எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 6 தாம்பரம் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் பெரியார் சிந்த னைக் களம்(நான்காம் நிகழ்வு) 29.7.2018 அன்று மாலை 6 மணியளவில் குரோம் பேட்டை பெரியார் மன்றத்தில் நடைப் பெற்றது.

தலைமை கோ.நாத்திகன் வரவேற் புரை தந்தை பெரியார் அவர்களின்  சிந்தனையாளர் செ.இராசன் முன்னிலை ஆ.இரா.சிவசாமி, விடுதலை நகர்.ஜெய ராமன், கே.எம்.சிகாமணி, பொழிசை கண்ணன், பா.சு. ஓவியச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர்.ச.கமலகண்ணன் ஆகியோர்.

நிகழ்வில் பல்லாவரம் தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, திருநீர்மலை பேரூர் தி.மு.கழக செய லாளர்.த.ஜெயகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்து சிறப்பித்தனர்.

எழுத்தாளர் வே.மதி மாறன் பெரியார் மீது ஏவப்பட்ட கணைகள்' என்ற பொருளில்  மிக சிறப்பாக ஒரு ஆய்வு கட்டுரை போல் சிறப்புரை யாற்றினார். சிறப்புரையின் தொடக் கத்தில் எனக்கு இந்த தலைப்பை தந்தவர் திராவிடர்  கழகத்தின் துணை தலைவர் கழகத்தின் மின்சாரம் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தான்.

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் துணை தலைவர் அவர்களும் என்னை எந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தாலும் என்னை நலம் விசாரித்து என்னை உற்சாகப்படுத் தும் விதமாக தைரியமாக எழுதுங்கள், பேசுங்கள் எதையும் சந்திப்போம் என்று என் முதுகில் தட்டி கொடுத்து பாராட் டுவது என் வாழ்வில் கிடைத்த மிக பெரும் பேறு என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.

நிகழ்வில் தாம்பரம் மாவட்ட தலை வர் ப.முத்தையன், மா.இராசு, தகடூர் சம்பத், ஜெ.குமார், கு.பிரித்தா, மருத்துவர் சரவணன், கரைமா நகர்.தே.சுரேஷ், சு.அமுதன், க.கலாரஞ்சனி, க.பகலவன், வழக்குரைஞர் அருணாசலம், அ.சுரேஷ், கார்த்திகேயன், நங்கநல்லூர் தமிழினியன், மறைமலை நகர் துரை.முத்து, தாம்பரம் மு.மணிமாறன், கு.சோமசுந் தரம், ராமாபுரம். ஜெனார்த்தனம், ஊரப் பாக்கம் வழக்குரைஞர் உத்திரகுமாரன், இராமண்ணா, அரங்க.பொய்யாமொழி, சீனிவாசன், சோமங்கலம் இனமாறன், பம்மல்கோபி, அரும்பாக்கம் தாமோ தரன், பீர்க்கன்காரனை சு.மனோகரன், ம.மாரியம்மாள், பல்லாவரம் கெ.விஜயகுமார், வி.பாக்கியலட்சுமி, வி.தமி ழினி, ஆவடி சி.வ.வேலு, சோ.சுரேஷ், இராமசாமி, மா.குணசேகரன், லட்சுமி பதி, மோ.பிரபாகரன், நாகராசன், பர சுராமன், ராஜேஷ், திராவிட இயக்க தமிழர் பேரவைதாம்பரம் இரா.இளங்கோ, புரட்சிகர இளைஞர் முன் னணி சீராளன் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner