எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, செப்.3 உச்சநீதி மன்றம், உயர் நீதிமன்றங் களில் நீதிபதிகளாக தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்களை நீதி பதிகளாக நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டுமென நடுவண் அரசைக் கோரி, தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக சார்பில் 16.8.2018 அன்று காலை 11 மணியளவில், தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து  நிறுத்தம் அருகில் உள்ள திடலில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியார டியான் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி வரவேற்றுப் பேசினார். நெல்லை மண்டலத்தலை வர் மா. பால்ராசேந்திரம் விளக்கவுரை ஆற்றினார். கோரிக்கைகளை வலி யுறுத்தி கழகத்தோழர்கள் முழக்கங்களை முழங்கினர். முன்னள் மாவட்டச்செய லாளர் பெ.காலாடி நன்றியுரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத்தலை வர் பொ.செல்வராசு, மாவட்டத் துணைச் செய லாளர் இரா.ஆழ்வார், முன் னாள் மாவட்டச் செயலாளர் தெர்மல் ச.சக்திவேல், திருவை ஒன்றிய அமைப் பாளர், க.திருமலைக் குமரேசன், விளாத்திகுளம் ஒன்றியத் தலைவர் த.நாக ராசன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பளர் பொ.சாந்தி, த.பெரியார்தாசன், சம்புலிஙபுரம் சு.கோயில் பிள்ளை, வழக்குரைஞர் இரா.செல்வம், பெரியார் மய்ய அலுவலர் போஸ்,  மாநகரப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ,ப.பழ னிச்சமி, மாநகரப் பகுத் தறிவாளர் கழகச் செயலாளர் சு. சுப்புராசு,நடுநாலை மூலைக்கிணறு இரா.சேகர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.