எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நள்ளிரவு 1 மணிக்கு தோழர் இயக்கத்தில் இணைந்த அதிசயம்

பாலாக்குடி, ஆக.31 மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ் செல்வி அவர் களுக்கு 16.8.2018 அன்று மதியம் 2 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் பேசியபோது தன் பெயர் கே.சிறீதர் எனவும், திருப்பனந்தாள் ஒன்றியம் பாலாக்குடி கிராமத்தில் வசிப் பதாகவும் கட்டடத் தொழி லாளர் பணி செய்வதாகவும் கூறி அவர் திராவிடர் கழகத்தில் இணைய விரும்புவதாக கூறி யுள்ளார். மதிய உணவு வாங்கி வந்த தாளில் பெரியார் பிஞ்சு மாநாடு தொடர்பாக உங்கள் எண் அதில் இருந்தது. அதைப் பார்த்து நான் உங்களிடம் தொடர்பு கொள்கிறேன் எனவும், நானும் 20 தோழர் களும் ஒரு மாத காலமாகவே திராவிடர் கழகத்தில் இணைய விருப்பமாக இருந்தோம் ஆனால் எப்படி, யாரை அணு குவது என தெரியவில்லை. இப்போதுதான் அதற்கான வழி கிடைத்திருப்பதாக சிறீதர் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து 25.8.2018 அன்று அரக்கோணம் மகளி ரணி நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் அவரை சந்திக்கலாம் என்ற யோசனையில் மாநில மகளிர் பாசறைச் செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, சிறீதரை தொடர்பு கொண்டு பேசியபோது, இரவு எத்தனை மணிக்கு வேண்டு மானாலும் வாருங்கள் நாங்கள் காத்திருக் கிறோம் எனக் கூறி னார். அதன்படி பாசறை செய லாளரும், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் க.மோகன் அவர்களும் இரவு 1 மணிக்கு சென்றபோது அவரும் அவர் வாழ்விணையரும் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். பிறகு கழகம் குறித்தும், தந்தை பெரியார் கொள்கை, தமிழர் தலைவர் செயல்பாடுகள் குறித்து 20 நிமிட கலந்துரை யாடலுக்கு பிறகு, தந்தை பெரியார் பணி முடிக்க, தமிழர் தலைவர் தலைமையில் பணி யாற்ற உறுதியேற்று, இயக்க நாட்காட்டி புத்தகத்தை பெற்றுக் கொண்டு கே.சிறீதர் & மணிமேகலை வாழ்விணை யர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண் டனர். இனிவரும் இயக்க நிகழ் வில் தமிழர் தலைவர் தலை மையில் மேலும் 20க்கும் மேற் பட்ட தோழர்கள் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner