எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லால்குடி, ஜூன் 21- லால்குடி (கழக) மாவட்ட ப.க. கலந் துரையாடல் கூட்டம் 16.6.2018 அன்று காலை 10 மணிக்கு டோல்கேட்டில் ப.க. மாவட் டத் தலைவர் அக்ரி.சுப்ரமணி யின் வர்த்தக வளாகத்தில் மாநில ப.க. துணைத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ப.க. தலைவர் அக்ரி சுப்ரமணியன் வரவேற் புரையாற்றினார். மாவட்ட ப.க. அமைப்பினர் பொறி யாளர் முருகேசன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் சுப் ரமணியன், மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தலை வர் அ.சண்முகம், மண்டல கழக செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட கழக தலைவர் தே.வால்டேர், மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, மண்ணச்சநல்லூர் ஒன்றிய ப.க. தலைவர் முத்துசாமி, டோல்கேட் ப.க. தலைவர் பாபுராஜ், லால்குடி ஒன்றிய ப.க. தலைவர் தனியரசு, காம ராசு, மண்டல இளைஞர் அணி தலைவர் வீ.அன்புராஜா, ப.க. மகளிர் தலைவர் செல்வி, மாவட்ட கழக மகளிர் அணித் தலைவர் பி.என்.ஆர்.அரங்க நாயகி மற்றும் 50 ப.க. தோழர் களும் கழகப் பொறுப்பாளர்க ளும் கலந்து கொண்டனர்.

மாநில பகுத்தறிவு ஆசிரி யர் அணி அமைப்பாளர் தமிழ் பிரபாகரன் சிறப்புரையாற்றி னார். ப.க பொறுப்பாளர்க ளுக்கு மாவட்டத் தலைவர் தே.வால்டேர் பயனாடை அணி வித்தார். குடந்தை மாணவர் பவள விழா மாநாட்டிற்கு துறையூர், மண்ணச்சநல்லூர், பிச்சாண்டார் கோவில், கீழ வாளாடி, இலால்குடி, புள் ளம்பாடி ஆகிய ஊர்களிலி ருந்து வேன்களில் செல்வது என்றும், உரிய நன்கொடையை வசூலித்து தருவது என்று மாவட்ட மாணவர் அணி தலைவர் முரளிதரன் உறுதி யளித்தார்.

மாவட்ட ப.க செயலாளர் பால சுப்ரமணியன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner