எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், அக். 7- தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடிய தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வெகு விமரிசையுடன் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

குடியாத்தம்

குடியாத்தம் புவனேசுவரிப்பேட்டை ஓவிஸ் அழகு நிலைய அரங்கத்தில் 17.9.2018 அன்று மாலை 7 மணிக்கு அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அன்புமொழி இல்லத்தின் சார்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது, இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார் தலைமை தாங்கினார், குடியாத்தம் மகளிர் பாசறை தலைவர் சி.லதா வரவேற் புரை ஆற்றினார், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வி.இரவிக்குமார், நகர மகளிர் பாசறை செயலாளர் இர.உஷாநந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் மாணவரணி கீர்த்திகா கடவுள் மறுப்பு கூறினார், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப் பாளர் தி.அனிதாதாரணி கழக கொடியை ஏற்றினார், அன்னை மணியம்மையார் சிந்தனைக்களம் செயலாளர் சு.ரேவதி தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்தார்,

அணைக்கட்டு ஒன்றிய அமைப்பாளர் இரவீந்திரன் தொடக்க உரை ஆற்றினார், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இர.அன்பரசன் பெரியார் இன்றும் தேவை என்ற தலைப்பில் உரையாற்றினார். குடியாத்தம் மாணவர் கழக செயலாளர் கவிஞர் ம.ஜ. சந்தீப் தந்தை பெரியார் பிறந்த நாள் கவிதையை வாசித்தார், தலைமை ஆசிரியை இ.வெண்மதி அவர்கள் தன் உரையில், மாணவர்கள் மத்தியில் பெரியாரை கொண்டு செல்வது ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமை என்பதை வலியுறுத்தி உரையாற்றினார், சமூக நீதியில் பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் கஜேந்திரன் உரையாற்றினார்.

பெண்விடுதலையில் பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் வேலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப் பாளர் தி.அனிதாதாரணி உரையாற்றினார். ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் இராமாலை சிவா உரையாற்றினார், தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் கவிஞர் அழகிய பெரியவன் உரையாற்றினார், இந்துத்துவாவும் அதன் வெறிச்செயல் என்ற தலைப்பில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.அருள்மொழி அவர்கள் உரையாற் றினார். வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் சிறப்புரை ஆற்றினார் அவர் தன் உரையில் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மதம் ஒழிப்பு, பெண்விடுதலை, ஆகியவற்றிக்காக பெரியார் செய்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை விளக்கமாக உரையாற் றினார். இறுதியில் வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி நன்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் குடியாத்தம் நகர தலைவர் வி.மோகன், நகர செயலாளர் இர.ராமன், நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் சாந்தகுமார், மாவட்ட மாணவர் கழக தலைவர் வி.சி.தமிழ்நேசன், தி.மு.க அருமதி, ஜம்பு, சிந்தனைக் களம் விமலா, சாரதா, காயத்ரி, லட்சுமியம்மாள், மற் றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

திருநள்ளாறு

திரைக்கலைஞர் விவேக்கின் பசுமை கலாம் இயக் கத்தின் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா திருநள்ளாறு கடைத்தெருவில் நடைபெற்றது.

இவ்விழாவில் தந்தை பெரியார் உருவப் படத்திற்கு கழகத் தோழர்களும், சமூக அமைப்புகளை சார்ந்த வர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய் தனர்.

உலகம் வெப்பமயமாவதை தடுத்து சுற்று சூழலை மாசுபடாமல் பாதுகாக்க மழை வளம் பெருக்கி நிலத்தடி நீரை அதிகப்படுத்த மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பயண அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை கலாம் இயக் கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

சுற்று சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தாமல், நிலத்தடி நீரை தடுக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை பயன்படுத்தாமலும், திருநள்ளாறு நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள "பிளாஸ்டிக் இல்லாத திருநள்ளாறு" என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வை வலியுறுத்தி, நகரை தூய்மைபடுத்தும் துப்புரவு தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நலத்திட்ட உதவியாக பேசனும், கொடையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பகுத்தறிவாளர் கழக தலைவர் ந.சு.தமிழ்ச்செல்வன், பழக்கடை கிருட்டிணமூர்த்தி, பேட்டை ராஜரத்தினம், பொற்கோ, கிருட்டிணசாமி, பாசல், பெரியார் கணபதி, பன்னீர், மனோகரன், மகா லிங்கம், பொன்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியினை பதிசெயசங்கர் பசுமை கலாம் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக செய்து இருந்தார்.

பண்ருட்டி - அண்ணாகிராமம்

காடாம்புலியூர், திருவாமூர் பெரியார் சமத்துவபுரம் கிராமங்களில் 17.9.2018 அன்று திராவிடர் கழகம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ருட்டி ஜோதி போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கோ.புத்தன் தலை மையில் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் நா.பலராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.கந்தசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலந்து கொண்வர்கள்

பண்ருட்டி நகர கழக தலைவர் ந.புலிக்கொடி, அண்ணாகிராமம் ஒன்றிய கழக தலைவர் பா.ஆறுமுகம், வழக்குரைஞர் ஆறு.கனகசபாபதி, பெரியார் பிஞ்சு பகுத்தறிவு மன்றும் பக்கிரி, மனோகர், திருவாரூர் சிலம் பரசன் ஆகியோராவர். தோழர் சிதம்பரம் அவரது வீட் டில் அனைவருக்கும் தேநீர் விருந்தளித்து உபசரித்தார்.

சாத்திப்பட்டு

17.9.2018 அன்று சாத்திப்பட்டு கிராமத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.கந்தசாமி தலைமை யில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அமுதா, பகுத் தறிவு, நவீன், திராவிடமணி, பிரபஞ்சன், சங்கமித்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அழகபெருமாள் குப்பம்

17.9.2018 அன்று அழகபெருமாள் குப்பம் கிராமத்தில் பாண்டியன் (எ) சீத்தாராமன் தலைமையில் தந்தை பெரி யாரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப் பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் வெண் ணிலா, அக்னி பெரியார், அய்யா நாத்திகன், அண்ணா சாக்ரடீஸ், சபாபதி, ஆறுமுகம், ரவீந்திரன், கலியன், அருண்துரை, கஜேந்திரன், மாயவன், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயக்குடி

தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு பழனி ஒன்றியம் ஆயக்குடியில் கழகக்கொடி ஏற்றி, தந்தை பெரியார் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

பெரியார் பட ஊர்வலம்

காலை 8.30 மணிக்கு ஆயக்குடி பெரியார் படிப்பகத் திற்கு அருகில் உள்ள கழகக்கொடி கம்பத்தில் கழக கொடி ஏற்றப்பட்டது. காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர் பொ.பெ.இரணியன் தலைமையில் தந்தை பெரியார் பட ஊர்வலம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பா.நா.நல்லதம்பி, திமுக பழனி நகர செயலாளர் தமிழ்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் பொதினி வளவன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் தோழர் கமலகண்ணன், இ.தே.காங்கிரசு மாவட்ட செயலாளர் வ.த.சுந்தரம், மதிமுக பழனி ஒன்றிய செயலாளர் கா.செல்வம், தமிழ் மாநில காங்கிரசு நகர தலைவர் சுந்தர், தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் கரு.அரணியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

பழனி

பழனி பேருந்து நிலையத்திருந்து தந்தை பெரியார் படஊர்வலம் புறப்பட்டது. சிறப்பாக ஒருங்கிணைக் கப்பட்ட ஊர்வலத்தை பொது மக்கள் பாராட்டினர். வழிநெடுகிலும் தந்தை பெரியாரின் தத்துவங்களை விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கங்களிட்டே சென்றனர். இதுவல்லவா ஊர்வலம் என்று அனைவரும் பாராட்டினர்.

தந்தை பெரியார் பட ஊர்வலம் பழனி ஆர்.எப். ரோட்டிலுள்ள தந்தை பெரியார் சிலையில் முடிவ டைந்தது. பிறகு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சியில் முதலில் பழனி பெண்கள் அரசு பள்ளி ஆசிரியர் நந்திவர்மன் அவர்கள் மாலை அணிவித்தார். திமுக நகர செயலாளர் தமிழ்மணி தலைமையில் கட்சி தொண்டர்களுடன் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் பொதினி வளவன் தலைமையில் கட்சி தொண்டர்களுடன் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மதி முக பழனி ஒன்றிய செயலாளர் கா.செல்வம் தலைமை யில் கட்சி பொறுப்பாளர்களும், தமிழ் மாநில காங்கிரஸ் பழனி நகர தலைவர் சுந்தர் தலைமையிலும், இ.தே.காங்கிரஸ் மாவட்ட செயலாளர் வ.த.சுந்தரம் தலைமை யிலும், தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் கரு.இரணி யன் தலைமையிலும், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் ஒவ்வொரு குழு வாக கட்சி தொண்டர்களுடன் வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இறுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கழக தோழர்கள் புடைசூழ பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்ட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் பழனி நகர துணைச் செயலாளர் மு.செந்தில்குமார் அவர்களின் இணையர் ராசாத்தி அவர்கள் லட்டு மற்றும் பலகாரம் கொடுத்தார். முதல் நிகழ்ச்சியிலேயே அனைவருடைய பாராட்டையும் பெற்றார். பழனி நகரம் 9ஆவது வார்டு திமுக செயலாளர் ச.பற்குணம் அவர்கள் தந்தை பெரியார் சிலையை சுற்றிலும் அலங்கார மின்விளக்கு அமைத்து கொடுத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் விருந்து கொடுக்கப்பட்டது.

கலந்து கொண்டோர்

மாவட்ட தலைவர் பொ.பெ.இரணியன், மாவட்ட செயலாளர் பா.நா.நல்லதம்பி, ப.க. மாவட்ட தலைவர் ச.திராவிடச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் சி.இராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ச.அங்கப்பன், மாவட்ட துணை செயலாளர் ஜே.ஜோசப், பழனி நகர தலைவர் சு.அழகர்சாமி, மண்டல மாணவர் கழக செயலாளர் பொன்.அருண்குமார், மண்டல இளை ஞரணி செயலாளர் குண.அறிவழகன், மாவட்ட மகளி ரணி தலைவர் சி.அமலிசுந்தரி, பழனி நகர செயலாளர் பெரு.இராவணன், நகர துணை செயலாளர் மு.செந்தில்குமார், பழனி ஒன்றிய செயலாளர் தே.பெரியார் சுரேசு, பழனி ஒன்றிய செயலாளர் ச.பாலசுப்பிரமணி, பா.பாலன், ஆ.பாலன், கா.நாகராசு, மு.கன்னிமுத்து, முனியப்பன், ஓவியர் மாரிமுத்து, தஞ்சாவூர் தங்கராசு, மு.இரகுமான், மு.நாகராசு, செ.இராசாத்தி, கன்னியா குமரி மாவட்டம் நல்லூர் பெரியார் பெருந்தொண்டர் எம்.எம்.எஸ்.என்ற சுப்பிரமணியன் ஆகியோரும் திமுக தொண்டர்களும், வி.சி.க தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner