எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவொற்றியூர், ஆக. 28, வட சென்னை மாவட்ட, திருவொற் றியூர் பகுதி திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 26.7.2018 அன்று மாலை 6.30 மணியள வில் எழுத்துக்காரன் சாலையில் கல்வி வள்ளல், பச்சைத்தமிழர் காமராசரின் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவொற் றியூர் பகுதி இளைஞரணி தலைவர் பா.பாலு தலைமை யில், திராவிடர் கழக அமைப் புச் செயலாளர் வி.பன்னீர்செல் வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரை ஞர் சு.குமாரதேவன் அவர்களது முன்னிலையில் தோழர் இரா.சதீஷ்குமார் வரவேற்புரையாற் றினார் அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் பகுதி கழகத் தலைவர் பெரு.இளங்கோ அவர்கள் தொடக்க உரையாக பார்ப்பனீயத்தின் இந்து மனு தர்மம், நம்மவர்களை எப்படி அடிமையாக்கி வைத்திருந்தது என்று பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய கழக அமைப் புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம் அவர்கள் தந்தை பெரியாரின் ஆலோச னையைக் கேட்ட காமராசர் அவர்கள், ராஜாஜி மூடிய 6000 பள்ளிக்கூடங்களை மீண்டும் திறந்து வைத்ததை நினைவு படுத்தினார். கூட்டத்தின் கருத் துரையாக திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னரெசு பெரியார் அவர்கள்:& காமராசர் மாணவர் களுக்காக கொண்டுவந்த வளர்ச் சித் திட்டங்களையும் அதன் தொடர்ச்சியாக திராவிடர் கழ கத் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் சமூக நீதிக் கான போராட்டத்தையும், திரா விடர் கழக வரலாற்றையும் விரிவாகக்கூறி, இன்றைய சூழ லில் திராவிட மாணவர் கழகத் தில் மாணவர்கள் ஏன் சேர வேண்டும் என்பதையும் விளக் கினார். இந்நிகழ்வில் சிறப் புரை ஆற்ற வருகை புரிந்திருந்த திராவிடர் கழகத்தின் தலைமை கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர் கள் தந்தை பெரியார் அவர்கள் காமராசருக்கு பச்சைத் தமிழர் எனும் பட்டம் கொடுத்ததின் விளக்கத்தையும், கல்வி வள்ள லால் கைநாட்டு போட்டவர் களின் பிள்ளைகளுக்கு மருத் துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் ஒதுக்கியதையும், கேட் போர் பெருமை போற்றும் விதத்தில் விளக்கினார்.

மேலும் ராஜாஜி, பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்திற்கு அரசு விடு முறை அறிவித்திருந்ததை காம ராசர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் அதனை ரத்து செய் ததையும், சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணத்திற்கு செல்லும் தந்தை பெரியாருக்காக காலை 7 மணிக்கு செல்லவேண்டிய கப்பலையே நிறுத்தி தாமதமாக புறப்பட வைத்தவர் காமராசர் என பேசிய போது கூட்டத்தில் இருந்தவர்களும், அக்கம் பக்கம் இருந்த பொதுமக்களும் பலத்த கரவொலி எழுப்பினர். இரண்டு பிரதமர்களை உரு வாக்கிய கிங்மேக்கர் எனும் பெருந்தலைவர் காமராசர்; அமெரிக்க அதிபர் டில்லி வந்த போது காமராசரை சந்திக்க விரும் பினார் ஆனால் காமராசர் நேர மில்லை என்று கூறி சந்திக்க மறுத்து விட்டார்.

உடன் இருந்த அதிகாரிகள் கேட்ட போது அந்த அமெரிக்க அதிபர், நமது அண்ணாதுரை அவர்கள் அமெரிக்காவில் இவரை சந்திக்க நேரம் கேட்டபோது இவர் மறுத்திருக்கிறார் என்று கூறினார். பெருந்தலைவரின் மொழி உணர்வு, இன உணர் வின் காரணமாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காமராசர் ஆட்சியின் சாதனைகள் என்று புத்தகமாக அச்சடித்து  நாடு முழுவதும் பரப்பினார் என்பன போன்ற பல்வேறு நிகழ்வுகளை எடுத்துரைத்து சிறப்புரையாற் றினார். இறுதியாக இளைஞ ரணி தோழர் மு.ரா. திலிப் வருகை புரிந்தவர்களுக்கும், வணிகப் பெருங்குடி மக்களுக்கும், பாது காப்பு வழங்கிய காவல்துறையினருக்கும் நன்றி கூறினார். இக்கூட்டத்தின் ஏற்பாடுகளை, வட சென்னை மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் மற்றும் செயலாளர் சோ.சுரேஷ் அவர்களும் ஒருங்கிணைத்தனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்றோர்

பொதுக்குழு உறுப்பினர் எண் ணூர் வெ.மு.மோகன், பெரியார் பெருந்தொண்டர் எண்ணூர் காளியப்பன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், திரு வொற்றியூர் பகுதி செயலாளர் ந.இராசேந்திரன், செந்துறை இராசேந்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், இளைஞரணி அமைப் பாளர் வ.தமிழ்ச்செல்வன்- சத் தியா, மாணவர் கழக அமைப் பாளர் ம.பரிதின், புதுவண்ணை பகுதி இளைஞரணி தலைவர் செல்வன், திருவொற்றியூர் பகுதி தோழர்கள் ஜான்சன், சங்கர், உ.அசோக், ஆனந்த், கு.சிவா, சு.செல்வா, ஹேமந்த்ராஜ், புரசைப்பகுதி இளைஞரணி செயலாளர் கா.காரல்மார்க்ஸ், ராயபுரம் ரேவந்த்குமார், பெரம் பூர் முரளிகிருஷ்ணன், பெரி யார்திடல் தோழர்கள் சு.விமல் ராஜ், அ.அம்பேதகர், சட்டக்கல் லூரி மாணவர் செ.பிரவீன்குமார், மாநிலக்கல்லூரி மாணவர் வ. வேலவன், சோழவரம் சக்ரவர்த்தி தோழர் களும், பொதுமக்களும் பெருந் திரளாக வந்து கூட் டத்தில் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner