எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடக்குத்து, ஜூலை 5  3.7.18 மாலை 7மணிக்கு, இந்திராநகர்-வடக்குத்து, பெரியார் படிப்பகத்தில், கடலூர் மாவட்ட மாணவர் கழக -இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது. மாவட்ட மாணவர் கழக தலைவர் க.தாயன்பன் தலைமையில், மாவட்ட மாணவர் கழக செயலாளர் தா.பெரியார் செல்வம் வரவேற்புரையாற்றினார், மண்டல செயலாளர் சொ.தண்டபானி,வடலூர் நகர தலைவர் புலவர் இராவணன்,மாவட்ட அமைப் பாளர் சி.மணிவேல்,ஒன்றிய செயலாளர் குண சேகரன், நெய்வேலி நகர செயலாளர் இரத்தினசபாபதி ஆகியோர் முன்னிலை வகிக்க, மண்டல இளை ஞரணி செயலாளர் வி.அன்பு திராவிடன், ப.க.சார்பில் சி.தர்மலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன், நெய்வேலி நகர தலைவர் ச.சு.இசக்கிமுத்து, இளைஞரணி தலைவர் ராஜாசிதம்பரம்,குறிஞ்சிப்பாடி வேல் முருகன், இந்திரஜித், இந்திராநகர் தலைவர் நூலகர் கண்ணன், செயலாளர் ந.கனகராஜ், ஆகியோர் தங்கள் கருத்துக்களை பேசினர்.

நிறைவாக மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், மண்டல செயலாளர் அரங்க பன்னீர் செல்வம்  ஜீலை 8இல் பேசுகையில், குடந்தை மாநாடு மிக சிறப்பாக அமைய அனைவரும் நிதி வழங்க வேண்டு, மாவட்டத்தின் சார்பில் மாணவர்கள் பெறும்அளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்டம் முழவதும் உள்ள மாணவரணி, இளைஞரணி, கழக தோழர்கள் என ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர், முடிவில் மாணவர் கழக தோழர் நாத் திகன் நன்றி கூறினார்.

தீர்மானம்: 1 மாநில மாணவர் கழக மாநாட்டிற்கு அதிக நிதி வழங்குவது, பெறும் அளவில் மாண வர்களை பங்கேற்க செய்வது, இரண்டு வாகனத்தில் அனைவரும் செல்வது.

2.தமிழர் தலைவர் அவர்களின் சொற்பொழிவை விளக்கி மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner