொதுக்குழு உறுப்பினர் காவேரிப் பட்டணம் தா.சுப்பிரமணியம் அவர்களின் மருமகன் கணேசன் ஆகியோர் மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.           தீர்மானம் 2: விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநில இளைஞரணி கலந்துரையா டல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ஒருமனதாக ஏற்று செயல் படுத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.                  தீர்மானம் 3: விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநில இளைஞரணி கலந்துரையா டல் கூட்டத்தின் முடிவின்படி  தருமபுரி மண்டலத்திற்கு உள்பட்ட தருமபுரி கிருட் டினகிரி, திருப்பத்தூர்  கழக மாவட்டங்கள் சார்பில் 1000  உண்மை சந்தாக்களை திரட்டி வழங்குவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: தருமபுரி மண்டல இளை ஞரணி சார்பில் திருப்பத்தூர் கழக மாவட்டம் மத்தூரில் திக்கெட்டும் பாய்வோம் - திரா விடத்தைக் காப்போம் எனும் முழுக்கத்துடன் இளைஞர் எழுச்சி மாநாட்டை  மிக எழுச்சி யுடன் நடத்துவது எனவும், மாநாட்டிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தேதி ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தீர்மானம் 5: காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க உச்சி நீதிமன்றம் உத்தரவிட் டும் வாரியம் அமைக்காமல் தீர்ப்பை அவ மதித்தும், தமிழர்களின் ஒட்டுமொத்த கோரிக் கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராடி வரும் நிலை யில். அதையும் பொருட்படுத்தாமல் தமிழர் களை வஞ்சித்து வரும் மத்திய அரசை வன் மையாகக் கண்டிப்பதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என இக் கூட்டம் வலி யுறுத்துகிறது. தீர்மானம் 6: திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் தருமபுரி மண்டலத்திற்கு உள் பட்ட அனைத்து மாவட்டங்களிலும் கழகக் கொள்கை விளக்கம் மற்றும் அவ்வபோது எற்படும் முக்கியப் பிரச்சினைகளின் அடிப் படையில்  தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியவர்கள்

தருமபுரி மாவட்ட இளைஞரணி தலை வர் சி.பகத்சிங், மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் வே.பெரியண்ணன் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஆர். கிருட் டினன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மு.அர்ச்சுனன்,

திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கு.தமிழ்குடிமகன், மத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் சே.இராமசெயம்,கோ.குமரேசன்,ம.இளைய வேந்தன், ச.அஜீத், எம்.ஆர்.ஆர். மாவட்டத் தலைவர் சின்னராஜ், பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் ஆசிரியர் ம. சுந்தரம், புலியாண்டூர் இரா.மணிமேகலை, ச.சித்ரா, அகரம் நாத்திகம் நா.சதீஷ்குமார், காவேரிப்பட்ட ணம் ஒன்றிய அமைப்பாளர் பெ. செல்வம்,  கிருட்டினகிரி மாவட்ட ப.க. அமைப்பாளர் மு.வேடியப்பன், திருப்பத்தூர் மாவட்ட ப.க.துணைத் தலைவர் ஆசிரியர் இரு. கிருட்டினன், சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் செல்வம், கிருட் டினகிரி நகர செயலாளர்  கா.மாணிக்கம், நகர அமைப்பாளர் ஆட்டோ அ.கோ.இராசா, நகர ப.க. தலைவர் எல்.அய்.சி. சி.சுப்பிரமணி, காவேரிப்பட்டணம் ஒன்றிய துணை செய லாளர் சி. இராஜா, தருமபுரி மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் கிருட்டினன், தருமபுரி மாவட்ட கழக அமைப்பாளர் பெ.கோவிந்தராஜி, ஆர்.கிருட்டினன்,  திரு வணப்பட்டி மு. இரவீந்திரன், மா.முனி யப்பன், கு.வினோத்குமார், மத்தூர் இரா இராகுல்,  ச. உலகுநாதன் உள்பட கழக தோழர்கள் சிறப்பாக கலந்துக் கொண்டனர். இறுதியாக கிருட்டினகிரி மாவட்ட இளை ஞரணி தலைவர் இல.ஆறுமுகம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner