எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 5- ஆஸ்துமா பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் அச்சங்களை களைந்தெறிவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் வரம்புகள் இல்லாமல் வாழ்க்கையை முழு மையாக வாழ்வதற்கு அவர்களை ஊக்குவிப் பதற்கும் சென்னையில் நேற்று (4.9.2018) #பெரோக்ஜிந்தகி - என்ற ஒரு பல் -ஊடக விழிப் புணர்வு பிரசாரம் தொடங்கப் பட்டது.

இந்த நோயை எதிர்த்து சமாளிப்பதற்கு மூச்சிழுத்தல் சிகிச்சை முறையே சிறந்த தேர்வு என்பதை நாங்கள் நிலைநாட்டு வதற்கு முற்படும் அதே சமயத் தில், ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் மற்றும் உடல் நலகாப்பு வழங்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தேவையான தகவல் மற்றும் ஆதாரங்களையும் இந்த பல் ஊடக முனைப்பு வழங்கும் என சிப்லா மருந்து நிறுவனத்தின் துணைத் தலைவர் நித்யா சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டாக்டர். மேத்தா சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டல் & சைல்டு கேர் சென்டரின் குழந் தைகள் நலவியல் ஆலோசகர் டாக்டர் ஏ.பாலசந்தர் கூறுகையில், “சென்னையில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது என் பது உண்மையாகும். நோயாளிக ளின் கல்வி, வருமுன் காத்தல், மேலாண்மை மற்றும் சிகிச்சை யளித்தல் வகையில் நாம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

எனவே, கூடிய விரைவில் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண் டியது மற்றும் அதை கையாள் வதற்கு சரியான மற்றும் மிகவும் சிறந்த வழி குறித்து விழிப்புணர்வு பரப்புவதும் கட்டாயமாகியுள் ளது. சரியான சிகிச்சையை கொஞ்சம் பின்பற்றுவது அல்லது அறவே பின்பற்றாமலிருப்பது சென்னையில் உள்ள குழந்தை களிடையே பரவலாக காணப் படும் பிரச்சனையாகும் என்பது பரவலாக ஏற்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner