எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரக்கோணம், செப். 7, 26.8.2018 அன்று காலை 10 மணி அளவில் அரக்கோணம் மாவட்டம் மகேந் திரவாடியில் திராவிட மகளிர் பாசறையின் உறவுகளோடு உறவாடுவோம் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அரக்கோணம் மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் வேண்டா அவர்கள் தலைமை வகித்தார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரேமா, மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி, மகளிரணி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலை 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. முதல் நிகழ் வாக அறிமுக நிகழ்ச்சி நடை பெற்றது. காவேரிபாக்கம் திராவிடர் கழக தலைவர் இராவணன் கழகப்பாடலை பாடியதை தொடர்ந்து மாணவர்களின் உள வியல் பெண் பிள்ளைகள் ஆரோக்கியம் குறித்தும் மன ஆரோக்கியம் குறித்தும் வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி மாண வர்களிடையே விளக்கி கூறி னார். வேண்டுதல்கள் மட்டும் நம் கல்வி வளர்ச்சியை மேம் படுத்தாது என்றும் மாணவர்கள் கல்விக்காக செலவு செய்யும் நேரமே அதிக மதிப்பெண்கள் பெற்று தரும் என்றும் ஆண் பிள்ளைகள் தான் எதையும் செய்ய வேண்டும் என்ற மன நிலை மாறவேண்டும், பெண் குழந்தைகளுக்கும் ஆண் பிள் ளைகள் போல அனைத்து உரிமையும் கடமையும் உண்டு என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தலைமை செயற்குழு உறுப்பினர் இன்பக் கனி பிள்ளைகள் கண்மூடித்தன மாக எந்த ஒரு சடங்கு சம்பிரதாயம் இவற்றை பின் பற்றக்கூடாது என்றும், ஏன் பின்பற்றக்கூடாது என்றும் விளக்கினார். மற்றும் சமூகத்தில் நிலவி வரும் மூடத்தனமான செயல்களை பெற்றோர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதற் காக பிள்ளைகளும் அப்படியே கடைபிடிக்க கூடாது என்றும் பேசினார்.

அடுத்து பேசிய பெரியார் களம் இறைவி அவர்கள் இன் றைய சூழ்நிலையில் பெண் குழந்தைகளை எப்படி வளர்த்து வருகிறார்கள் என்றும் இனி வரும் காலங்களில் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் விளக்கமாக கூறினார்.

சிறப்புரை ஆற்றிய மாநில மகளிர் பாசறை செயலாளர் செந்தமிழ் செல்வி மாணவர்கள் குறிப்பாக பெண்கள் ஏன் படிக்க வேண்டும், பெண்கள் கல்வியறிவு பெற பெரியார் எடுத்த முயற்சிகள் குறித்தும், போராடிய வரலாறு குறித்தும் விளக்கினார். மற்றும் நாம் அனைவரும் உண்மையில் பெரியாருக்கு நன்றி கூறும் விதமாக வீட்டில் பெரியார் புகைப் படம் இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும் விளக்கி கூறினார்.

இந்த நிகழ்ச்சி வெறும் உரை வீச்சாக மட்டும் அமையாமல் மாணவர்கள் பங்கேற்று தன் கருத்துக்களை கூறும் பயிற்சிக் களமாக அமைந்தது குறித்தும் தன் மகிழ்ச்சியை தெரிவித்தார்.

நிகழச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் பெண் ஏன் அடிமை யானாள் நூல் பேரறிஞர் அண்ணாவின் நிலையும் நினைப்போம் ஆகிய இரண்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டது. மற்றும் விவாதத்தில் கலந்து கொண்டு சிறப்பாக கருத்துக்களை முன்வைத்த பிள்ளைகள் பத்துப்பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப் பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பகல் உணவாக சுவையான கறி விருந்து வழங்கப்பட்டது.

மாலை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களும் மகளி ரும் காலையிலிருந்து பயின்ற முற்போக்கு கருத்துக்களில் தெளிவு பெற அவர்கள் எழுப் பிய சந்தேக கேள்விகளுக்கு வந்திருந்த பொறுப்பாளர்கள் கேள்விக்குண்டான சிறப்பான விளக்கங்களை அளித்தனர். தலைமை கழக பேச்சாளர் சங்கர் அவர்களும் தன்னுடைய கருத்து களை வந்திருந்த தோழர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, பூவை செல்வி, மாவட்ட செய லாளர் கோபி, மாவட்ட துணை செயலாளர் தீனதயாளன், ஆசிரியரணி சிவஜோதி, வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், இசை இன்பன், நெமிலி ஒன்றிய தலைவர் சங்கர், மண்டல இளைஞரணி செயலாளர் இளந்திரையன், ஒன்றிய கிளைத் தலைவர் கங்காதரன், காவேரிபாக்கம் ஒன்றிய தலைவர் இராவணன், இளைஞரணி அருள்நெஞ்சன், மற்றும் அப்பகுதி பெண்களும் மாணவர்களும், இயக்க தோழர் களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட தலை வர் லோகநாதன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.