திண்டுக்கல், ஆக. 28- விடுதலை நாளேட்டிற்கு சந்தா சேர்ப்பு இயக்கத்தின் கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல்லில் 23.8.2018 அன்று மாலை 6 மணியளவில் மாவட்ட தலைவர் இரா.வீர பாண்டியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தென் மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராஜா தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் வே.செல்வம் கருத்துரை வழங்கினார். 20.8.2018 அன்று சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் "விடுதலை" நாளேட்டிற்கு 5000 சந்தாக்களை சேர்த்து வழங்குவது தொடர்பாகவும், புதிய சந்தாக்களை சேர்ப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மண்டலத் தலைவர் மு.நாகராசன், மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், திராவிடர் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மு.செல்வம், கே. ஜி.எஸ்.ஜீவானந்தம் உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.