எழுத்துரு அளவு Larger Font Smaller Font

30.6.2018 அன்று  மாலை தாம்பரம் மாவட்ட மறைமலை நகர திராவிடர் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நகரத்தலைவர் துரை.முத்து தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் திருக்குறள் ம.வெங்கடேசன் வரவேற்புரையாற்ற தலைமைக் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையில், சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மற்றும் பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் எடுத்து கூறி சிறப்புரையாற்றினார். பொதுமக்கள் தெளிவடைந்து, கைத்தட்டல் மற் றும் ஆரவாரம் செய்தனர். கூட்டத்திற்கு கழக தோழர்களும் மகளிர் தோழர்களும் பொது மக் களும் பெருந்திரளாக வருகை தந்து சிறப்பித்தனர். பொதுகூட்டம் மிக சிறப்பாக அமைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner