எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், மார்ச் 13 அன்னை மணியம் மையார் நூற்றாண்டு விழா 8.3.2019 அன்று மாலை குடியேற்றம் ஓவீஸ் வளா கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்  ந,தேன்மொழி தலைமை ஏற்க மகளிர் பாசறை அமைப்பாளர் அனிதாதாரணி வரவேற்பும் தொகுப்புரையும் வழங்கினார்.மகளிரணி மாவட்ட அமைப்பாளர் ச.கலைவாணி  நூற்றாண்டு காணும் அன்னை மணியம்மையார் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.  பின்னர் பேசிய மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி அன்னை மணியம்மையார் அவர்களின் போற்றுதலுக்குரிய செயல்களைப் பற்றி எடுத்து உரைத்தார்.

மண்டல தலைவர் சடகோபன் அவர்கள் பெண்கள் மணியம்மையார் பற்றி அறிந்து கொள்ளவேண்டிய அவசி யத்தை கூறினார். பின்னர் பேசிய மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் பெண்ணுரிமை குறித்தும் கழகம் பெண் களுக்கு செய்த சிறப்புகள் குறித்தும் பேசினார். இறுதியாக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அந்த அரங்கில் இருந்த பெண்ணுரிமை போராளி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தன் கருத்தை வழங்கினார்.மணியம்மையார் சிந்தனைக் களம் சார்ந்த அனைவரும் மாநாட்டில் பங்கு பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பின்னர் மகளிரணி மகளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் நூற் றாண்டு துவக்க விழா மாநாட்டிற்கு ரூபாய் பத்தாயிரம், சாந்தகுமார் விமலா குடும்பத்தின் சார்பில் ரூபாய் 5000. தேன்மொழி அன்பரசன் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 5000. மின்வாரிய ஊழியர்கள் சார்பில் ரூபாய் 3100. அனிதா ரூபாய் 100. மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் நகர பாசறை தலைவர் லதா, நகர பாசறை செயலாளர் உஷா நந்தினி, விடுதலை வாசகர் வட்ட தலை வர் ரவிகுமார் மணியம்மையார் சிந்த னைக் களம் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner