தேவகோட்டை, ஆக.23 தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரை பெரும்பயண விளக்க தெருமுனைக் கூட் டம் காரைக்குடி கழக மாவட்டம் தேவ கோட்டை தியாகிகள் பூங்காவில் நடை பெற்றது.
நகர செயலாளர் வழக்குரைஞர் வி.முத்தரசு பாண்டியன் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட ப.க.துணைத் தலைவர் ந.தம்பிராசு வரவேற்புரை வழங் கினார்.மாவட்ட து.தலைவர் கொ.மணி வண்ணன் தொடக்கவுரையாற்றினார்.
தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா கலைஞர் பற்றிய சிறப்புகளை எடுத்துச் சொல்லி இரங்கலுரையையும், மேற்கண்ட கூட்டத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியதில் செய்த இடையூறுகளை கண்டித்தும் உரையாற்றி னார். நிறைவாக மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி கூட் டத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரை யாற்றினார். கூட்டம் நடைபெற்ற பூங்காவை சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று செவிமடுத்தனர். நிகழ்வில் மாவட்ட து. செ.இ.ப.பழனிவேலு, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் கல்லூர் சி.செல்வமணி, காரைக்குடி நகர செயலாளர் தி.கலைமணி, காரைக்குடி நகர ப.க.தலைவர் கி.மணி வண்ணன், ப.சுந்தரம், மாவட்ட ப.க. தலை வர் விஞ்ஞானி எஸ்.முழுமதி, மாவட்ட ப.க.து.செயலாளர் எழுத்தாளர் ந.குமரன்தாசு, தி.தமிழமுதன், கொரட்டி வீ.பாலு, மானகிரி ச.கைவல்யம், திருமணவயல் பன்னீர்செல் வம், வாரியன்வயல் ஜோசப், ஆசிரியர் மு.முருகன்தொண்டி ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் நகர கழக தலைவர் வீர.முருகப்பன் நன்றி கூறினார்.