எழுத்துரு அளவு Larger Font Smaller Font

20.7.2018 அன்று கன்னியாகுமரி மாவட்டக் கழகக் கூட்டம் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், மண்டலச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்டச் செயலாளர் சி.கிருஷ்ணேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் முன்னிலையில் காலை 10.30 மணியளவில் தொடங்கியது.

கடவுள் மறுப்புக்குப்பின் இரா.குணசேகரன் தலைமையுரையாற்றினார். அவர்தம் உரையில் தமிழர் தலைவரின் ஓய்வறியாப் பணி பற்றியும், குடந்தை மாணவர் கழக மாநில மாநாட்டுச் சிறப்புப் பற்றியும், கழகத் தொடர்பணியின் தேவை பற்றியும், விழிப்புணர்ர்வுப் பிரச்சாரப் பயணத்தை எவ்வாறு பங்கிட்டுப் பணியாற்றுவது என்று பட்டியலிட்டும் கருத்துக்களை வழங்கினார்.

அடுத்து ம.தயாளன், ப.க. மாவட்டத் தலைவர் சிவதாணு, மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், நகர அமைப்பாளர் நல்ல பெருமாள், மாவட்டச் செயலாளர், மண்டலச் செயலாளர் ஆகியோர் உரைக்குப்பின் மண்டலத் தலைவர் கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி மகேஷ், ராஜேஷ், மாணவர் கழக மணிகண்டன், அ.பால கிருஷ்ணன், ராஜேஸ்வரன்தாஸ், மிலன், சாஜின், தக்கலை கென்னடி நவீன், இரத்தினசுவாமி, ஹைலன் உட்பட தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக நகர இளைஞரணித் தோழர் மகேஷ் நன்றி கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

1) இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும், வெகுமக்கள் மத்தியிலும் இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலானப் பிரச்சாரப் பயணத்தை நாகர்கோவிலில் தொடங்கி, சென்னை முடிய நடத்திட அனுமதி வழங்கிய  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் உளம் நிறைந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2) 22.8.2018 அன்று நாகர்கோவிலில் தொடங்கிடும் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பெரும்பயணத் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தை மிகுந்த சிறப்போடு நடத்தித்தருவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

3) விழிப்புணர்வுப் பிரச்சாரப் பெரும் பயணத் தொடக்க விழாவிற்கு நாகர்கோவில் வருகை தரும்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது எனத்தீர்மானிக்கப்பட்டது.

4) சுவரெழுத்துப் பணியினைச் செய்து தர உறுதியளித்த இளைஞரணி மகேஷ் அவர்களுக்கும் காலை உணவினை வழங்கிடப் பொறுப்பேற்ற பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் அவர்களுக்கும், மதிய உணவினை வழங்கிடப் பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்டத் தலைவர் ம.மணி அவர் களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner