எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, செப். 1 25.8.2018  அன்று மாலை 6 மணிக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் 67 ஆவது நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் முதல்வர் மான மிகு சுயமரியதைக்காரர் டாக்டர் கலைஞருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கினார். ச.பால்ராசு கல்வி அதி காரி, (பணி நிறைவு) வரவேற்புரை நிகழ்த்தி கலைஞர் எழுதிய நூல்களின் பட்டியலை எடுத்துரைத்தார். துவக் கரையாற்றிய பேராசிரியர் இ.கே.ராம சாமி அவர்கள் ஒவ்வொரு சமுதாயத் தினருக்கும்,  கல்லூரி கட்ட வசதியாக விதிகளை தளர்த்தி உத்தரவிட்டதோடு மாணவர்களுக்கு அரசு உதவி பெறுவதற்கான மதிப்பெண்ணை 360 லிருந்து 240 ஆக குறைத்தார். கல்கி பத்திரிகையில் பணியாற்றி வேலை இழந்த அச்சக ஊழியர்களுக்கு அரசு அச்சகத்தில் பணி வழங்கினார். அரசு ஊழியர்களுக்கான ரகசிய குறிப்பேடு முறையை ஒழித்தார் என்பதை நினை வூட்டினார்.

மேலும், ஆதி தமிழர் பேரவையின் இளைஞரணி செயலாளர். மூக்கையா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர்  மனோகரன், அகில இந்திய காங்கிரசு கட்சியின் மதுரை மாவட்டச் செயலளார் வீ.கார்த்திகேயன். உரையாற்றிய பின்பு. அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி. கதிரவன் உரையாற்றுகையில் மறைந்த கலைஞர் அவர்கள் சமூக நீதி காவலராக இருந்ததையும் பெரி யார் இறந்த பொது அரசு மரியாதைக்கு உத்தரவிட்டதும், அவரது காலத்தில் 58 கால்வாய் திட்டங்களை நிறை வேற்றியதையும் நினைவூட்டினார். இறுதியில் விடுதலை வாசகர் வட் டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா. பவுன்ராசா. நன்றியுரையாற்றினார்.