எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருத்துறைப்பூண்டி, செப்.4 திருத்துறைப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.8.2018 அன்று காலை 11 மணியளவில் திருத்தறைப்பூண்டி கழக தோழர் இல்லத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி, மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கி.முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலந் துரையாடல் கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி கழக மாவட் டங்களின் சார்பில் 100 விடுதலை சந்தா வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முதல் தவணையாக 3 விடுதலை சந்தாக்களை நகர தலைவர் தி.குணசேகரன் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் ந.செல்வம், ஒன்றியச் செயலாளர் இரா.அறிவழகன், நகரச் செயலாளர் ப.நாகராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.8.2018 அன்று காலை 12 மணியளவில் திருவாரூர் கழக கட்டிடம், அய்யா அம்மா அறிவு குடிலில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி, மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி கடவுள் மறுப்பு கூறி வரவேற்புரையாற்றினார்.

கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் உரையில் குறிப்பிடும் போது விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணம் பற்றி நோக்கத்தை பற்றியும், விடுதலை சந்தா சேர்ப்பு பணிகளை பற்றியும், மன்னார்குடியில் வரும் 2.9.2018 அன்று தமிழர் தலைவர் கலந்து கொண்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் கழக தோழர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி, மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மண்டல மகளிரணி செயலாளர் இரா.மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி தலைவர் சி.சரஸ்வதி, மாவட்ட வி.தொ.அணி தலைவர் பி.ரெத்தினசாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.அசோக்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் க.வீரையன், மாவட்ட வி.தொ.அணி செயலாளர் தங்க.கலிய பெருமாள், நன்னிலம் நகர தலைவர் தன.சஞ்சீவி, திருவாரூர் ஒன்றிய செயலாளர் மு.இராமமூர்த்தி ஆகியோர் உரைக்குப் பின் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.அசோக்ராஜ் கீழ்க்கண்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மானமிகு சுயமரியாதைக்காரன் என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட முத்தமிழ் அறிஞர் மண்ணின் மைந்தர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம் 2: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழாவினை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழாவாக மிகச்சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் தொடங்கி நகரம் என அனைத்து பகுதிகளிலும் கழக கொடியேற்றி மிகச்சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: இன உரிமை மீட்பு ஏடான விடுதலை சந்தாக்களை சேர்த்து திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 200 சந்தாக்களை வழங்குவது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 4: செப்டம்பர் 2ஆம் தேதி மன்னர்குடியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பாக அனைத்து கழக தோழர்களும் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை சந்தா சேர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள்

மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.சிவக்குமார், நிகழ்வில் கலந்து கொண்டோர் விவரம்

திருவாரூர் ஒன்றியம்

மாவட்ட வி.தொ.அணி தலைவர் பி.ரெத்தினசாமி, மண்டல மகளிரணி செயலாளர் இரா.மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி தலைவர் சி.சரஸ்வதி, ஒன்றிய தலைவர் ஜெ.ஜனகராஜ், ஒன்றிய செயலாளர் மு.இராமமூர்த்தி, ஒன்றிய வி.தொ.அணி செயலாளர் இராஜேந்திரன், ஒன்றிய பகுத் தறிவாளர் கழக தலைவர் கவுதமன், மாவட்ட ஆலோசகர் கோவிந்தசாமி.

திருவாரூர் நகரம்

மாவட்ட துணைத் தலைவர் எஸ்எஸ்எம்கே.அருண்காந்தி, மாவட்ட அமைப்பாளர் பி.சாமிநாதன், பொதுக்குழு உறுப் பினர் சவு.சுரேஷ், நகர தலைவர் சு.மனோகரன், நகர செய லாளர் கோ.ராமலிங்கம், மு.மாவட்ட செயலாளர் கு.காமராஜ், மு.மண்டலச் செயலாளர் க.முனியாண்டி, நகர துணைத் தலைவர் கலிய.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.ராஜமணிகண்டன்

குடவாசல் ஒன்றியம்

மாவட்ட துணைச் செயலாளர் க.வீரையன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.அசோக்ராஜ், ஒன்றியத் தலைவர் ஜெயராமன், சி.அம்பேத்கர், மணிசேகரன்

கொரடாச்சேரி ஒன்றியம்

மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் தங்க.கலியபெருமாள், ஒன்றிய தலைவர் கு.சவுந்தர்ராஜன், ஒன்றி யச் செயலாளர் துரைராஜ், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ஏகாம்பரம், முன்னாள் மாவட்டச் செயலாளர் சரவணன், இராமலிங்கம், பவர் விஸ்வநாதன்

நன்னிலம் நகர - ஒன்றியம்

மாவட்ட துணைத் தலைவர் தி.சங்கர், ஒன்றிய பகுத் தறிவாளர் கழக தலைவர் சா.கரிகாலன், நகர தலைவர் தன சஞ்சீவி, ஒன்றிய தலைவர் சு.பொய்யாமொழி, மாவட்ட ஆசிரியரணி செயலாளர் சு.ஆறுமுகம், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் தன்ராஜ், சரவணன், சாமி.முரளி

நிகழ்வில் கலந்து கொண்டோர் விவரம்

எஸ்.முத்து (காட்டூர்), கே.முருகையன் (திருப்பள்ளி முக்கூடல்), மா.கோவிந்தராசு (சூரனூர்), ஆர்.அன்னதானம், கோபால் (சூரனூர்), எம்.ரெத்தினம் (சோழங்கநல்லூர்), பி.விஸ்வநாதன் (பருத்தியூர்), நாத்திக சாக்ரடீஸ் திராவிடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக க.வீரையன் நன்றி கூறினார்.