எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஆக. 29 காரைக்குடி நகர கழகம் சார்பில் ரயில்வே சாலையில் தெருமுனை பரப்புரை கூட்டம் நகர செயலாளர் தி.கலைமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு வரவேற்புரை வழங்கினார்.

முதலாவதாக தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சி தொடங் கப்பட்டது. தி.மு.கழக நகர செயலாளர் நா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் தி. என்னாரெசு பிராட்லா கலைஞர் அவர்களின் மாண்பை தெரிவிக்கும் வகையில் அவரது சமூக சீர்திருத்த பணிகளை பட்டியலிட்டு உரையாற்றினார்.நிறைவாக மாநில மாண வரணி கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(H) இல் சொல்லப்பட்டுள்ள விவரங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.வரும் செப். 23 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரை பயணத்தின் நோக்கங்களையும் விரிவாக பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்  கொ.மணிவண்ணன், மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, துணை செயலாளர் ந.குமரன்தாசு, நகர ப.க.தலைவர் கி.மணிவண்ணன், தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், வாரியன்வயல் ஜோசப், காரைக்குடி நகர மேனாள் தலைவர் தி.தமிழமுதன், து.தலைவர் வீ.பாலு, தி.புரூனோ என்னாரசு, பெரியார் பிஞ்சு செ.க.யாழினி, தி.மு.க.வட்ட செயலாளர் ரெத்தினம், மேனாள் கவுன்சிலர் ராசு உள் ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர். முன்னதாக அப்பகுதியில் அமைக்கப் பட்டிருந்த கம்பத்தில் கழக கொடியினை சே.மெ.மதிவதனி ஏற்றி வைத்தார்.முடிவில் மாவட்ட ப.க.செயலாளர் ந.செல்வராசன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner