எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டுக்கோட்டை, செப்.7  4.9.2018 அன்று மாலை 6.30 மணியளவில் பட்டுக்கோட்டை ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை மாவட்டத் துணை தலைவர் சின்னக்கண்ணு இல்லத்தில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்கள் தலை மையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் பெ.வீரையா, மாவட்ட துணைச் செயலாளர் இரா.நீலகண்டன், மாவட்ட அமைப்பாளர் வை. சிதம்பரம், மாவட்டத் துணைத் தலைவர் சின்னக்கண்ணு, அரு.நல்லத்தம்பி ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலையேற்று உரையாற்றினர். பட்டுக்கோட்டை நகரத் தலைவர் பொறியாளர் வை.சேகர், ஒன்றிய அமைப்பாளர் ஏனாதி ரெங்கசாமி, நகர துணைத் தலை வர் சுப்பராயுலு, நகர செயலாளர் ரவிக்குமார், ப.க. பொறுப்பாளர் அழகரசன், ஆசிரியர் ரவிச்சந் திரன், பேராவூரணி பாலசுப்ரமணி யன், மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன் ஆகியோர் கருத்துரைக்கு பின் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் கருத்துரை யாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சாதனைகள், அணுகு முறைகள், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை சிறப் பாக நடத்துதல், விடுதலை சந்தா திரட்டிட வேண்டியதன் அவ சியம். கழகத் தோழர்கள் தன்னை முன்நிறுத்தாமல் இயக்கத்தை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். இயக்கத்தின் கட்டு பாடுகள் குறித்தும் உரையாற் றினார். இறுதியாக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையுரையாற்றினார். நகரத் தலைவர் சேகர் நன்றி கூறினார். பட்டுக்கோட்டை நகர, ஒன்றிய புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் 1: மானமிகு சுயமரியாதைக்காரர் என தன்னை ஒற்றை வரியில் பிரகடனப் படுத்திக் கொண்ட திமுக தலைவர் முத்தமிழ்அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவர் களின் தொண்டுக்கு வீரவணக்கத் தையும் தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம் 2: கடந்த 20.8.2018 அன்று சென்னையில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் 3: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர் களின் 140ஆவது பிறந்த நாள் விழா வினை மிகச்சிறப்பாக கொண் டாடும் வகையில் பட்டுக் கோட்டை ஒன்றிய, நகர கழகத் தில் உள்ள தோழர்களின் இல் லங்கள், கிளைகள் தோறும் கழக கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும், அய்யா அவர்களின் உருவச்சிலைகள் மற்றும் படங் களுக்கு மாலை அணிவித்து தெருமுனைக் கூட்டங்களையும் சிறப்பாக நடத்துவது என இக்கூட்டம் முடிவு செய்கின்றது.

தீர்மானம் 4: இனஉரிமை மீட்பு ஏடான விடுதலை நாளிதழ் மக்கள் மத்தியில் பரப்பிடும் வகையில் பெரும் அளவில் சந்தாக்களை சேர்த்து வழங்குவது என இக்கூட்டம் முடிவு செய்கின்றது.

தீர்மானம் 5: 8.9.2018 அன்று மாலை மன்னார்குடியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை போ ராட்ட வெற்றிவிழா பொதுக்கூட் டத்தில் அனைத்து கழக தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கின்றது.

 

தீர்மானம் 6: காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் கடை மடை பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தண்ணீர் வந்து சேர வில்லை என்பதோடு இப்பகுதி வெறும் வறட்சி பகுதியாக காணப்படுகின்றது. எனவே உடனே கடை, மடை பகுதிக்கு குறை வைக்காமல் தண்ணீர்விட்டு அதனை ஏரி, குளங்களில் நிரப்பி நிலத்தடி நீர்மட்டம் உயரவும், விவசாய பணிகளுக்கு தேவை யான தண்ணீரை கிளை வாய்க் கால் பகுதிக்கும் கொண்டு சேர்த்திட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமாய் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7: தலைமைக் கழகத்தால் பட்டுக்கோட்டை ஒன்றிய, நகர கழக பொறுப் பாளர்களாக கீழ்க்கண்டவர்களை நியமனம் செய்துள்ளமைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள் வதுடன் அப்பொறுப்பாளர் களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவது எனவும் அதன்படி ஒன்றிய தலைவர்: ரெ.வீரமணி, ஒன்றிய செயலாளர்: அ.ஆரோக்கியராஜ், ஒன்றிய துணைத் தலைவர்: அ.காளிதாசன், ஒன்றிய அமைப்பாளர்: ஏனாதி சி.ரெங்கசாமி, நகர தலைவர்: பொறியாளர் வை.சேகர், நகர செயலாளர்: அ.இரவிக்குமார், நகர துணைத் தலைவர்: கே.சுப் பராயலு, நகர அமைப்பாளர்: ம.முகிலன்

தீர்மானம் 8: பெண்களைப் பற்றி தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் டாக்டர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன்ற நமது இனத் தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சனம் செய்திடும் எச்.ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்திரவிட்டும் நடவடிக்கை இல்லை. உணர்ச்சி வசப்பட்டு முழக்கம் போட்ட தற்காக மாணவி லூயிஸ் சோஃ பியா மீது மட்டும் உடனடியாக கைது நடவடிக்கை என்பது கண்டனத்திற்குரியது. ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள் ளும் மத்திய, மாநில அரசின் நடவடிக்கையை இக்கூட்டம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner