எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பத்தூர், ஆக.25 திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவரின் இல்லத்தில்,மாவட்டதலைவர்அகிலாஎழிலரசன்தலை மையில் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கூட்டத்தின் நோக்கம் குறித்து பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கே.சி.எழிலரசன் தொடக்க உரையாற்றினார்.அவர் தனது உரையில், தந்தை பெரியார் தொண்டு, உழைப்பு, அவரால் நாம் பெற்ற பலன் குறித்தும், இன்றைக்கு தமிழர் தலை வரின் உழைப்பால் தந்தை பெரியார் கொள்கை நிலை பெற்றிருப்பதும் - இட ஒதுக்கீடு அதிகரித்திருக்கிறது என்றும் உரையாற்றினார்.

மேலும் மத்தூர் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது, அதற்காக உழைத்த தோழர்களுக்கு பாராட்டினைத் தெரிவித்தார். தற்போதைய கழகத் தலைமை செயற் குழுவில் எடுத்த முடிவினை செயலாக்கும் விதத்தில் நமது மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தா வினை முழுமையாக முடித்தல், தந்தை பெரியார் 140 ஆவது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுதல் குறித்தும் உரையாற்றினார். ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகம் சிறப்பாக செயல்பட்டு 330 உண்மை சந்தாவினை வழங்கிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டினைத் தெரி வித்தார்.

தொடர்ந்து அண்ணா சரவணன், சி.தமிழ்ச்செல்வன், மா.சி.பாலன், மு.இந்திராகாந்தி, புலவர் அண்ணாமலை, வ.ஆறுமுகம், ஊற்றங்கரை பொன்முடி, சிவராசு, அண்ணா அப்பாசாமி, வேங்கடம், மத்தூர் கி.முருகேசன், திருமாறன், க.வெங்கடேசன், பு.கணேசன், அரசகுமார், சோலையார்பேட்டை க.மதியழகன், அக்ரி அரவிந்த், திருப் பத்தூர் தோழர் காளிதாஸ், நேரு, கலை, வாணியம்பாடி அன்பு, தாஸ், எம்.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர். கூட்டத்தில் கே.கே.சி.கமலம்மாள், அன்பழகன், சபரிதா, மணிமொழி, ரேகா உள்ளிட்ட மகளிரணியினர் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

1. எப்போதும் தம்மை மானமிகு சுயமரியாதைக்காரன் என்று அழைத்துக் கொண்டவரும் தி.மு.க. தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர், பகுத்தறி வாளர் கழகத்தின் மாவட்ட செயலாளர் பெ.இரா.கனகராஜ் அவர்களின் புதல்வன் க.அறிவழகன், மாவட்ட இணைச்செயலாளர் அரங்க.இரவி தாயார் லெட்சுமி அம்மாள் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை இக்கலந்துரையாடல் கூட்டம் தெரிவிக்கிறது.

2) தலைமை செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது, குறிப்பாக மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தாவினை முழுமையாக முடிப்பது.

3) தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழாவினை 200க்கும் மேற்பட்ட இடங்களில் தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணிவிப்பது,  அலங்கரிக்கப்பட்ட அய்யா படத்துடன் ஊர்வலம் செல்லுவது, கொடியேற்றம், பெயர்ப் பலகை வைத்தல், தகவல் பலகை திறப்பு, மரக்கன்றுகள் நடுதல், இனிப்பு வழங்கல், சிலைகளுக்கு மாலை அணிவித்தல், ஆம்பூர், லக்கிநாயக்கம்பட்டி, மத்தூர் ஆகிய ஊர்களில் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடத்துதல் என தீர்மானிக்கப்படுகிறது.

4) கீழ்கண்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்: மத்தூர் ஒன்றிய துணைத்தலைவர் சா.தனஞ்செயன், மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் கவிஞர் நா.சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.வசந்தி, திருப்பத்தூர் நகர இளைஞரணி தலைவர் சுரேஸ், வாணியம்பாடி நகர தலைவர் அன்பு, நகர செயலாளர் தாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner