எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை. ஆக. 31 26.8.2018 அன்று மாலை 6.30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தஞ்சை பெரியார் இல் லத்தில் பெரியார் பேசுகிறார் தொடர் 48 ஆவது கூட்டம் மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வாக, மாநில ப.க.தலைவர் மா.அழகிரிசாமி தலைமையில் நடைபெற்றது.

தொடக்கத்தில் பாவேந்தர் கலைக்குழுவின் சார்பில் மாவட்ட ப.க. அமைப்பாளர் பொ.இராஜூ, பகுத்தறிவுப் பாடல்களைப் பாடி னார். மாவட்ட ப.க. செயலாளர் ச.அழகிரி அனைவரையும் வர வேற்றும், சென்ற மாத கூட்டத்தின் வரவு செலவுகளையும் வாசித்தார். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் முனைவர் கோ.நாகேந் திரன் முன்னிலை வகித்து உரை யாற்றும்போது தந்தை பெரியார் அவர்களின் மனித உரிமைப் போராட்டத்தால் தான் இன்று நான் முனைவர் பட்டமும், தலைமை யாசிரியர் பதவியும் பெற்றுள்ளேன். ஆனால் இன்று நாம் பெற்ற உரிமையெல்லாம் பறிபோகக்கூடி யச் சூழல் உள்ளது. இதை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாது காக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் படத்தினை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் திறந்து வைத்து உரை யாற்றினார். நிகழ்வுக்கு தொடக்க வுரையாற்றிய தஞ்சை மாநகர அவைத் தலைவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆறுமுகம் பேசும்போது, தந்தை பெரியார் அவர்களிடம் முறையாகப் பாடம் பயின்றவர்கள் அண்ணா, கலைஞர், ஆசிரியர் அவர்கள். இவர்களின் உழைப் பையும், தொண்டினையும் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி இளைஞர் களையும், மாணவர்களையும் திரா விடச் சிந்தனையில் ஆளாக்கப்பட வேண்டும். அதற்கு இது போன்ற நிகழ்வுகளை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்ரமணியன் அவர்கள் "ஈரோட்டுக் குருகுலத்தின் போராட் டக்குணம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தந்தை பெரியார் என்ற மாமனி தன் இல்லையென்றால், இந்த நாடும், நம் இன மக்களும் மாபெ ரும் சமூக அழிவை சந்தித்திருப் போம். பெரியார் அவர்களின் வாழ்வே தொடர் போராட்டம் தான். அதன் வழிப்படிதான் அறி ஞர் அண்ணாவும், டாக்டர் கலை ஞர் அவர்களும் பயணித்தார்கள். ஆனால் பெரியார் அவர்களின் நாணயமும், சிக்கனமும் ஆசிரியர் அவர்களிடம் இருப்பதால் இச் சமூகம் உயிரோட்டத்துடன் உள் ளது என்றும் பெரியார் அவர்களின் சிந்தனையை போராட்ட எண் ணத்தை கலைஞர் சட்டமாக்கினார். அதை நாம் பயன்பெற்று வருகின் றோம். இது போன்ற நிகழ்வுகள் மூலம் அய்யா அவர்களின் சிந்த னையை வளர்த்தெடுப்போம். இந் நிகழ்வுகளை நடத்தக்கூடிய பகுத் தறிவாளர் கழகத்தை பாராட்டி உரையாற்றினார். இறுதியில் மாநகர செயலாளர் மா.லெட்சு மணசாமி நன்றி கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்டு கருத்தாளர்களுக்கு இயக்க வெளி யீடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச் சியை மாநில ப.க.துணைத் தலை வர் கோபு.பழனிவேல் ஒருங்கி ணைத்தார். நிகழ்வில் மாநில மகளிரணி செயலாளர் கலைச் செல்வி, மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, புலவர் முனைவர் கலியபெருமாள், மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகரச் செயலாளர் சு.முருகேசன், மாவட்ட ஆசிரி யரணி அமைப்பாளர் ந.சங்கர், மாவட்ட கல்லூரி ஆசிரியரணி முனைவர் மணிமேகலை, ஒன்றிய ப.க. தலைவர் ராமகிருஷ்ணன், விடுதலை வாசகர் வட்ட அமைப் பாளர் மா.இளஞ்செழியன், கழகப் பேச்சாளர் பூவை.புலிகேசி, மாநகர திமுக துணைச்செயலாளர் மு.சிந் தனைச்செல்வன், மாவட்ட இலக் கியணி செயலாளர் சடையார் கோவில் நாராயணசாமி, ஒரத்தநாடு ஒன்றிய ப.க.செயலாளர், ஆ.லெட் சுமணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராசவேல், அமைப் பாளர் விஜயகுமார், திருக்குறள் சோமசுந்தரம், திருவையாறு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், சாலியமங்கலம் இராசேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மாநகர மகளிரணி செயலாளர் பேராசிரியர் அ.சாந்தி, ப.யாழினி, ப.யாழிசை, புதிய பேருந்து நிலையப் பகுதி செய லாளர் நெல்லுப்பட்டு இராமலிங் கம், அம்மாப்பேட்டை ஒன்றிய ப.க. செயலாளர் பெரியார் கண்ணன் உள்ளிட்ட தோழர்களும், பல்வேறு இலக்கிய வட்டத்தோழர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிங் கப்பூர் தங்க மாளிகை உரிமையாளர் குறள்வழி இராம.சந்திரசேகரன் குடிநீர் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner