எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாராபுரம், செப். 10 தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி மற்றும் தாராபுரம் நகர திராவிடர் கழகம் சார்பாக முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர் களுக்கு வீரவணக்கப் பொதுக்கூட் டம் 24.8.2018 அன்று மாலை 6.30 மணியளவில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் க.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன் அனை வரையும் வரவேற்றார். திராவிடர் கழகத்தின் வழக்குரைஞரணி அமைப்பாளர் நா.சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் கி.மயில் சாமி, தாராபுரம் நகரச் செயலாளர் இரா.சின்னப்பதாசு, ப.மணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

கலைஞர் படத்திறப்பு

நிகழ்வில் மானமிகு சுயமரியா தைக்காரர் டாக்டர் கலைஞர் அவர் களின் உருவப்படத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் வீரவணக்க உரை யாற்றிய திராவிடர் கழக தலைமை கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன்  தந்தை பெரியாரின் கருவறை நுழைவுப் போராட்டத்தையொட்டி டாக்டர் கலைஞர் அவர்கள் ஜாதி ஒழிப்பின் அம்சமாக நிறைவேற்றிய அனைத் துச் ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் குறித்தும், பெரியார் நினைவு சமத்துவபுரம் பற்றியும் உரையாற்றியதோடு தந்தை பெரி யார் மறைவுற்றபோது அய்யா அவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து சிறப்பித்த பெருந்தகை யாளர் தான் டாக்டர்.கலைஞர் என்று உணர்ச்சி ததும்பக் குறிப் பிட்டார். தற்போது திராவிட இயக் கத்தின் நான்காம் தலைமுறையாக விளங்கும் "தளபதி" மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வெகுமக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்று உரையாற்றினார்.

பங்கேற்றோர்

தாராபுரம் சட்டமன்ற உறுப்பி னர் வி.எஸ்.காளிமுத்து,தாராபுரம் நகர திமுக செயலாளர் கே.எஸ்.தனசேகர், மாவட்ட திமுக வழக் கறிஞரணி அமைப்பாளர் க.செல் வராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.தென்னரசு, தமிழ்மாநில காங்கிரசு ஆ.மாசா ணம், தமிழக வாழ்வுரிமைக்கட்சி ரமேஷ், தாராபுரம் வட்ட சிபிஅய் (எம்) செயலாளர் என்.கனகராஜ், எஸ்.டி.பி.அய் மாவட்ட செயலாளர் எம்.இஸ்மாயில், காங்கயம் நகர பொறுப்பாளர் மணிவேல், தாரா புரம் ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம், செயலாளர் ச.முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.மாயவன், செயலாளர்  ராமசாமி, தாராபுரம் நகர இளைஞரணித்  தலைவர் ஆ.முனீசுவரன், செயலா ளர் க.விஜயபாலன், மாவட்ட பக தலைவர் கவிஞர் ச.ஆறுமுகம், அமைப்பாளர் மு.மாரிமுத்து, கணியூர் துரையரசன், வேலுமணி (பக), பழனி கழக மாவட்ட பக செயலாளர் ஆசிரியர் திராவிடச்செல் வன், அலங்கியம் கழகத் தோழர்கள் கே.என்.புள்ளியான், நாசும்புலி மற்றும் மாற்று கட்சி, இயக்க தோழர்கள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கூட்டத்தின் நிறைவாக தாரா புரம் நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.மோகன் நன்றி நவின்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner