எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்குகிற அரசு நூலகங்களில் அவர்கள் விரும்பும் நூல்களோ, ஏடுகளோ கிடைப்பதில்லை. மாறாக ஆளுங்கட்சிக்கு துதிபாடும் ஏடுகளும், நூல்களுமே இடம் பெறுகின்றன.

குறிப்பாக பகுத்தறிவுச் சிந்தனையை, அரசியலமைப்புச் சட்டம் 51ஏ(எச்) பிரிவின்படி (நூலகங்களுக்குச் சட்டப்படி) வளர்க்கத் துணை நிற்கும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, Modern Rationalist போன்ற ஏடுகளையும், இன்னும் இது போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட ஏடுகளையும் தடை செய்வது எந்த விதத்தில் நியாயமென்று புரியவில்லை.

இந்த லட்சணத்தில் இன்னொரு கொடுமை யும் அரங்கேறி இருக்கிறது. ஆம்! உத்தரகாண் டில் 373 கோயில்களில் சூத்திரர்கள் நுழையக் கூடாது என பெயர்ப்பலகை வைக்கப்பட் டிருக்கிறதென்றால் இதுவா மதச்சார்ப்பற்ற நாடு? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கின்ற நாடு? ஆளுங்கட்சியினரே சட்டத்தை மதிக்கவில்லையென்றால், பிறகு யாருக்காக சட்டம்? இது என்ன மக்களாட் சியா? அல்லது மக்களாட்சியின் பெயரில் நடைபெறும் பிற்போக்கு இந்துத்வா ஆட் சியா? குடியரசுத் தலைவரையே கோயிலுக்கு வெளியே நிறுத்தி அவமானப்படுத்துவதுதான் இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் அழகா?

மனிதநேயத்தை மதிக்காத மதம், மனி தர்களுக்குத் தேவையா? பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்கிறது உத்தரகாண்ட் நீதிமன்றத்தின் தீர்ப்பு! நீதி மன்றத் தீர்ப்பையே மதிக்காத இவர்க ளைத் தண்டிப்பது யார்? சட்டம் ஏழை, எளியோர்களைக் கண்டால் வெறி கொண்டு பாய்வதற்கும், பார்ப்பனர்க ளைக்கண்டால் வாலாட்டி பின்செல்வதற் கும் தானா? மாணவர்களும், இளைஞர் களும் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்பவர்கள் யார்?

நூலகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போதே, ஒரு மாணவர் விஜயபாரதம் என்ற ஒரு இதழைத்தந்து அய்யா! இதைப்படித்துப் பாருங்கள் எனக்கொடுத்தார்! (20.7.2018) அதில்...

கேள்வி: நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது. அது என்னை மிகவும் பாதித்தது. அதுதான் பூணூல் என்கிறாரே கமல்?

பதில்: நீங்க பூணூலைத் தவிர்க்கலாம், மாமிசம் சாப்பிடலாம், தண்ணியடிக்கலாம், தாலிகட்டாம சேர்ந்து வாழலாம்! மொத் தத்தில் நீங்கள் ஒரு ஹிந்து விரோதி.

பூணூலுக்கு விளக்கம் சொல்லமுடியாத விஜயபாரதம் கமலகாசன் மீது சேறள்ளி வீசியிருக்கிறது. பூணூலுக்கு இந்த நாட்டில் எவ்வளவு ஆணவம் இன்னமும் இருக்கிறது என்பதை இப்போது கமலகாசன் நன்கு உணர்ந்து கொண்டிருப்பார்.

தொப்பியை எல்லா முசுலீம்களும் அணிய முடிகிறது. சிலுவையை எல்லா கிருத்துவர்களும் அணிய முடிகிறது. ஆனால் பூணூலை மட்டும் எல்லா இந்துக்களும் அணிய முடியவில்லையே ஏன்? ஏன்?

தந்தை பெரியாரின் கைத்தடி, ஜாதி, மதம், கடவுள் இவைகளுக்கு குறி வைத்து தாக்கி நொறுக்கியது ஏன் என்பதை இனியாவது கமல் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!.

குடந்தை திராவிட மாணவர் பவள விழா மாநாடு, மாணவர்களிடையே எத்த கைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நூலக மாணவரின் பேச்சும் செயலுமே வெளிப்படுத்தி விட்டது!.

இனி சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடிக்க திராவிட மாணவ, இளை ஞர் பட்டாளமே போதும்! இது பெரியார் பிறந்த மண். இங்கே சிறியோரின் சேட்டை களுக்கு இடமே இல்லை!.

திராவிடர் கழகத் தலைவர் காலத்தே செய்த இந்த உதவியை நாடும் மறக்காது! நன்றியுள்ள உள்ளங்களும் மறக்காது!!

- நெய்வேலி க.தியாகராசன்

கொரநாட்டுக் கருப்பூர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner