எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 4 வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 30.6.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

சென்னை சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் செ.பிரவின்குமார் கடவுள் மறுப்பு கூறினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இ.இன்பக்கனி, பொதுக்குழு உறுப்பினர் வெ.மு. மோகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆலோசனை கூறினர்.

கழகத் துணைத் தலைவர்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இக்கூட்டத்தில் பங்கேற்று, ஜூலை 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில், மாணவர் கழகத் தினரும், கழகத் தோழர்களும் தனிப்பேருந்தில் கலந்து கொள்வதற்கான வழி முறைகளைக் கூறினார். தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்து, மாணவர் கழகத் தோழர்களை ஊக்குவித்தார்.

ஜூலை 8 குடந்தை மாநாட்டிலும், பேரணியிலும் மாணவர் கழகத்தினரும், வடசென்னை மாவட் டத்தின் அனைத்துத் தோழர்களும் பெருவாரியாகக் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் நா.பார்த்திபன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், ஆவடி மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் வேலவன், செம்பியம் தலைவர் ப.கோபாலகிருட்டிணன், வியாசர்பாடி செயலாளர் சு.மும்மூர்த்தி, அரும்பாக்கம் க.தமிழ்ச்செல்வன், அ.அம்பேத்கர், த.பரிதின் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

புரசை இளைஞரணி அமைப்பாளர் கா.காரல்மார்க்ஸ் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner