எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொத்தமங்கம், நவ. 6 கொத்த மங்கலத்தில் பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் திராவிடர் கழக பொதுக்கூட்டம் 17.10.2018 அன்று மாலை 6 மணிக்கு சீரணி அரங்கத்தில் கொத்தமங்கலம் கழகத் தலைவர்  லெ.இராசுக் குமார் தலைமையில் நடை பெற்றது. கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்பான உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், இந்தப் பகுதி திராவிடக் கொள் கையிலும், மார்க்சின் தத்துவத்திலும் புரிந்தவர்களாவார்கள்.

தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்பும் இல்லையெனில் நம் மக்களுக்கு கல்வியோ அரசு வேலைவாய்ப்போ கிடைத்திருக் காது. ஜாதி ஒழிந்து மனிதநேயம் மலர்ந்திருக்காது. தடை உத்தரவும் வீதியில் நடத்தும் வாய்ப்பும் கிடைத்திருக்காது. அவரின் உழைப்பு போராட்டம் சிறை செல்வது தன்னை வருத்திக் கொண்டு நாம் வாழ வழிவகுத்தார் என அய்யா பெரியாரின் தொண்டுகளை எடுத்துரைத்தார்.

கழகப் பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன் மற்றும் புதுகை மண்டல தலைவர் பெ.இராவ ணன், மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளை ஞரணி தலைவர் க.வீரையா, மாநில இளைஞரணி துணைத் தலைவர் இரா.குமார் வரவேற் புரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் க.முத்து, அறந்தை ஒன்றியத் தலைவர் த.சவுந்தர்ராசன், ப.க. அமைப்பாளர் வீ.டார்வின் மற் றும் பலர் உரையாற்றினார்கள். கொத்தமங்கலம் கழக துணைத் தலைவர் ம.க.கார்மேகன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner