எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடலில் முடிவு

மயிலாடுதுறை, செப்.1 மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28.8.2018 இரவு 8 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேக ரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞான.வள்ளுவன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும்வரவேற்றுகலந்து ரையாடல் கூட்டத்தின் நோக்ககத் தினை விளக்கினார்.

மாவட்ட துணைச்செயலாளர் கட்பீஸ்கிருட்டிணமூர்த்தி,அமைப் பாளர் நா.சாமிநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ.சாமிதுரை,சீர்காழிநகரதலை வர்க.சபாபதி,சீர்காழிஒன்றியதலை வர்சா.ப.செல்வம்,கொள்ளிடம்ஒன் றியசெயலாளர் பூ.பாண்டுரெங்கன், குத்தாலம்ஒன்றியசெயலாளர் மா.பாலசுந்தரம், பகுத்தறிவு ஆசிரிய ரணி தலைவர் ச.விடுதலைக்கனி, பி.எம்.ஜி.மணிவேல், ஆக்கூர் காளியப் பன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். நகர தலைவர் சீனி.முத்து நன்றி கூறினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

இரங்கல் தீர்மானம் 1

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான தமிழினத் தலை வர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2

தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் மற்றும் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் நினை வேந்தல் பொதுக்கூட்டத்தினை மயி லாடுதுறையில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோரை அழைத்து சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3

மயிலாடுதுறையில் அமைந்துள்ள பெரியார் சிலை பீடத்தை புதுப்பித்து செப்பனிட்டு அழகுபடுத்துவது என முடிவெடுக்கப்படுகிறது.

தீர்மானம் 4

கழக  தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி மாவட்ட கழகத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள விடுதலை சந்தாவினை விரைந்து சேகரிப்பது என தீர்மானிக் கப்படுகிறது.

தீர்மானம் 5

மன்னார்குடியில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்ட வெற்றி விழா கூட்டத்தினை மாவட் டக் கழகத்தின் சார்பில் திரளாக தோழர்கள் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner