எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 31 24.8.2018 அன்று மாலை 7 மணியளவில் வட சென்னை திராவிட மாணவர் கழகக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் வெகுசிறப்புடன் நடை பெற்றது.

கலந்துரையாடலின் தொடக்கத்தில் தோழியர் மரகதமணி கடவுள் மறுப்பு கூறி தொடங்கி வைத்தார். வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையிலும் தலைமை செயற் குழு உறுப்பினர் ச.இ.இன்பக்கனி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் உரத்த நாடு குணசேகரன் அவர்கள் பகுத் தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ஸ்டான்லி மருத்துவ மாணவர்கள் சார்பாக நடைபெறும் என்றும் இவ்விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள் வார் என்றும் தமது கருத்துரையில் தெரிவித்தார். மாநில செயலாளர் பிரின்சு என் னாரெசு பெரியார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக நடத்துவோம் அதற்கு தங்களால் ஆன முழு ஒத்துழைப் பையும் தருவோம் என்று கூறினார். அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர்பாண் டியன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நா.பார்த்திபன் ஆகியோர் தமது கருத்துகளை தெரிவித்தனர். இறுதியாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினர். அவர் தமது உரையில்,

எந்த ஒரு இயக்கமாக இருந் தாலும் அதில் மாணவர்கள் இருந் தால்தான் அந்த இயக்கத்திற்கு வலிமை என்றும் 10.1.1948 குடி அரசு இதழில் தந்தை பெரியார் அவர்களின் மாணவர்களை பற்றி என்ன நினைத்தார்கள் என்பதை எடுத்துக்காட்டினார். அதில் இந்த இயக்கம் இன்று ஏதாவது மதிக் கத்தகுந்த இயக்கமாக பயன்பட்டு வருகிறது என்று சொல்லப்படுமா னால் அதற்கு இந்த மாதிரி சின்னப் பையன்களே என்று அய்யா கூறியதை சொல்லி விடுதலையை தினசரி மாணவர்கள் படிக்க வேண் டும். நம்முடைய கொள்கைகள், தத்துவங்கள் வேறு எந்த இயக்கத் திற்கும் கிடையாது என்றும் தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நம் உயிரோடு & ஈரோடு'' என்னும் தலைப்பை தந்து முடித்தார். கலந் துரையாடலில் பங்கேற்ற அனை வரும் தமது கருத்துகளை வழங் கினர்.

தீர்மானம் 1: 7.9.2018 அன்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் வெகுசிறப்பாக நடத்துவது எனவும்

தீர்மானம் 2: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நம் உயிரோடு &-ஈரோடு எனும் தலைப்பில் உரையாற்றுவார் என்றும் இதில் அனைத்து மாணவர்களையும் பங் கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக் கப்படுகிறது.

இறுதியாக ஸ்டான்லி மருத்து வக் கல்லூரி மாணவர் கழக தலை வர் இளம்பரிதி நன்றியுரை கூறி நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

பங்கேற்றோர்

செ.பிரவீன்குமார், வ.கலைச் செல்வன், வ.வேலவன், ஆ.செ.பூங் குழலி, தே.மு.யாழ்திலீபன், கா.காரல்மார்க்ஸ், ச.சற்குணன், த.பரிதீன், க.சுமதி, அன்புச்செல்வன், தாமோதரன்.