எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 30 விடுதலை' விநியோகம் தொடர்பான வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.8.2018 அன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து "விடுதலை" சந்தா சேர்ப்புப் பணிகள் பற்றி எடுத்துக்கூறினார். கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் "விடுதலை" சந்தா சேர்ப்பு குறித் தும், "விடுதலை" கடை விநியோகம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.சுரேசு அனை வரையும் வரவேற்றார்.

க.சரவணன் (அச்சக மேலாளர்) தொடக்க வுரையாக விடுதலை' விநியோகம் செய்ய வட சென்னையில் 13 பகுதிகளில் 215 கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது என்பதை பற்றி விவரித்து கூறினார்.

கழகத்துணைத் தலைவர்

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகத் தோழர்களையும், இனவுணர் வாளர்களையும், அனைத்துக் கட்சி பொறுப் பாளர்களையும் அணுகி "விடுதலை" விற் பனைக்குக் கிடைக்கும் கடைகள் பற்றி எடுத்துக்கூறி அவர்களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், நூலகங்களில் "விடுதலை" ஏடு இடம்பெறச் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும், தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாளான 17.9.2018க்குள்ளாக சந்தா சேர்ப்புப் பணியினை நிறைவு செய்திட வேண்டு மெனவும் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் திமுக தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் "விடுதலை" ஏட்டின் பால் வைத்திருந்த பெருமதிப்பு குறித்தும், நாள் தவறாது "விடுதலை" ஏட்டினை படிப்பவராக அவர் பெருமிதம் கொண்டிருந்ததையும் குறிப் பிட்டார்.

கழகப் பொதுச் செயலாளர்

திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் தனது உரையில், தற்போது விடுதலை 215 கடைகளுக்கு 15 முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. முகவர்களின் ஒருங்கிணைப்பாளராக சுபாஷ் செயல்பட்டு வருகிறார் என்று கூறி சுபாஷை கழக தோழர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் வடசென்னை பகுதியில் விடுதலை'யை நேரடியாக கடைகளுக்கு விநியோகம் செய்யும் முகவர்களான மோசஸ் (புரசைவாக்கம்), பாஸ்கர் (புளியந்தோப்பு), கங்காதர் (எழும்பூர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை) ஆகியவர் களை அறிமுகப்படுத்தினார். கழக தோழர்களுக்கு முகவர்கள் மூலம் விநியோகம் செய்யும் கடைகளின் முகவரியை தெளிவாக கூறினார்.

பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் தங்கள் பகுதிக்குரிய முகவர்களுடன் கழக தோழர்கள் தொடர்பு வைத்து கொள்ளுங்கள் 'விடுதலை' நாள்தோறும் வாசகர்களுக்கு சேர்ப் பதே நமது குறிக்கோள் என்றும் குறிப்பிட்டார்.

தோழர்கள் செய்ய வேண்டியது

* தங்கள் பகுதிக்குரிய முகவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.

* முகவர்கள் மூலம் தங்கள் பகுதியில் போடப்படும் கடை விற்பனையாளர் களிடம் தொடர்பு கொள்ளுதல்.

* தங்கள் பகுதிக்கு அஞ்சல் மூலம் வரும் சந்தாக்களை, தங்கள் பகுதி கடைகளில் வாங்க வைக்க ஏற்பாடு செய்தல்.

* தங்கள் பகுதியில் உள்ள கழக தோழர் கள், பிற கட்சி பிரமுகர்கள் மற்றும் விடுதலையை வாங்க ஆர்வமுள்ள தோழர்களை கண்டறிந்து அவர்களை 'விடுதலை' சந்தாதாரர் ஆக்க வேண்டும்.

* புதிதாக சேர்க்கப்படும் 'விடுதலை' வாசகர்களுக்கு (சந்தாதாரர்களுக்கு) தாமதமின்றி நாள் தோறும் 'விடுதலை' கிடைக்க தங்கள் பகுதி கடைக்காரர், முகவர், தலைமை நிலையம் ஆகிய வற்றோடு தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்திட வேண்டும்.

* வாய்ப்புள்ள இடங்களில் தங்கள் பகுதி கடைக்காரர் மூலமாகவே அதி காலையிலோ, மாலையிலோ அந்த பகுதி சந்தாதாரர்களுக்கு நேரடியாக விடுதலை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தல்.

* தங்கள் பகுதியில் உள்ள பொது நூல கங்கள், பள்ளி, கல்லூரி நூலகங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், தேநீர்க் கடைகள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகமாகப் புழங்கும் இடங்களை தேர்ந்தெடுத்து நன்கொடை யாளர்கள் மூலம் 'அறிவு கொடையாக' நாள்தோறும் 'விடுதலை' வழங்கலாம். அந்த இடங்களுக்கு நேரடியாக நாள் தோறும் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தல்.

மேற்கண்ட பணித்திட்டங்களை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கழக தோழர் களிடம் எடுத்துக் கூறினார்.

கழகப் பொறுப்பாளர்கள் உரை

பின்னர் அயனாவரம் பகுதியை சேர்ந்த தோழர் சு.துரைராஜ், தானா தெருவில் தினமும் 4 பிரதிகள் விற்பனை செய்து தருகிறேன் என்று கூறினார்.

அடுத்து பேசிய மாவட்ட தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன் விடுதலை' நாளி தழுக்கு போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தலாம். வாரம் ஒருமுறை போஸ்டர் ஒட்டலாம். போஸ்டரில் சிறப்பான வாசகங்களை இடம் பெற செய்து ஒட்டலாம் என்று கூறினார்.

மேலும் பல தோழர்கள் என்னிடம் விடுதலை கடைகளில் கிடைக்கவில்லை என்று கூறுகின்ற போதெல்லாம் நான் பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு பின் விற்பனைக்கு வரும் என்று கூறிவந்தேன். ஆனால் அதனை பொதுச்செயலாளர் உண்மையாக செய்து விட்டார் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

பின்னர் சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் மூலக்கடை பகுதியில் 20 விடுதலை, மாதவரம் பகுதியில் 5 விடுதலைகள் தினந்தோறும் விற்க நான் பொறுப்பேற்கிறேன் என்று கூறினார்.

இறுதியாக பெரியார் திடல் மேலாளர் ப.சீதா ராமன் ஒவ்வொரு தோழரும் ஒரு மாதத்திற்கு 3 நபரை (திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தை கள், பிறகட்சி பிரமுகர்கள்) கடையில் வாங்க வையுங்கள் அல்லது அவர்களது முகவரியை தாருங்கள், நாங்களே அவர்களது வீடுகளில் விடுதலையை தினந்தோறும் கொண்டுபோய் சேர்க்கிறோம். முதல் மாதம் 100 பேர் 3 நபர்களை அறிமுகம் செய்தால் 300 நபர்கள் அடுத்த மாதம் 600, அதற்கடுத்த மாதம் 900 இவ்வாறு ஆசிரியர் பிறந்த நாள் அன்று வடசென்னையில் விடுதலை' நாளிதழ் நாள் ஒன்றுக்கு 1000 விற் பனை ஆகிறது என்று ஆசிரியரிடம் கூறினால் அதைவிட ஆசிரியருக்கு பெரிய பரிசு இல்லை என்று கூறி உரையை முடித்தார்.

மேலும் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், "விடுதலை" ஏடு விற்பனைக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாகக் கூறினார்.

உடற் கட்டாளருக்குப் பாராட்டு

மாதவரம் கழக இளைஞரணி அமைப்பாளர் அ.பிரகாஷ் உடற்கட்டுப் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் 6ஆவது இடத்தை பெற்றுள்ள மைக்கு, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணி வித்துச் சிறப்பு செய்தார்.

கலந்து கொண்டோர்

வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி, வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் கி.இராமலிங்கம், சி.பாசுகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நா.பார்த்திபன், சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வியாசர்பாடி செயலாளர் கெடார் சு.மும்மூர்த்தி, புதுவண்ணை செயலாளர் செல்வம், புரசை தலைவர் சு.அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் செ.பிரவீன்குமார், வட சென்னை மாவட்ட மாணவர் கழக செயலாளர் வ.வேலவன், க.தமிழினியன், பகலவன் இரா.கோபால், இரா.சதிசுகுமார், தையற்கலைஞர் எஸ்.சுப்பையா, பா.பார்த்திபன், பா.நதியா, ஓவியர் சிகரன், விஜய், அம்பேத்கர், ஜெ.பிரபுகுமார் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

புரசை இளைஞரணி அமைப்பாளர் கா.காரல்மார்க்சு நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner