எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, மே 23- காரைக்குடி யில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத் தின் வன்கொடுமையிலிருந்து எஸ்.சி,எஸ்.டி,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் ஆர்ப் பாட்டம் அய்ந்து விளக்கில் நடைபெற்றது.

வி.சி.க.வடக்கு மாவட்ட செயலாளர் சங்கு.உதயகுமார் தலைமை வகித்தார். மாநில இ.அ.து.செயலாளர் சி.சு. இளைய கவுதமன் முன்னிலை வகித்தார். தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் கே.எஸ். எம்.மணிமுத்து, இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.குண சேகரன், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் புலவர் சே.செவந் தியப்பன், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டி யப்பன், திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, ஏ.அய்.டி.யூ.சி.மாநிலக்குழு உறுப்பினர் பழ.ராமச்சந்திரன், தி.மு.க.நகர செயலாளர் நா. குணசேகரன், வி.சி.க. மாநில துணை பொதுச் செயலாளர் வெ.கனியமுதன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த் தினர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவி டர் கழகத்தின் சார்பில் மண் டல தலைவர் சாமி.திராவிட மணி, மாவட்ட துணை செய லாளர் இ.ப.பழனிவேலு, மேனாள் மாவட்ட ப.க. தலை வர் ப.சுந்தரம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு ஆகியோர் பங்கேற் றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner