எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, அக்.6 21.9.2018 அன்று தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்ட "தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம், பெரியார் பட ஊர்வலம் நடைபெற்றது. அன்று மாலை 5 மணியளவில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் திராவிடர் கழக தோழர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தோழர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்ட தோழர்கள் ஒன்று திரண்டனர். தந்தை பெரியாரின் அலங்கரிக்கப்பட்ட முழு உருவப்படம் தயார் நிலையில் இருந்தது. சரியாக 6 மணியளவில் தஞ்சை மண்டலச் செயலாளர் மு.அய்யனார் தலைமையேற்று உரையாற்ற, தஞ்சை மாவட்ட ப.க. தலைவர் ந.காமராஜ், மாவட்ட ப.க. செயலாளர் ச.அழகிரி, மாநகர அமைப்பாளர் வெ.ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.தனபால், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜ வேல், ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.வெங்கடேசன், செயலாளர் ஆட்டோ செந்தில், அமைப்பாளர் அ.இரமேஷ், மண்டல மாணவர் கழக செயலாளர் வே.தமிழ்செல்வன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ந.காவியன், செயலாளர் இர.மணிகண்டன், அமைப்பாளர் ச.சற்குணம், மாநகர இளைஞரணி தலைவர் அ.மதன்ராஜ், செயலாளர் மா.இராஜராஜன், அமைப்பாளர் ச.இரமேஷ் ஆகியோர் முன் னிலையேற்க திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் தொடங்கிய தந்தை பெரியார் முழு உருவ பட ஊர்வலம் தஞ்சை ஆற்றுப்பாலம், அண்ணா சிலை, அண்ணா சாலை, கீழவாசல், கொண்டி ராஜபாளையம், கீழவீதி, தெற்குவீதி என 4 கிலோமீட்டர் தூரம், தஞ்சை மாநகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சிவகங்கை பூங்கா வரை சென்றது. ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் காலைகளின் இருபுறங்களிலும், தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து நகரத்திற்கு பணிக்காகவும், சொந்த வேலை காரணமாகவும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் நின்று திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பெரியார் பிஞ்சுகள் எழுப்பிய திராவிடர் கழக கொள்கை விளக்க முழக்கங்களை செவிமடுத்தும், கையில் கழக கொடியுடன் திராவிடர் கழக தோழர்கள், அனைத்து கட்சி தோழர்கள் இரண்டு வரிசையாக ஊர்வலமாக சென்றதையும் பார்த்து வியந்தனர்.

ஊர்வலத்தின் முன்பு கோல்டன் இசைக்குழுவினர் இசையமைத்து சென்றனர். ஊர்வலம் செல்லக்கூடிய சாலை முழுவதும் திராவிடர் கழகத்தின் இலட்சிய கொடியினை மண்டல மாணவர் கழக செயலாளர் வே.தமிழ் செல்வன், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் கழக தோழர்கள் யுவான், ஜான்பிரிட்டோ, குமார், பிரகாஷ், மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர் கழக தோழர் சரவணன் மிகச்சிறப்பாக அமைத்து நிகழ்வினை விளம் பரப்படுத்தியிருந்தனர். ஊர்வலம் மாலை 7.30 மணியளவில் சிவகங்கை பூங்கா எதிரில் நிறைவடைந்தது.

அடுத்த நிகழ்வாக தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கை பூங்கா எதிரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் 7.30 மணிக்கு துவங் கியது. பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் வரைவேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, பொதுக்குழு உறுப்பினர் வ.ஸ்டாலின், மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிகுமார் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், தஞ்சை மாநகர திமுக செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, மனித நேய மக்கள் கட்சி மாநில செயலாளர் எம்.பாதுஷா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் பி.எஸ்.ஹமீது, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் செல்ல.கலைவாணன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் எம்.பி.நாத்திகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

திராவிடர் கழக தலைமை கழக சொற்பொழிவாளர்கள் இரா.பெரியார்செல்வன் மற்றும் பூவை.புலிகேசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இறுதியாக திரா விடர் கழக தஞ்சை மாநகர செயலாளர் சு.முருகேசன் நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் அதிரடி அன்பழகன், மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் ச.சந்துரு, பொதுக்குழு உறுப்பினர்கள் கை.முகிலன், ச.மணியன், தஞ்சை ஒன்றிய தலைவர் இரா.சேகர், உரத்தநாடு ஒன்றிய தலைவர் மா.இராசப்பன், செயலாளர் ஆ.லெட்சுமணன், திருவை யாறு ஒன்றிய தலைவர் கண்ணன், செயலாளர் துரை.ஸ்டாலின், பூதலூர் ஒன்றிய தலைவர் இரா.பாலு, அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், திரு வோணம் ஒன்றிய அமைப்பாளர் சாமி.அரசிளங்கோ, பெரியார் பெருந்தொண்டர் தண்டாயுதபாணி, மாநகர மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம், மகளிரணி பாக்கியம், மாணவர் கழக தோழர்கள் வீரமணி, விடுதலையரசி, முல்லை, யாழிசை, திராவிடர் கழக தோழர்கள் கரந்தை டேவிட், மாதவராஜன், ஒக்கநாடு கீழையூர் கவுதமன், நெல்லுபட்டு இராமலிங்கம் மற்றும் ஏராளமான கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் பாவேந்தர் கலைக் குழு சார்பில் உறந்தை கருங்குயில் கணேஷ், பொ.ராஜூ ஆகியோர் வழங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்டுக்கோட்டை

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் 22.9.2018 அன்று மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் சிலையில் இருந்து பெரியார் பட ஊர்வலம் நடைபெற்றது.

முன்னதாக ஒன்றிய கழக தலைவர் ரெ.வீரமணி, நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை துவக்கி வைத்து பொதுச்செய லாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றினார். தப்பாட்டம் மற்றும் கழக தோழர்களின் கொள்கை முழக்கத்துடன் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் பட ஊர்வலம் அய்யா சிலையில் இருந்து புறப்பட்டு மணிக்கூண்டு, அழகிரி சிலை, அண்ணா சிலை வழியாக காந்தி சிலை, அறந்தாங்கி முக்கம் வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஏராள மான கழக தோழர்களும் மற்றும் திமுக, காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சிபிஅய், சிபிஎம், கட்சிகளை சேர்ந்த ஏராளமான தமிழ் இன உணர்வா ளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மாலை 7 மணியளவில் அறந்தாங்கி முக்கம் அருகில் நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர் தலைமையில் மாவட்ட செயலாளர் பெ.வீரையன், மாவட்ட துணை தலைவர்கள் சா.சின்னக்கண்ணு, அரு.நல்லதம்பி, மாவட்ட துணை செயலாளர் இரா.நீலகண்டன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் வழக்குரைஞர் அ.அண்ணாத்துரை, மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், ஒன்றிய துணைத் தலைவர் அ.காளிதாசன், ஒன்றிய செயலாளர் அ.ஆரோக்கியராஜ், ஒன்றிய அமைப் பாளர் ஏனாதி ரெங்கசாமி ஆகியோர் முன்னிலையில் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று ஒன்றிய கழகத் தலைவர் ரெ.வீரமணி உரையாற்றினார். காங்கிரசு கட்சியை சேர்ந்த மகேந்திரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை, மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ.அண்ணாதுரை, திமுக கிழக்கு ஒன்றிய குழு செயலாளர் என்.பி.பார்த்திபன், சிபிஅய்எம்- ஒன்றிய குழு செயலாளர் எஸ்.கந்தசாமி, விசிக இளந்தென்றல், சிபிஅய் ரோஜா ராஜசேகர் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் பெரியாரின் பெருமைகளை எடுத்து பேசினார்கள். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

இறுதியாக திராவிடர் கழக சொற்பொழிவாளர் முனை வர் அதிரடி க.அன்பழகன் அய்யாவின் கொள்கைகளை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக நகர கழக செயலாளர் சு.ரவிக்குமார் அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. முடிவில் நகர, ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக 140 தென்னங்கன்றுகள் மாவட்ட செயலாளர் பெ.வீரையன் சார்பில் வழங்கப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner