எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை, செப். 5 28.8.2018 அன்று குடந்தை பெரியார் மாளிகையில் 6 மணி அளவில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகரிசாமி, தஞ்சை மண்டல தலைவர் வெ.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.

கூட்டத்தின் நோக்கம் பற்றியும் கழக செயல்பாடுகள் பற்றியும் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்ட தலைவர் கு.கவுதமன் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து குடந்தை நகர தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேசு, வலங்கைமான் ஒன்றிய தலைவர், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ந.முருகானந்தம், கோவிந்தகுடி இராமச்சந்திரன், உள்ளிக்கடை அ.பழனிசாமி, மாவட்ட அமைப் பாளர் வ.அழகுவேல், முன்னாள் மாவட்டத் தலைவர் வை.இளங்கோவன், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் எம்.திரிபுரசுந்தரி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் எஸ்.அம்பிகா, திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் அ.சங்கர், வே.குணசேகரன், குடந்தை ஒன்றிய தலைவர் த.ஜில்ராஜ், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி மற்றும் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராசு ஒருங்கிணைத்தார். குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர். க.சிவக்குமார் நன்றி கூறினார். கழகத் தோழர்கள் விடுதலை சந்தாக்களை பொதுச்செயலாளரிடம் அளித்தனர்.

கூட்டத்தின் தீர்மானங்கள்:

1. மானமிகு சுயமரியாதைக்காரர்' என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது. குடந்தை ஒன்றிய செயலாளர் கோவி.மகாலிங்கம் அவர்களின் சகோதரர் சாமிநாதன் அவர்கள் மறைவிற்கும், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என். கணேசன் அவர்களின் சகோதரர் கண்ணன் அவர்கள் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

2. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 140- ஆவது பிறந்தநாள் விழாவினை குடந்தை மாவட்ட அனைத்து ஒன்றிய, நகர பகுதிகளில் கொடியேற்றி சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

3. சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என முடிவெடுப்பது.

4. இன உரிமை மீட்பு ஏடான விடுதலை ஏட்டிற்கு குடந்தை மாவட்டத்தில் சார்பில், முதற்கட்டமாக 100 சந்தாக்களை 8.9.2018 அன்று மன்னார்குடியில் நடைபெறும் வெற்றி விழா கூட்டத்தில் வழங்குவது என தீர்மானிக்கப் பட்டது.

5. 8.9.2018 அன்று மன்னார்குடியில் நடை பெறும் வெற்றிவிழா கூட்டத்திற்கு அதிகமான தோழர்களை அழைத்துச் சென்று கலந்து கொள் வது என தீர்மானிக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner