எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, நவ. 6 புதுச்சேரி சிந்தனையாளர் இயக்கம் சார்பில் 30.10.2018 அன்று மாலை 5 மணியளவில் நீடா ராஜப்பா வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் திரைத்துறையில் பார்ப்பனிய புரட்டை தோலுரித்த சுயமரியாதை சுடரொளிகள் திரைத்துறையும், பார்ப்பனப் புரட்டும்'' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

பெரியார் சிந்தனையாளர் இயக்க செயலாளர் ப.சந்திரன் தலைமை தாங்கிட செய்தி தொடர்பாளர் தோழர் பரத் வரவேற்புரையாற்றினார். பா.செல் வம், இரா.சிவக்குமார், இரா.தூயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படத்தை தோழியர் சு.ஆனந்தியும், நடிகவேள் எம்.ஆர்.இராதா படத்தை தோழியர் தூ.மதிவதனியும், பட்டுக்கோட்டை கல் யாணசுந்தரம் படத்தை மா.சா.பிரியாவும் அனைவரின் கைதட்டலுக்கிடையே திறந்து வைத்தனர். கருத்தரங்கில் கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் பிஞ்சு திராவிட மில்லர் கூறினார். தந்தை பெரியார் பற்றிய பாடல்களை கவிஞர் விஜய லட்சுமி இராமலிங்கமும், தோழர் துரை சிவமணியும் பாடினர்.

கருத்தரங்கில் பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், கடலூர் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் இர.குழந்தை வேலனார், வடலூர் புலவர் இராவணன், கரு. சி.திராவிடச் செல்வன் மற்றும் புதுச்சேரி திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, மனித நேயமக்கள் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது, பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை தலைவர் பா.செ.சக்திவேல், புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பி.பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா (எ) தீனதயாளன், மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தின் நிறுவனர் - அமைப்பாளர் தோழர் இரா.மங்கையர்செல்வம், புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவர் தெ.சாந்தகுமார் ஆகியோர் கருத்துரைக்குப் பின் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வழக்குரைஞர் முனைவர் துரை சந்திர சேகரன் அவர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.இராதா ஆகியோரின் சிறப்புகளை நகைச்சுவையாக பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்கூறி மிகச்சிறப்பாக பேருரை யாற்றினார். தீனா ஒருங்கிணைப்பு செய்தார். பெரியார் சிந்தனையாளர் இயக்க தோழர் ச.லாரன்ஸ் நன்றி கூறி னார். செகா கலைக்கூடம் பார்வையாளர் களால் நிரம்பி வழிந்தது குறிப்பிடத் தக்கது.

கருத்தரங்கில் புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் பா.குமரன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் வீர.இளங் கோவன், செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல் வன், மூலைக்குளம் இரா.சாம்பசிவம், புதுச்சேரி ஜெயஒலி ரங்கச்சாமி, எத்து வால், கவிஞர் புதுவை சீனு.தமிழ் நெஞ்சன், முன்னாள் புதுவை அரசின் செயலாளர் நன்னிலம் எஸ்.தட்சிணா மூர்த்தி, களஞ்சியம் வெங்கடேசன், முகமது நிஜாம், பாகூர் பாலமுருகன், புதுவை சிவ.இளங்கோ, கவிஞர் பைரவி, புதுச்சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், அமைப்பாளர் மு.குப்பு சாமி, வாணரப்பேட்டை பெ.ஆதி நாராயணன், அரியாங்குப்பம் கொம்யூன் கழகத் தலைவர் இரா.ஆதிநாராயணன், இருசாம்பாளையம் செ.இளங்கோவன், தன்னுரிமை இயக்க தலைவர் தூ.சடகோபன், எழுத்தாளர் அரிமா பாமகன், பாகூர் பாலமுருகன், புதுச்சேரி கழக பொதுக்குழு உறுப்பினர் டிஜிட்டல் லோ.பழனி மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner