எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 24 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மூன்று கட்டங்களாக (முதல் கட்டம் (22.8.2018 முதல் 28.8.2018 வரை):  நாகர்கோவில் முதல் விழுப் புரம்வரை; இரண்டாம் கட்டம் (1.9.2018 முதல் 6.9.2018 வரை): அரியலூர் முதல் சென்னைவரை; மூன்றாவது கட்டம் (9.9.2018 முதல் 11.9.2018 வரை): வேலூர் முதல் சென்னைவரை) நடைபெறவிருப்பதை யொட்டி, கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டம் விவரம் வருமாறு:

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 21.7.2018 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அ.அருணகிரி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்கள். கூட்டத்தின் நோக்கம் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகள் குறித்தும் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றினார்கள். தொடர்ந்து மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், மண்டலச் செயலாளர் மு.அய் யனார், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி யன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள். தொடர்ந்து திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன் செயலாளர் துரை.ஸ்டாலின், உரத்தநாடு ஒன்றிய தலைவர் மா.இராசப்பன், மாவட்டத் துணைத் தலைவர் முத்து.இராஜேந்திரன், பூதலூர் ஒன்றியத் தலைவர் அல்லூர் பாலு, செயலாளர் புகழேந்தி, ஒன்றிய ப.க.தலைவர் துரைராஜ், தஞ்சை மாநகரத் தலைவர் நரேந்திரன். செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை.இராமசாமி, மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி, மாவட்ட மாணவர் கழக தலைவர் வெ.தமிழ்செல்வன், செயலாளர் ந.காவியன், அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் ராஜூ, மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், உரத்தநாடு ஒன்றிய துணைத் தலைவர் துரைராசு, ஒன்றிய இளைஞரணி தலைவர் சுப்ரமணியன், அமைப்பாளர் கதிரவன், மல்லிகா ராஜமாணிக்கம், மோகன்ராஜ், மாநகர மாணவர் கழக செயலாளர் பகுத்தறிவு, பருத்திக்கோட்டை முரசு, சாலியமங்கலம் துரைராசு, ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் உரையாற்றினார்கள். மதன்ராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் தலையாமங்கலம் இரா.துரைராசு அவர்களின் தாயார் குப்பம்மாள், அம்மாப்பேட்டை ஒன்றிய ப.க. தலைவர் மா.சாமிநாதன் அவர்களின் தாயார் மரகதத்தம்மாள் ஆகி யோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: நாகர்கோவில் முதல் சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங் கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பெரும்பயண வர வேற்பு பொதுக்கூட்டத்தை 26.8.2018 அன்று தஞ்சாவூரில் மிக எழுச்சியோடு நடத்துவது. இப்பொதுக்கூட்டத்தை மக்கள் மத்தியில் பரப்பிடும் வகையில் சுவர்எழுத்து, பிளக்ஸ், விளம்பரம், உள்ளூர் தொலைக்காட்சியில் விளம்பரம் உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களையும் சிறப்பாக செய்வது எனவும், நிதிவசூல் உட்பட அனைத்து ஒத்துழைப்பையும், கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3: விழிப்புணர்வு பரப்புரை பெரும்பயணம் மேற்கொண்டு 26.8.2018 அன்று தஞ்சைக்கு வருகை தரும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மிகச்சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: 2,3,4,5 ஆகிய நாட்களில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தஞ்சை மாவட்டத்தின் சார்பில், புதிய இளைஞர்கள், மாணவர்களை பெருமளவில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

தஞ்சை மாநகர இளைஞரணி தலைவர்: ஆ.மதன்ராஜ்

தஞ்சை மாநகர திராவிடர் கழக பகுதி செயலாளர்கள்

மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர்: த.கோவிந்தராசு, இ.பி.காலனி பகுதி செயலாளர்: சூரியமூர்த்தி, கரந்தை பகுதி செயலாளர்: தனபால், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர்: அ.இராமலிங்கம்.

தேனி

தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.7.2018 அன்று மாலை ஆறு மணியளவில் பொதுக்குழு உறுப்பினர் கூடலூர் டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனம் இல்லத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

மாவட்ட திராவிடர் கழக தலைவர் ச.இரகுநாகநாதன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் விழிப்புணர்வு பயணத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பினை எடுத்துரைத்து கருத்துரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனம், மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நடராசன். மாவட்ட ப.க. செயலாளர் அரிகரன், நகர பொறுப்பாளர் நாகராசன், முருகன் உள்ளிட்ட கூடலூர் பொறுப்பாளர்களின் சார்பில் ஆசிரியரின் வழிச்செலவினை ஏற்றுக் கொள்வதெனவும், மேடை, சுவரெழுத்து, விளம்பர செலவுகளை மாவட்ட தலைவர் ச.இரகுநாகநாதன், அவர்களும்,  ஒலி, ஒளி செலவினை மாவட்ட செயலாளர் தேனி மணிகண்டன் அவர்களும், இரவு உணவு வழங்கும் பொறுப்புகளை மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன் அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். மாவட்ட அமைப்பாளர் வி.பாஸ்கரன், ஆ.பூமிநாதன் உள்ளிட்ட நாராயண தேவன்பட்டி தோழரின் சார்பில் ரூ. 5000, மேனாள் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், ப.அழகேசன், முத்தமிழன் உள்ளிட்ட காமயக்கவுண்டன்பட்டி தோழரின் சார்பில் ரூ. 5000, பொதுக்குழு உறுப்பினர் பெரியகுளம் மு.அன்புக்கரசன் ரூ. 5000, பொதுக்குழு உறுப்பினர் ச.நாகராசன், மாவட்ட துணைச்செயலாளர் சிவா தோழியர் சுமிலா உள்ளிட்ட சுருளிப்பட்டி தோழரின் சார்பில் ரூ.5000, ஆண்டிப்பட்டி ஒன்றிய தலைவர் அய்.இராஜா, ஒன்றிய செயலாளர் செ.கண்ணன், நா.தமிழ்தம்பி உள்ளிட்ட தோழரின் சார்பில் ரூ. 2500, வழங்குவதாக உறுதியளித்தனர். மகளிரணி சார்பில் ரூ. 2000, வழங்குவதாக கவிஞர் பேபி சாந்தாதேவி அளிப்பதாக அறிவித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் ம.சுருளி ராசு, ப.சுரேசு, வி.சகாதேவன் ஆகியோர் கருத்துரை வழங் கினர்.

தீர்மானங்கள்

1) கம்பம் நகர தலைவர் பொ.குமரேசன், சுருளிப்பட்டி திருவருள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

2) தமிழினப் பெருமக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, உரிமைகளை பாதுகாத்திடவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை விளக்கியும் விழிப்புணர்வு பிரச்சார பெரும்பயணம் மேற்கொண்டு 24.8.2018 அன்று தேனி வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.7.2018 அன்று காலை 11 மணிக்கு பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமை யில் திருவாரூர், சிவம் நகர், தமிழர் தலைவர் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில விவசாய தொழிலாளரணி செய லாளர் வீ.மோகன், மாநில மகளிர் பாசறைச் செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மண்டல செயலாளர், சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட அமைப்பாளர் பா.சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சவ்.சுரேஷ், நகர ப.க. தலைவர் அரங்க ஈ.வேரா, மாவட்ட துணைச் செய லாளர் க.வீரையன், மாவட்ட வி.தலைவர், பி.ரெத்தினசாமி, திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் தி.குணசேகரன், மாவட்ட மாணவர் கழக தலைவர் சு.தீனதயாளன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்எஸ்எம்கே அருண்காந்தி, இரவாஞ்சசேரி பழனிசாமி, மாவட்ட இணைச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், கொரடாச்சேரி ஒன்றிய துணை தலைவர் துரைராஜ், பெரியார் பெருந்தொண்டர் கோவித்தசாமி, பருத்தியூர் கலிய பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் இராஜ.மணிகண்டன், மாவட்டச் செயலாளர் கு.காமராஜ், மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் இரா.கோபால், மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில திராவிடர் விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் ஆகியோர் உரைக்குப்பின் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தமிழர் தலைவர் அவர்களின் ராமநாதபுரம் தொடங்கி விழுப்புரம் வரை தொடர் விழிப்புணர்வு பரப்புரை தொடர்பாக உரையாற்றி னார். திருவாரூரில் வரும் 28.8.2018 அன்று மிக பிரமாண்டமாக வரவேற்பு அளித்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று கூறினார். நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

மறைந்த முன்னாள் நகர தலைவர் பொன்.இராமையா,  குடவாசல் ஒன்றிய செயலாளர் அன்னவாசல் மகாலிங்கம், சோழங்கநல்லூர் தமயந்தி ஆகியோர் இறப்புக்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மானம் 2: நாகர்கோவில் முதல் சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற் கும் விழிப்புணர்வு பரப்புரை பெரும்பயண வரவேற்பு பொதுக்கூட்டத்தை 27.8.2018 அன்று திருவாரூரில் மிக எழுச்சியோடு நடத்துவது. பொதுக்கூட்டத்தை மக்கள் மத்தியில் பரப்பிடும் வகையில் சுவர்எழுத்து, பிளக்ஸ் விளம்பரம்,உள்ளுர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களையும் சிறப்பாக செய்வது. நிதி வசூல் உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் வழங் குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3: விழிப்புணர்வு பரப்புரை பெரும்பயணம் மேற்கொண்டு 27.8.2018 அன்று திருவாரூர் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப் படுகிறது.

தீர்மானம் 4: ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய நாட்களில் குற்றா லத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறையில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி சார்பில் புதிய இளை ஞர்கள், மாணவர்களை பெருமளவில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: மயிலாடுதுறை கழக மாவட்டத்தில் உள்ள கடவாசலில் வருகிற 26.7.2018 அன்று தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள உலகத்தலைவர் தந்தை பெரியார் சிலைதிறப்பு விழாவில் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 6: புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர்: பா.சாமிநாதன்

மாவட்ட விவசாய தொழிலாளரணி

தலைவர்: ப.ரெத்தினசாமி, செயலாளர்: தங்க.கலிய பெருமாள், அமைப்பாளர்: ஏகாம்பரம் கண்கொடுத்த வனிதம்.

பா.சாமிநாதன் நன்றியுரை கூறினார்.

விழிப்புணர்வு பரப்புரை கூட்டத்தில் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் நன்கொடை வழங்கி யோர் பா.சாமிநாதன் ரூ. 10,000, இரா.கோபால் ரூ. 2,000, கு.காமராஜ் ரூ. 1,000, தி.குணசேகரன் ரூ. 2,000, சு.கிருஷ்ண மூர்த்தி ரூ. 1,000,  வீர.கோவிந்தராஜ் ரூ. 2,000 மாவட்டத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை

மதுரை மாநகர், மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 22.7.2018 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர் அ. முருகானந்தம் பழமண்டியில் நடை பெற்றது.

கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தலைமை யேற்றார். அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாநில பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, தென் மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, மண்டல தலைவர் மா.பவுன்ராசா, மாநில வழக்கு ரைஞரணி செய லாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன், மதுரை மாவட்ட தலைவர் எஸ்.முனிய சாமி, மாவட்ட செயலாளர் அ.முரு கானந்தம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் த.ம.எரி மலை, பொதுக்குழு உறுப்பினர் இராக்குதங்கம், மாவட்ட துணைத் தலைவர் கழகப் பேச்சாளர் அ.வேல் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் மணிராசு, மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி, பகுதி செயலாளர் சுப் பையா, சுரேசு, பிச்சைபாண்டி, ஆட்டோ செல் வம், மாவட்ட ப.க. செயலாளர் சட கோபன், மதுரை புறநகர் மாவட்ட ப.க. தலைவர் மன்னர் மன்னன், போட்டோ இராதா, மாவட்ட இளைஞரணி தலை வர் சிவா, செய லாளர் கண்ணன், மதுரை மேற்கு ஒன்றிய அமைப்பாளர் அழகு பாண்டி, உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, பெரியார் பெருந் தொண்டர் பெரி.காளியப்பன், மேனாள் மாவட்ட தலைவர் கருப்பு சிவா, திருப்பரங்குன்றம் ஈரோடு த.அன்பு, மேனாள் கல்வி அலு வலர் ச.பால்ராசு ஆகியோர் கருத்துரை வழங்கினார்.

நன்கொடை அறிவிப்பு

தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலை வர் தே.எடிசன்ராசா ரூ. 10,000, மண்டல செயலாளர் நா.முருகேசன் ரூ. 10,000, மாவட்ட தலைவர் எஸ்.முனியசாமி ரூ. 10,000, மாவட்ட செயலாளர் அ.முருகா னந்தம் ரூ. 15,000, மாவட்ட துணைத் தலைவர் அ.வேல்முருகன் ரூ. 15,000, தங்கும் விடுதி: மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் நா.நரேன், மாநில ப.க. எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு ரூ. 5,000, சுவரெழுத்து விளம்பரம்: பகுதிச் செய லாளர் பிச்சைபாண்டி, இரண்டு வேளை உணவு: பகுதி செயலாளர் சுப்பையன், ஒரு வேளை உணவு: பகுதி செயலாளர் சுரேஷ், மாவட்ட இளை ஞரணி தலைவர் சிவா ரூ. 3,000, போட்டோ இராதா ரூ. 3,000, மதுரை புறநகர் மாவட்ட ப.க. தலைவர் மன்னர் மன்னன் ரூ. 2,000, மேனாள் மாவட்ட தலைவர் சிவகுருநாதன் ரூ. 500, மாவட்ட அமைப் பாளர் இரா.திருப்பதி ரூ. 10,000,

நன்கொடை வழங்கியோர்

எஸ்.ஏ.எஸ்.பழக்கடை வீரகுமார் ரூ. 1,000, பெரி.காளியப்பன் ரூ. 500, முரு கேசன் ரூ. 200, இளைஞரணி இராசா ரூ. 500, மாவட்ட ப.க. செயலாளர் சடகோபன் ரூ. 500, மாவட்ட துணைச் செயலாளர் மணிராசு ரூ. 500, அழகு பாண்டி ரூ. 500, பொதுக்குழு உறுப்பினர் இராக்கு ரூ. 200, பவுன்ராசு ரூ. 300,

அனுப்பானடி கனி நன்றியுரை  கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத் திரா விடர் கழக அலுவலகத்தில் புதுக் கோட்டை மண்டல கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் பெ.இரா வணன், மாவட்டத் தலைவர்கள் புதுக் கோட்டை மு.அறிவொளி அறந்தாங்கி க.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை ப.வீரப்பன், அறந் தாங்கி இரா.இளங்கோ ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாவட்ட அமைப்பாளர் அ.சுப் பையா மாவட்டத் துணைத்தலைவர்கள் செ.இராசேந்திரன், க.முத்து, மகளிரணி வீர.வசந்தா, பெரியார் பெருந்தொண்டர் தி.இராசமாணிக்கம், மண்டல திராவிட மாணவர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இரா.குமார், திருச்சி மாவட்ட வழக் கறிஞர் அணி அமைப்பாளர் சங்கவித ரமா, மாவட்ட திராவிட மாணவர் கழ கத் தலைவர் பெ.அன்பரசன் அ.பத்ம நாபன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி கழக மாவட்டங்களின் சார் பில் ஏராளமான புதிய மாணவ மாணவி யரையும், இளைஞர்களையும் ஆகஸ்ட் 2 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் குற்றாலம் பெரியாரியப் பயிற்சிப்பட் டறையில் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner