எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8ஆம் பக்கத் தொடர்ச்சி

கிருஷ்ணன் கீதை (ரூ.80), ந.சி.கந்தையாபிள்ளை எழுதிய பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் நூல் (ரூ.30), டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய நூல் சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம் (ரூ.10) ஆகிய மூன்று நூல்களின் மொத்த நன்கொடை மதிப்பு ரூ.120, சிறப்புக்கூட்டத்தில் ரூ.20 தள்ளுபடி செய்யப் பட்டு ரூ.100க்கு வழங்கப்பட்டது.

நூல்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடமிருந்து ஏராளமானவர்கள் வரிசையாக சென்று நூல்களைப் பெருமகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்கள்.

மேனாள் நீதிபதி பரஞ்சோதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, பொதுக் குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த் தினி,  சி.வெற்றிசெல்வி, பெரியார் களம் இறைவி,  பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன், த.கு.திவாகரன், கு.சோமசுந்தரம், கொரட்டூர் பன்னீர்செல்வம், சேகர், மாணவர் கழகம் பெ.செ.தொண்டறம், க.கனிமொழி, ரோட்டரி சங்கத் தலைவர் சுதாகர் சுப்பிரமணியம் உள்பட ஏராளமானவர்கள் நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

கலந்து கொண்டவர்கள்

கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா, தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் செயலாளர் மா.செல்வராசு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கோ.வீ. ராகவன், இராமச்சந்திரன், சி.செங்குட்டுவன், மஞ்சநாதன், தாமோதரன், தமிழ்செல்வம், பெரியார் மாணாக்கன்,  சைதை வாசுதேவன், எத்திராஜ், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் சுரேஷ், கலையரசன்  உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner