எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஆக. 14 திருச்சி, இலால்குடி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 12.8.2018 அன்று காலை 10 மணியளவில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஏற்று பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பேசுகையில், நமது இயக்கத் திற்கு தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர்  கழக மாநாட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின்படி செய்து முடித்த தின் விளைவாக, இந்த மாநாட்டை பற்றி ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி போன்ற அமைப்புகளின் தவறான சித்தரிப்பு களையெல்லாம் தாண்டி சமூக வலைதளங்களில் மாநாட்டு வெற்றியை பார்க்க முடிந்தது.

தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகள் நடைபெற்று வருவதால் நமது பணி மேன்மேலும் நடக்க வேண்டும். அதற்கு அனைத்து தோழர்களும் எழுச்சியோடு உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  இக்கூட்டத்திற்கு மண்டல தலைவர் மு.நற்குணம், மண்டல செயலாளர் ஆல்பர்ட், திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், இலால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திண்டுக்கல்லில் ஆக.18 அன்று நடைபெறவுள்ள பெரியார்பிஞ்சு மாநாட்டிற்கும், திருச்சி யில் தமிழர் தலைமையில் பிரச்சார நெடும்பயணம் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மேலும் இயக்க வளர்ச்சி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

1.மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட பெரியாரின் மாணவரும், தி.மு.க. தலைவருமான  கலைஞர் அவர்களின் மறைவிற்கு திருச்சி, இலால்குடி மாவட்ட திராவிடர் கழகம் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும், அவரது குடும்பத்திற்கும் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். 2. நீதிபதி நியமனங்களில் இடஒதுக்கீடு தேவை என் பதை வலியுறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி வரும் 16.8.2018 அன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில், நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத் திற்கு கழக தோழர்கள் பெருமளவில் பங்கேற்று வெற்றி அடைய செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. 3. இயக்க வரலாற்றில் முதன்முறையாக 18.8.2018 அன்று காலை முதல் இரவு வரை திண்டுக்கல்லில் நடை பெறும் பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டிற்கு திருச்சி, இலால்குடி மாவட்டங்களிலிருந்து பெருமளவில் பெரி யார் பிஞ்சுகளை பங்கேற்க செய்வது என்று தீர்மானிக்கப் பட்டது. 4. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை செப்.17 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழாவாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை  சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

5. தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணம் வரவேற்பு பொதுக்கூட்டத்தை தமிழர் தலைவர் அவர்கள் அறிவிக்கும் நாளில் திருச்சியில் மிகச் சிறப்பாக நடத்து வதென்றும், அக்கூட்டத்தை விளக்கி சுவர் எழுத்து பிரச் சாரங்கள், நிதி வசூல் உள்பட அனைத்தும் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 6. திருச்சி மாநகர அமைப்பாளராக காட்டூர் கனகராஜ் நியமிக்கப்படுகிறார். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பெல் ம.ஆறுமுகம், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், செ.பா.செல்வம், ஆண்டி ராஜ், காட்டூர் காமரா-ஜ், சங்கிலிமுத்து, ஜெயராஜ், ஆதி, அம்பிகா, அம்மணி, அரங்கநாயகி, மணிகண்டம் ஒன்றிய தலைவர் செபஸ்தியான், ப.க. குத்புதீன்,  சிறீரங்கம் நகர தலைவர் கண்ணன், செயலாளர் முருகன், பந்தநல்லூர் ஒன்றிய தலைவர் மாவடியான், இலால்குடி மாவட்ட துணைத் தலைவர் அட்டலிங்கம், மண்ணச்சநல்லூர் ஒன் றிய தலைவர் கு.பொ.பெரியசாமி, செயலாளர் முருகேசன், அமைப்பாளர் கா.பெரியசாமி, ப.க.முத்துசாமி, ராஜேந் திரன், பாபு, ராமசாமி,  தேவா, ராஜசேகர், மகாமணி, பொதுக்குழு உறுப்பினர் செம்பரை தர்மராஜ்,வி.சி.வில்வம், இலால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, விடுதலை கிருஷ்ணன், பென்னி, தியாகராஜன், ப.க. மாவட்ட தலைவர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், ஜெயில்பேட்டை தமிழ்மணி, துறையூர் சண்முகம்,முத்து, ஜான் லூயிஸ், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் வீரமணி, மண்டல இளைஞரணி தலைவர் அன்புராஜா, ஒன்றிய மகளிரணி செல்வி உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கடவுள் மறுப்பு வாசகத்தினை மகளிரணி தலைவி கிரேசி கூறினார். மாநகர தலைவர் மருதை வரவேற்புரையாற்றினார். நிறைவாக அமைப்பாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner