எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஆக.30 காரைக்குடி கழக மாவட்டம் கல்லல் ஒன்றியம் பலவான்குடிகிளை கழகம் சார்பில் தெருமுனை பரப்புரை கூட்டம் ஒன்றிய தலைவர் ஆ.சுப்பையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா தொடக்கவுரையாற்றினார்.

அவர் தனது உரையில், முத்தமிழ் அறிஞர் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு அவரது சமூக புரட்சி சாதனைகளை பேசி மரியாதை செலுத்தினார். நிறைவாக மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப் புரையாற்றினார். அவர் தனது உரையில்: அரசியலமைப்புச் சட்டம் 51(A)H சொல்லும் கருத்துகளை விரிவாக எடுத்து பேசினார். கூட்டத்தில் மாநில ப.க.துணை தலைவர் முனைவர் மு.சு.கண்மனி, மாவட்ட துணைசெயலாளர் இ.ப.பழனி வேலு, காரைக்குடி நகர து.தலைவர் வீ.பாலு, மேனாள் நகர தலைவர் தி.தமிழ முதன், பலவான்குடி கிளை தி.மு.கழக செயலாளர் ராஜா, தி.மு.க.நிர்வாகி சேது, பெரியார் பிஞ்சு யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner