எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விராலிமலை, ஜூன் 8 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தந்தை பெரியாரின் 139-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு விராலிமலை ஒன்றியத் தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெ.அன்பரசன் அனைவரையும் வரவேற்றார்.

மண்டலத் தலைவர் பெ.இராவணன் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தொகுதி துணைச் செயலாளர் இரா.செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்பு அழைப்பாள ராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இலுப்பூர் மாணவர் கழகச் செயலாளர் நன்றி கூறினார். 

ஜூலை 8 அன்று குடந்தையில் நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு வசூல் பணி துவங்கியது. வசூல் பணியில் மாவட்ட தலைவர் கு.கவுதமன் தலைமையில் கழகத் தோழர்கள் ஈடுபட்டனர். பெமினா ஃபேஷன் உரிமையாளர் மொகமட் இத்ரீஸ் அவர்கள் ரூ.2000 நன்கொடை வழங்கினார். வசூல் பணியில் மாவட்ட துணை செயலாளர் வழக்குரைஞர் கு.நிம்மதி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி குருசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவகுமார், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அரவிந்தன், மாவட்ட மாணவர் கழக துணை அமைப்பாளர் பகத், மாணவர் கழக தினேஷ், நகர தலைவர் வழக்குரைஞர் பீ.ரமேஷ், நகர செயலாளர் ந.காமராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.திராவிட கார்த்திக் மற்றும் தோழர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner