எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பழையஆயக்குடி, ஜூன் 22- 20.6.2018 அன்று பழனி கழக மாவட்டம் பழைய ஆயக்குடி யில் ஜூலை 8 திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு விளக்கம் மற்றும் இந்திய குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த இந் துத்துவா பார்ப்பனர்களை கண் டித்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளைத் தலைவர் கா.நாகராஜ் தலைமை ஏற்றார்.பெரியார் பிஞ்சு கவி நிசா கடவுள் மறப்பு கூறினார். மாவட்ட அமைப்பாளர் சி.இராதாகிருஷ்ணன் வரவேற் புரை நிகழ்த்தினார். மண்டல மாணவர் கழக செயலாளர் பொன்.அருண்குமார் தொடக்க வுரை நிகழ்த்தினர். மாநாட்டை விளக்கியும்,மத்தியில் ஆளும் பிஜேபி  அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்தும் மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை நிகழ்த்தினார். கூட்டத்தின் தொடக்கத்தில் மந்திரமல்ல தந்திரமே என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நகர பொறுப்பாளர் சு.அழகர்சாமி நடத்தி காட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பெ.இரணியன், மாவட்ட செயலாளர் நா.நல்ல தம்பி,மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.திராவிடச் செல்வன், மாவட்ட துணைத் தலைவர் ச.அங்கப்பன், மாவட்ட துணை செயலாளர் ஜோ.ஜோசப், மண்டல இளை ஞரணி செயலாளர் குண.அறி வழகன், மாவட்ட மகளிரணி தலைவர் அமலசுந்தரி,ஒன்றிய செயலாளர் தே.பெரியார் சுரேசு,மதிமுகவின் ஒன்றிய செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner