எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாழ்த்தப்பட்டோர் என்பதால் கோவிலுக்குள் நுழைய விடாமல்

தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 16  இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜஸ் தானில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல்  தடுக்கப் பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் 7.6.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் விவரம் வருமாறு:

திருப்பூர்

இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜஸ்தானில் கோவி லுக்குள் நுழைய தடுக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பில் 7.6.2018 அன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.திருப்பூர் மாநகர தலை வர் இல.பாலகிருட்டிணன் அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் மாநகர துணைத் தலைவர் ஆட்டோ தங்கவேல், செயலாளர் தென்னூர் முத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.துரைமுருகன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பூ.விஜயகாந்த்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட துணைத் தலைவர் நளினம் நாகராஜ், தலித் விடுதலைக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் விடுதலைச்செல்வன், அவினாசி ஒன்றிய பொறுப்பாளர் ஆ.பொன்னுசாமி ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் கண்டனப் பேருரை நிகழ்த்திய திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபி.வெ.குமாரராசா அவர்கள் குறிப்பிட்டதாவது; ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் இந்தியக் குடியரசுத் தலைவர் அனுமதிக் கப்படவில்லை என்ற சம்பவம் இந்தியாவின் இறை யாண்மைக்கே விடப்பட்ட சவாலாகும்! குடியரசுத் தலை வர் பதவியை விட அர்ச்சகர் பதவி உயர்வானது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. பிறவிபேதத்தை நிலைநிறுத்தும் இது போன்ற நிகழ்வுகளை களைவதற்கு தந்தை பெரியார்  இறுதியாக அறிவித்த போராட்டமான "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்" என்ற சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதற்கு பதிலாக ஜாதி ஒழிக்கப்பட்டது என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் வருணா சிரம முறையால் இந்தியா வன்முறைக்காடாத் தான் இருக்குமே ஒழிய, ஒருக்காலும் சுதந்திர நாடாக இருக்க முடியாது! ஜாதியை, தீண்டாமையைக் காப்பாற்றும் அரசாக மத்திய பிஜேபி அரசு செயல்பட்டு வருகிறது.வருணாசிரமத்தையும், பிஜேபியையும் விரட்டியடிக்க வெகுமக்கள் விழிப்போடு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணி கண்டன், பாண்டியன் நகர் முருகேஷ், பெரியார் பெருந் தொண்டர் கரு.மைனர், தலித் விடுதலைக் கட்சியின் மாநில அமைப்பாளர் செல்வராஜ், கொள்கை பரப்புச் செயலாளர் ஆறுமுகம், மேற்கு மண்டல செயலாளர் ஊத்துக்குளி செல்வம், திருப்பூர் மாநகர் மாவட்ட செய லாளர் சுந்தரம், அலுவலக செயலாளர் ஜெகனாதன், சஞ்சய், லெனின் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

குடியரசுத் தலைவரை கோவிலுக்குள் நுழையவிடாமல் அவமதித்த அர்ச்சகரை கைது செய்யவேண்டும், "அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை" சட்டத்தை கொண்டுவர வேண்டும், அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பதை ஜாதி ஒழிப்பு என்று சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்ட முடிவில் திருப்பூர் மாநகர செயலாளர் பா.மா.கருணாகரன் நன்றி கூறினார்.

கோவை

கீழ் ஜாதி என்பதால் கோவிலுக்குள் அனுமதிக்காமல் நாட்டின் குடியரசுத் தலைவரை அவமதித்ததைக் கண்டித்து 7.6.2018 அன்று காலை 11.மணிக்கு திராவிடர் கழகத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் புஸ்கர் நகரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் பிறப்பால் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த வர் என்பதால் அவரை அர்ச்சகர்கள்  கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே, அவர் கோவில் வாசல் படியிலேயே நின்று சாமி கும்பிட்டுவிட்டு வந்தார்.      ஜாதியை காரணம் காட்டி நாட்டின் குடியரசுத் தலை வரையே அவமதித்ததைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட் டாட்சியர் அலுவலகம் எதிரில் நடை பெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளர் ம. சந்திரசேகர் தலைமை தாங்கினார்.      இதில் மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் தரும.வீரமணி, மாவட்ட தலைவர் ச.சிற்றரசு, மாவட்ட செயலாளர் தி.க.செந்தில் நாதன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வம், பொறி யாளர் பரமசிவம், சாலைவேம்பு சுப்பையன், ஈ.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 7-6-2018 வியாழன் மாலை 5 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் அறிஞர் அண்ணா சிலை முன்பு, ஜாதியின் பெயரால் குடியரசுத் தலைவருக்கு கோவில் நுழைவு மறுக்கப் பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன் தலைமையில், ப.க.புரவலர் ந.ஆனந்தம் முன்னிலையில், மாவட்ட தி.க. துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம் வரவேற்புரையாற்றினார். ஆர்ப்பாட்ட முழக்கங்களைத் தொடர்ந்து மாவட்ட ப.க. அமைப்பாளரும், தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பாசறை மாவட்ட அமைப்பாளருமான பா.அசோக், சி.பி.அய். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பழனிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் அ.தங்கசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.சுந்தரமூர்த்தி, சி.பி.அய். நகரச் செயலாளர் கே.எஸ்.காதர்மைதீன், திருத்தங்கல் நகர சி.பி.அய். செயலாளர் ஆர்.பாலச்சந்திரன், சிவகாசி நகர செயலாளர் து.நரசிம்மராஜ், அமைப்பாளர் பெ.கண்ணன், ஒன்றிய அமைப்பாளர் கா.காளிராசன், அருப்புக்கோட்டை நகர செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், கவிஞர் நா.மா.முத்து, வாழ்வாங்கி உ.அமரன், ப.க. தலைவர் பெ.த.சண்முகசுந்தரம், சக்தி வேல் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் வெ.முரளி நன்றி கூறினார்.

சேலம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள   பிரம்மா கோயிலில்  இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரை உள்ளே சென்று வழிபாடு செய்ய விட வில்லை அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதனை  கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு 7.6.2018 அன்று காலை 11 மணியளவில் நடை பெற்றது இந்த ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்ரமணியம் தலை மையில் பழனி புள்ளையண்ணன், ஜவகர் முன்னிலையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்: விடுதலை சந்திரன், கிருஷ்ணமூர்த்தி  கடவுள் இல்லை சிவகுமார், வானவில், புத்தூர் சேகர், பரமசிவம், பட்டுதுரை ராஜா, சா.வே.பூபதி, ராஜி கா.நா.பாலு, அகலி யன்,  பட்டுதுரை லட்சுமணன், செந்தாராபட்டி கார்முகில், புத்தூர் செந்தமிழ் சேரன், சிங்கிபுரம் கூத்தன், எடப்பாடி ரவி, மதிவாணன், முத்து,  தலித் விடுதலை இயக்கத்தை சேர்ந்த ரகுபதி, தமிழ் மணி, பூவரசன், கோவிந்தராஜ், சிவா, யூனியன் பேங்க் ராஜ், சமூகநீதி இயக்கத்தை சேர்ந்த ராம்ஜி, மதிவாணன் மற்றும் ஏராளமான  கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 7.6.2018 காலை 10.30 மணியளவில்  மேலச்சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.க. தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். காட்டூர் சி.கனக ராசு வரவேற்புரையாற்றினார். மண்டல தலைவர் மு.நற்குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், இலால்குடி மாவட்ட அமைப்பாளர் ரத்தினம்,  இலால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, திருச்சி மாநகர தலைவர் மருதை, மாவட்ட மகளிர் பாசறை தலைவி அம்பிகா, மண்டல மகளிரணி செயலாளர் கிரேசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி மதிமுக  தேர்தல் பணிக்குழு ஆலோசகர் புலவர் முருகேசன், தலைமைக்கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோர்  உரையாற் றினார்கள்.

நிறைவாக மாவட்ட தி.க. செயலாளர் இரா.மோகன்தாஸ் நன்றி கூறினார். இதில் பெல். ம.ஆறுமுகம், நேதாஜி,விடுதலை கிருஷ் ணன், மகாமுனி,அந்த நல்லூர் ஒன்றிய தலைவர் மாவடி யான், காட்டூர் சங்கிலிமுத்து, ராஜேந்திரன், கோவிந்தன், துரைசாமி, சுரேஷ், சிறீரங்கம் நகர தலைவர் கண்ணன், துணைத் தலைவர் அண்ணாதுரை, தாமஸ்,  அம்மணி அம்மாள், குணசேகரன், சேவியர், பால்ராஜ், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், செயலாளர் தமிழ்ச்சுடர், முன்னாள் நகர செயலாளர் ஜெயராஜ், ராஜசேகர், இலால்குடி மாவட்டம் சார்பில் முத்து, வீரமணி, தனபால், மார்ட்டின் பொற்செழியன், பாலசுப்ரமணியன், பெரிய சாமி, பாபு, முத்துசாமி, அக்ரி சுப்ரமணியன், ராமசாமி, அமிர்தம், தம்பிசுரேஷ்,  லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, பூங்கோதை, சிதம்பரம், பன்னீர் செல்வம், கி.வீரமணி, ந.பெரியசாமி, பழனியம்மாள், மணிவண் ணன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் செங்கைகுயிலி மற்றும் தி.க. இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளர்  அணியினர்  திரளாக   கலந்து கொண்டனர்.

சிவகங்கை

இராஜஸ்தான் மாநில புஷ்கர் எனும் இடத்தில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் குடியரசுத் தலைவர் அவர்களையே நுழையவிடாமல் தடுத்திட்ட கோவில் நிர்வாகத்தை கண்டித்து சிவகங்கை மற்றும் காரைக்குடி கழக மாவட் டங்களின் சார்பில் எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவரான சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு 7.6.2018 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் முதல் நிகழ்வாய் தலைமைக் கழகம் வெளியிட்ட கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள் முர சறைந்து முகிழ்க்கும் ஒலியாய் எழுப்பப்பட்டன.

சிவகங்கை மண்டல திராவிடர் கழகத் தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் தொடங்கியவுடன் அறிமுக உரையாக பொதுக்குழு உறுப்பினர் சிவகங்கை சுப்பையா, திராவிடர் கழகத்தின் மேன்மை பற்றியும், பிறவிப்போராளி என இறுதிவரை வாழ்ந்து இனமான உணர்வு ஊட்டிய தந்தை பெரியாரையும், அவர் கண்ட களங்களையும் கவினுறு வகையில் எடுத்துச்சொல்லி ஆர்ப்பாட்டத்தினை ஒருங்கி ணைத்தார். முதலாவதாக தலைமை தாங்கிய சாமி.திராவிடமணி, தமிழர் தலைவர் அவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் பற்றிய அறிவிப்பு குறித்தும், கோவில்களில் பார்ப்பனர் செயல்பாடுகள் பற்றியும் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் அவசியம் வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு செய்திகளை சிறப்பான முறையில் எடுத்துப்பேசி, ஆர்ப்பாட்ட நோக்கம் குறித்து விளக்கமளித்து தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் அரங்கசாமி, மாவட்டத் துணைத் தலைவர் மணிவண்ணன், சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இராசாராமன், மாவட்டச் செயலாளர் அனந்தவேல், சிவகங்கை நகரப் பொறுப்பாளர் புகழேந்தி, காரைக்குடி கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் தினேசுகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், மாவட்டப் பொறுப்பாளர் ஜீவா ஆகியோர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்த பின்னர் இறுதியாக மண்டலச் செயலாளர் மகேந்திரராசன் கண்டன உரை நிகழ்த்தினார்.

காரைக்குடி கழக மாவட்டச் செயலாளர் வைகறை தமிழர் தலைவர் அவர்களின் அறிக்கையை அப்படியே படித்துக்காட்டினார். மானாமதுரை நகரச் செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறிட ஆர்ப்பாட்டம முடிவுற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத் தோழர்கள் கவிஞர் தங்கராசன், இளைஞரணி தெய்வேந்திரன், அக்கினி ஆகியோரும் காரைக்குடி தோழர்கள் செகதீசன், சுந்தரம், ஜோசப் மற்றும் பூமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தருமபுரி

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர் களும் அவரது துணைவியாரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்றார். ஆனால் அவரை கோவில் நிர்வாகத்தினர் தாழ்த் தப்பட்டவர் என்பதால் உள்ளே விட மறுத்துவிட்டனர். அவர் படிக்கட்டில் உட்கார்ந்து கும்மிட்டுவிட்டு திரும்பி உள்ளதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

7.6.2018 அன்று காலை 11 மணியளவில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன் ஆர்ப்பாட்டம் துவங்கியது. மாவட்ட தலைவர் இ.மாதவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.காமராஜ் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் மனித உரிமை ஆர்ப்பாட்டம், போராட்டம் போராட்டம் தீண்டாமை ஒழிப்பு போராட்டம், ஜாதி ஒழிப்பு போராட்டம் கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் குடியரசு தலைவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடை செய்த பார்ப்பன, இந்துத்துவா ஆதிக்கத்தை கண்டிக்கிறோம். கைது செய், கைது செய் அர்ச்சக பார்ப்பனரை கைது செய், கொண்டுவா கொண்டுவா அர்ச்சகர்சட்டத்தை கொண்டு வா என உணர்ச்சி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர்கள் க.கதிர், ஜனகராஜ், பீம.தமிழ்பிரபாகரன், மண்டல செயலாளர் கரு.பாலன், நகர தலைவர் மு.பரமசிவம், எம்ஆர்சி மாவட்ட தலைவர் க.சின்னராஜ், செயலாளர் சுதா, ஒன்றிய தலைவர் துரைசாமி, செயலாளர் சென்றாயன், விவசாய அணி தலைவர் மு.சிசுபாலன் சுந்தரம், இராமச்சந்திரன், பிரகாசம் நளினி வசந்தகுமார் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பாளர் கோவிந்த ராஜ் கருத்துரையாற்றி நன்றி கூறினார்.

திண்டுக்கல்

இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது துணைவியாரையும் இராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவி லுக்கு உள்ளே செல்ல அனுமதிக்காததை கண்டித்து திராவி டர் கழகம் சார்பில் 7.6.2018 அன்று மாலை 5 மணியளவில் திண்டுக்கல் நாகல் நகர் சிண்டிகேட்வங்கி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் த.கரு ணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் மு.நாகராசன், தி.தொ.ச.பொதுச்செயலாளர் மு.செல்வம், நகரத்தலைவர் அ.மாணிக்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் இரா.வீரபாண்டியன், பழநி மாவட்ட தலைவர் பெரியார் இரணியன் ஆகியோர் உரையினை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன், மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தி னார்கள். அவர்களது உரையில், இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் தான். மத்தியில் ஆளும் பிஜேபி அரசு தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை தேர்ந்தெடுத்தது.

ஜாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந் தவர் என்பதால் பார்ப்பனர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களை எப்படி நடத்துவார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். கேரள மாநிலம் வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் உள்ள தெரு வழியாகவே செல்லக்கூடாது என்று வைத்து இருந்தார்கள். தந்தை பெரியாரின் போராட்டங்களால் தான் இன்று அந்த நிலை மாறி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திற்கும் பெரியார் தேவைப்படுகிறார் என்று பல்வேறு செய்திகளை எடுத்துக்கூறி உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் செபாஸ்டின் சின்னப்பன், வி.பி. பாலகிருஷ்ணன், நகரத்துணை தலைவர் இரா.ஜவகர், சிதம்பரம், சின்னாளபட்டி கா.நாகேந்திரன், சாம்சன், வழக்குரைஞர் அன்புச்செல்வன், பழனி குணா.அறிவழகன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் ஒன்றிய செயலாளர் ச.பொன்ராஜ் நன்றியுரை ஆற்றினார்.

புதுச்சேரி

இந்திய குடியரசு தலைவர் மாண்பமை ராமநாத்கோவிந்த் அவர்களை இராஜஸ்தானில் உள்ள புஸ்கர் பிரம்மா கோவி லுக்குள் சென்று வழிபட அனுமதி மறுத்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 7.6.2018 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி காட்டன் மில் அருகில் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, மண்டல செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், புதுச்சேரி உள்ளிட்ட ப.க. துணைத் தலைவர் மு.ந.நடராசன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் இரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் டிஜிட்டல் லோ.பழனி, புதுச்சேரி மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன், விலாசினி இராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்ட முழக்கங்களை வில்லியனூர் கொம்யூன் கழக தலைவர் கரு. சி.திராவிடச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு ஆகியோர் முழங்கினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் லோக் ஜனசக்தி, புதுச்சேரி மாநில தலைவர் சின்.என். புரட்சிவேந்தன், தமிழர் களம் தலைவர் அழகர், முற்போக்கு மாணவர் அணி தலைவர்  இரா.தமிழ்வாணன், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா, மனித நேய மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் சி.எம்.பஷீர்அகமது, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் இரா.முருகானந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி செயலாளர் ஆ.செழியன், எஸ்.டி.பி.அய்.தலைவர் நவீன்.தனராமன், ஏ.அய். எம்.அய்.எம் தலைவர் சம்சுதீன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச குழு உறுப்பின் தோழர் க.முருகன், தலைவர் இரா.இராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் இரா.விசுவநாதன்,  புதுச்சேரி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பூ.மூர்த்தி, புதுச் சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதுச் சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம் நன்றி கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மண்டல அமைப்பாளர் கே.குமார், பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் வீர.இளங்கோவன், புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்புசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் அரியூர் கி.வ.இராசன், பெரியார் பெருந் தொண்டர் காரை.பெரியார் முரசு, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.கிருஷ்ணராசு, இணை செயலாளர் துரை.முனுசாமி, இரா.வெற்றிவேல், வில்லியனூர் கு.உலகநாதன், மணிகண்டன், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். வருகிற 9.7.2017 அன்று நடைபெற உள்ள இராவண காவிய தொடர் சொற்பொழிவு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் குடியரசுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியவர்கள் பேச்சு பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner