எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.14 திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலமின்றி கடந்த 7.8.2018 அன்று மாலை சென்னையில் இயற்கை எய்தினார். கலைஞர் மறைவையொட்டி, கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு, கழகத்தின் சார்பில் ஏழு நாள்கள் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. ஏழு நாள்கள் கழிந்த நிலையில் கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப்பேரணி கழகத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து  இன்று (14.8.2018) காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகத்தின்  அமைதிப் பேரணி தொடங்கியது. கலைஞர் படத்துடன் பதாகை, கழகக்கொடிகளை ஏந்தி அமைதிப் பேரணி கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் புறப்பட்டது.

கட்டுப்பாட்டின் நேர்த்தி

மானமிகு சுயமரியாதைக்காரரான  கலைஞருக்கு வீரவணக்கம், அமைதிப்பேரணி என்ற பதாகை முன்னே எடுத்துச்செல்லப்பட, கறுப்புக் கொடி உயரே தலைதாழ்ந்து பறக்க, பெரியார் பிஞ்சுகளும், கழகத்தின் அனைத்து அணியினரும் இராணுவக் கட்டுப்பாட்டுடன் இருவர் இருவராக அண்ணா சாலையில் அணிவகுத்து புறப்பட்ட காட்சி கண்டாரை வியக்கவும், மதிக்கவும் செய்தது.

அண்ணா சாலையிலுள்ள சிம்சன் பெரியார் சிலை,  வாலாஜா சாலை வழியே கடற்கரை காமராசர் சாலையில் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடத்தை அடைந்தது.

அண்ணா நினைவிடம் அருகில் அமையப்பெற்றுள்ள கலைஞர் நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத் தினார்.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி,  வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணி அமைப் பாளர் ஆ.வீரமர்த்தினி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ் செல்வன்,   திராவிடர் வர லாற்று ஆய்வு மய்ய செய லாளர் பேராசிரியர் ந.க.மங் களமுருகேசன், விழிகள் வேணுகோபால், பேராசிரியர் இரத்தினசபாபதி, பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், அச்சக மேலாளர் க.சரவணன், அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், மகளிரணி, மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  துணை செயலாளர் நா.பார்த்திபன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பொழிசை கண்ணன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு,  அமைப்பாளர் உடுமலை வடிவேல், தலைமைச்செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, பொதுக்குழு உறுப்பினர் எண்ணூர் மோகன், வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், சி.வெற்றி செல்வி, செ.கனகா, பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார் களம் இறைவி,  தங்க.தனலட்சுமி, மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணி யம்மை, போளூர் பன்னீர்செல்வம், திருவண்ணாமலை கவுதமன், ஓசூர் செல்வம்  உள்பட ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, மகளிர் பாசறை, நகர பொறுப்பாளர்கள், பெரியார் பிஞ்சுகள் அமைதிப் பேரணியில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சென்னை மண்டலத்திற்குட்பட்ட தென்சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங் களிலிருந்து பெரியார் பிஞ்சுகள், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள், மாணவரணி, இளைஞரணி மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் கழகக்கொடியேந்தி கட்டுப்பாடுடன், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி அமைதிப் பேரணியில் பங்கேற்றார்கள். நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின்னர் கழகத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் பின்னர் அண்ணா நினைவிட முகப்புப் பகுதியில் தமிழர் தலைவர் வருகையை எதிர்பார்த்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமையில் காத்திருந்தார்கள். அவர்களுடைய அன்பை புரிந்துகொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வண்டியிலிருந்து இறங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியருடன் உழவர் உழைப்பாளர் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரும் பெருமகிழ்வுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner